தொடர்கள்
பொது
ரூட்டை மாத்து தல... 

கொரோனா காலம் ஒரு படிப்பினை. சுனாமி போல் திடீரென வந்த இந்த அலையில் சிக்கி மடிந்தவர்களும் உண்டு, அடிபட்டு நொந்து போய் கரையில் சுருண்டு கிடப்பவர்களும் உண்டு. சுதாரித்து... ஒரு படகினை செய்து, அதன்மேல் சவாரிசெய்து அதனை கடந்தவர்களும் உண்டு. அது உயிர் விஷயமாக இருந்தாலும் சரி, பொருளாதார ரீதியாக, வியாபார சமாச்சாரமானாலும் சரி. மீண்டவர்களும், ஜெயித்தவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான். அப்படி ஜெயித்தவர் தான் திரு.பாலு.

20210517003856418.jpeg20210517003924215.jpeg
முதுகலை பட்டம் படித்து, சொந்தக்காலில் தனக்கு ஆர்வமுள்ள ஒரு துறையை தொழிலாக தேர்ந்தெடுத்து, அதில் வெற்றி பெற நினைத்தவர் பாலு. 2019 இறுதியில் தன் முயற்சியில் மிகவும் கஷ்ட்டப்பட்டு முதலீடுகளை சேர்த்து, சுமார் இருபத்தி இரண்டு லட்சம் [22,00,000] செலவில் ஒரு முயற்சியை தொடங்கினார். எப்போதும் ஜே ஜே என இருக்கும் OMR சாலையில், சோழிங்கநல்லூர் அருகில் சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி எதிரில் சரியான ஒரு இடத்தை தேர்தெடுத்து, அங்குள்ள மாணவர்கள் மற்றும் பல இடங்களில் இருந்து சென்னையில் குடிபெயர்ந்திருக்கும் ஐடி கம்பெனியில் பணிபுரியும் மக்களை நம்பி ஒரு கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி திடலை தொடங்கினார்.
20210517004045268.jpeg20210517004121642.jpeg

விளையாட்டு திடலுக்கு 22 லட்சம் செலவா என்று நீங்கள் எண்ணலாம்? இது குளீரூட்டப்பட்ட செயற்கை புல் தரையைக்கொண்ட பல நவீன வசதிகளுடன் கூடிய உள் விளையாட்டு பயிற்சி மையம். இவர் தேர்ந்தெடுத்த தொழிலும் சரியானது, இடமும் மிகச்சரியானது. அவருக்கு நன்கு தெரிந்த, பிடித்த தொழிலும் கூட. ஆனாலும் விதி நம் எல்லோர் மேலும் விழுந்த இடி, அவர்மேலும் விழுந்தது.

20210517004155141.jpeg
20210517004228814.jpeg
ஆரம்பித்த மூன்றே மாதத்தில் ஊரடங்கு வந்தது, விளையாட்டு அரங்குகள் மூடப்பட்டன, கல்லூரிகள் மூடப்பட்டன. வெளியுயூரிலிருந்து வந்த மக்கள், திரும்பி தங்கள் ஊர்களுக்கே சென்றார்கள். அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்தனர். இவருடைய தொழில் முற்றிலும் முடங்கியது. இன்னும் சொல்ல போனால், அவர் எதிர்பார்த்த நிலை திரும்ப குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகலாம். பரபரப்பான அந்த ஐடி காரிடார் மீண்டும் எப்போது பரபரப்பாகும் என்று தெரியாமல் போனது.

20210517004302685.jpeg

20210517004332339.jpeg
நண்பர்களோடு கூடி விளையாட இனி ஒரு கூட்டம் வருமா என்ற நிலை உருவானது. ஆம் வாரம் தோறும், வெள்ளி மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போட்டி போட்டுகொண்டு, அந்த இடத்தை பதிவு செய்து விளையாடியும், போட்டிகள் நடத்தியும் குதூகலமான அந்த இடம் வெறிச்சோடியது.
ஒரு சாதாரண அரசு அதிகாரியின் மகன் வாழக்கையில் வெற்றிபெற அந்த முதலீடு பணத்தை சேகரிக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பார். முதுகலை பட்டப்படிப்பு முடித்த பாலு நினைத்திருந்தால், ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு போயிருக்கலாம். ஆனால் தன் கனவு வாழ்க்கையை அடைய அதனை தேடி புறப்பட்டார். ஆயிரம் கோடிகளில் வியாபாரம் செய்யும் முதலைகளே கொரோனாவில் சிக்கி, விக்கி நிற்கும்போது ஆரம்பித்து சில மாதங்களிலேயே தடை ஏற்பட, பாலு கொஞ்சம் தடுமாறினார். குதிரையைப்போல் சட்டென எழுந்தார். வாலி வைர வரிகளில் கூறியது போல்... நதிபோல ஓடிக்கொண்டிருந்தால் எத்தனை தடைகள் வந்தாலும், நமது வேர்வைகள் வெற்றிக்கு வேர்விக்கும் என்று நம்பினார்.
20210517004512865.jpeg
பெரும்பாலான முதலீடு அந்த இடத்திற்கு தான், அதனை சும்மா பூட்டிவைத்து வாடகை கொடுத்துக் கொண்டிருப்பதை விட, அதனை வேறுவிதமாக மாற்றினால் என்ன என்று யோசித்தவர், தனது மற்றொரு ஆர்வமான நாய்கள் வளர்க்கும் தொழிலை அங்கே நடத்த முடிவெடுத்தார்.
20210517004536630.jpeg
பள்ளியில் நான்காவது வகுப்பு படிக்கும்பொழுது, தெருவில் இருக்கும் ஒரு நாய்க்குட்டியை வீட்டிற்கு தூக்கி வந்து பராமரிக்க தொடங்கியவர், இன்று பல நூறு நாய்களை பராமரிக்கிறார். ஆம் விளாயாட்டைப் போலவே செல்லப் பிராணிகளிடத்திலும் மிகுந்த அன்பையும், ஆர்வத்தையும் கொண்டிருந்தவர், அதனை பராமரிப்பதிலும் கில்லாடியானார்.
இந்திய அரங்கில் மிக சிறந்த நாய்களுக்கான போட்டிகளில் பல முறை இவர் பயிற்சயளித்த நாய்கள் வென்றுள்ளன. அந்த நாய்கள் அனைத்தும், திரு, விஜயகாந்த அவர்களின் செல்லப்பிராணிகள். ஆம் விஜயகாந்தின் மகன், விஜய பிரபாகரன் தான் இந்திய அரங்கில் நாய்களுக்கான போட்டிகளில் வென்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். அவருடைய நாய்களை முழுநேர தொழிலாக இல்லாமல், பகுதி நேரமாக பயிற்சயளித்து கொண்டிருந்தவர், தன் முழு கவனத்தையும் இப்போது அதில் செலுத்தினார்.
இவருடைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், ஏன் ஒரே காரணம்... திரு. விஜய பிரபாகரன் தான் என பெருமையாகக் கூறுகிறார்.
20210517004633771.jpeg
கொரோனா காலத்தில் வீட்டிலேயே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு பைத்தியம் பிடிப்பதைப்போல் அடைந்துகிடந்த மக்களின் கவனம் அனைத்தும் செல்லப் பிராணிகள் வளர்ப்பது மேல் திரும்பியது. முதன் முதலாக செல்ல பிராணிகள் வாங்கியோரின் எண்ணிக்கை அதிகரித்தது. மீன்கள் தொடங்கி, முயல், பறவை, நாய், பூனை என தங்களுக்கு பிடித்த செல்லப்பிராணிகளை மக்கள் வாங்கி, தங்கள் மன உளைச்சலுக்கு வடிகால் தேடிக்கொண்டனர்.
அந்த வகையில் நாயை செல்லப் பிராணிகளாக வளர்க்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. ருபாய் 3000 தொடங்கி 3,00,000 வரை நாய்கள், இவருடைய டாக்ஸ் கிங்கிடோம் [Dogs Kingdom] என்னும் சரணாலயத்தில் கிடைக்கிறது. நாய்கள் விற்பது மட்டுமில்லாமல்... அதற்கு பயிற்சிஅளிப்பது, வெளிஊருக்கு செல்பவர்கள் தங்கள் நாய்களை பத்திரமாக விட்டு செல்ல ஏசி மற்றும் ஏசி அல்லாத காப்பகங்கள். ஆம்... சில நாய்கள் ஏசி இருந்தால் தான் சமத்தாக இருக்குமாம். நாய்களுக்கான பிரத்யேக நீச்சல் குளம், நாய்களை போட்டிகளுக்கு தயார் படுத்துதல், நாய்களுக்காக ஒரு ஸ்பா.... அதாவது.. அதனை குளிப்பாட்டி, அழகுபடுத்துதல் போன்ற பல சேவைகளை சேர்த்து, தன் கிரிகெட் மைதானத்தை செல்லப்பிராணிகளின் சங்கமமாக மாற்றிவிட்டார்.

சொல்லப்போனால்... பாலு அவர் பராமரிக்கும் பிராணிகளை போலவே இப்போது படு குஷியாக இருக்கிறார். மனிதர்கள் 300, 500, 1000 என்று கொடுத்து விளையாடிக் கொண்டிருந்த இடத்தில், தற்போது இந்த செல்லப்பிராணிகள் பலமடங்கு அதிகம் கொடுத்து விளையாடுகின்றன. ஆம். ஒரு சில நாய்களை, தவிர மற்றவைகள் அனைத்தும் ருபாய் 20,000-க்கும் மேல் தான். அதே போல், பிராணிகளுக்கான உணவு, நொறுக்கு தீனி மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என அனைத்தும் இவரிடம் கிடைக்கிறது. எப்படி இருக்கிறது இந்தப் புது தொழில் என்று கேட்டோம்... செம்மயா ஓடுது என்றார்.
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
தனக்கு பொருந்தும் செயலையும் அதற்கு அறியவேண்டியதையும் அறிந்து, அதனிடம் நிலைத்து முயல்கின்றவற்கு முடியாதது எதுவும் கிடையாது. வெற்றிக்கு ஆயிரம் வழிகள் இருக்கலாம். நம் இயல்புக்குப் பொருந்துகிற வழியைத் தேர்ந்தெடுத்து, அதற்கு அறியவேண்டிய அனைத்தையும் அறிந்து அந்த வழியில் விடா முயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்.
திரு. என். கணேசன் அவர்கள் எழுதிய இந்த விளக்கத்தை போலவே திரு பாலுவும் குறளின் விளக்கமாக திகழ்கிறார்.