தொடர்கள்
மக்கள் கருத்து
மக்கள் கருத்து.. - தில்லைக்கரசி சம்பத்

20210518144543999.jpeg

கொரோனா மூன்றாம் அலை வரும் என்கிறார்களே..! நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?

கோமதி சந்திரன், திருவாரூர்.

கொரோனா கூட்டுக் குடும்பமா வாழுது. அதுதான் ஒன்னுக்கு பின்னாடி ஒன்னா வந்துட்டே இருக்கு. இதுக்கு நாம என்ன செய்றது? எப்பவும் போல மாஸ்க்கு, கையில சோப்புன்னு இருக்க வேண்டியதுதான்.


C.பூஜா - கல்லூரி மாணவி, நுங்கம்பாக்கம்.

இரண்டாம் அலை வந்தபோது என் தந்தையை இழந்தேன். என் தாய் எப்படியோ உயிர் பிழைத்தார்கள். இப்போது 3ஆம் அலை வரp போகிறது. அதனால் நானும் அம்மாவும் தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டோம். 3 வது அலை வருவதற்கு முன் இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும்.


ச.முத்துராம், திருச்சி.

கொரோனாவுக்கு , குடும்பகட்டுப்பாடு செய்யவேண்டும். இப்படி புதுசு புதுசா பெத்து போடுது..


M.ஷண்முகம், தாம்பரம்.

அலைகள் ஓய்வதில்லை….!!


ப.விசாலாட்சி, பல்லாவரம்.

சும்மா மூன்றாம் அலை.. நான்காம் அலைன்னு... டிவி சீரியல் மாதிரி இழுத்துட்டு சுத்தாதீங்க.. வெறுப்பா இருக்கு.


இரா.மனோகரன், நாகை.

“மார்க்கெட்டின் அருகில் கூடிய கூட்டங்கள் தலையா? கடலலையா..?

குழந்தைகள், பெரியவர் அனைவரையும் பாதிக்கும் கொரோனா மூனாவது அலையா??!” என பாடி வரவேற்க வேண்டியதுதான்.

வேறென்ன செய்ய முடியும்..?


V.தணிகாசலம், காட்டுமன்னார்கோயில்.

சாவு எப்படியும் வரும்...

கொரோனா மட்டும் தான் நம்மள சாவடிக்குதா..??!! இருந்தாலும் கொஞ்சம் பயமாதான் இருக்கு.


T.அருள்மணி, தாம்பரம்.

என்னாங்கடா!? பேய்ப்படம் காஞ்சனா முதல் பாகம், காஞ்சனா இரண்டாவது பாகம் மாதிரி இரண்டாம் அலை மூணாம் அலைன்னு கொண்டு வந்து இறக்குறீங்க??!!


ம.கேசவமூர்த்தி, வண்டலூர்.

அட சும்மா இரும்மா! ரெண்டாவதையே நாங்க இன்னும் தாண்டல..


அ.வினோத் குமார், பூம்புகார்.

சைனாக்காரன், இலங்கை ஹம்மன் தட்டா துறைமுகத்துல காலனி கட்டி தமிழ்நாட்டுக்கு நெருக்கமா வந்து நிரந்தரமா உட்காந்துட்டான். இந்த சப்பை மூக்குகாரன் கண்டதை தின்னு, இனி கொரோனா 4வது, 5 வது அலை மட்டுமில்ல.. புதுபுது வைரஸ் எல்லாம் வர வைக்க போறான்.


அஸ்வினி கலைராஜன், வண்டலூர்.

இப்படியே பயத்தை காட்டி, காட்டி வருடக்கணக்கில் கூடிவாழ்ந்த சொந்தபந்தங்களை கடைசி நேரத்தில் தொட்டு அழக்கூட விடாம பண்ணிட்டாங்க. இந்த கொரோனாவால் நாடும், வீடும் நாசமா போனது தான் மிச்சம்.


வா.சுப்பிரமணியம், நங்கநல்லூர்.

இந்த வைரஸ் பூமியில் இனி அதிக நாட்கள் இருக்காது, மூணாவது அலையோடு முடிவுக்கு வந்துவிடும். மீண்டும் உலகம் பழைய நிலைமைக்கு மாறும். மக்கள் நிம்மதியாக வாழும் நாட்கள் கூடிய விரைவில் வரும்.


சி.செல்வம், நல்லம்பாக்கம்.

இந்தத் தொற்று நோயை கொண்டு வந்த சீனாவிற்கு என்ன தண்டனை..? முதலில் உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து ஒரு முடிவை எடுங்கள்.. பொது மக்களைக் காக்கும் எண்ணம் எந்த நாட்டிற்கும் இல்லையா..? மானங்கெட்ட உலக நாடுகளே..!!