
தனது திறன்பேசியை மின்னேற்றம் செய்தபடியே ‘கும்முரு டுப்புரு கும்முரு டுப்புரு… காந்த கண்ணழகி’ என்கிற பாடலை முணுமுணுத்தபடி இடுப்பை வேகமாக ஆட்டினார் மாயகிருஷ்ணன்.
மாயகிருஷ்ணன் ரயில்வேயில் டீசல் என்ஜின் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். வயது67. வெளியில் எங்கு போகவேண்டும் என்றாலும், ஸ்போர்ட்ஸ் பைக்கில் தான் போவார். எப்போதுமே டிசர்ட் பேகிஸ் டவுசரில்தான் உலாத்துவார். இடது அக்குளில் பாக் டியோடரன்ட்டும் வலது அக்குளில் ரெக்ஸோனா டியோடரன்ட்டும் பீய்ச்சிக் கொள்வார். பேகிஸ் டவுசரில் இரு பாக்கட்களில் இரு கைபேசிகள் வைத்திருப்பார். ஒன்று திறன்பேசி இன்னொன்று சாதாரண பிஎஸ்என்எல் சிம் உள்ள கைபேசி.
திறன்பேசியில் ஒருநாளைக்கு எட்டு மணி நேரம் சன்னிலியோன் மியாகலிபா நடித்த நீலப்படங்களை பார்ப்பார். பேசும்போது சர்வசாதாரணமாய் பிளேபாய் ஜோக்குகளும், இரட்டை அர்த்தவசனங்களும் உதிர்ப்பார். பெண்களின் முன்பக்கம் பின்பக்கம் பார்த்துவிட்டு பட்டப்பெயர் சூட்டுவார். தினம்... காலையிலும், மாலையிலும் பெண்கள் கல்லூரிகளின் வாசல்களுக்கு சென்று சைட் அடிப்பார். ரஜினிகாந்த்தை விட ஸ்டைலாக சிகரட் பிடிப்பார். வாரா வாரம் சனி இரவு நண்பர் குழாமுடன் சேர்ந்து உற்சாகபான கச்சேரி நடத்துவார். முகநூலில் 5000 நண்பர்கள் வைத்திருந்தார். ட்விட்டரிலும் இன்ஸ்டரகிராமிலும் கூட இயங்கினார். வாரா வாரம் ஞாயிற்றுகிழமை செல்ப்சேவிங் செய்துவிட்டு, தலைக்கும் மீசைக்கும் டை அடித்து கொள்வார். எல்லா புது படங்களையும் தமிழ் ராக்கர்ஸிலிருந்து டவுன்லோடு செய்து பார்த்திடுவார். தியேட்டரில் பார்க்க விரும்பும் படங்களை வெள்ளிக் கிழமைகளில் போய் பார்ப்பார்.
பேரனுடன் படிப்பவர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்தனர். தமிழின் எல்லா கெட்ட வார்த்தைகளும் அவருக்கு அத்துப்படி. சூப்பராக விசிலடிப்பார். செல்பி பிரியர்.
மனைவி கௌரிமனோகரி பத்து வருடங்களுக்கு முன் இறந்துவிட்டாள். மகள் சுமலதா இல்லத்தரசி. மருமகன் ரயில்வேயில் டிடிஆராக பணிபுரிகிறார். பேரன் வினய் விஸ்காம் படிக்கிறான். பேத்தி காவ்யா ப்ளஸ் டூ படிக்கிறாள்.
“தாத்தா! உங்க ஸெல் சார்ஜ் ஏறிடுச்சுன்னா எடுங்க. நான் என் ஸெல்லுக்கு சார்ஜ் ஏத்தனும்…”
“தாத்தான்னு கூப்பிடாதே எத்னி தடவை சொல்லிருக்கேன் ‘மாயா’ ன்னு கூப்பிடுடா…”
“இந்த வீட்ல நீங்க யூத்தா நான் யூத்தான்னு தெரியல… ரகளை பண்றீங்க… நல்லவேளை உங்க டோலிகள் யாரையும் இன்னும் நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரல…”
“பாட்டி இறந்தவுடனே நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிரேன்னு அடம் பிடிச்சேன். நீங்க யாரும் ஒத்துக்கல… பச்சைத்துரோகிகள் நீங்கள்!”
“இன்னைக்கி உங்க ப்ரோக்ராம் என்ன மாயா?”
“காலைல ஸ்டெல்லாமேரிஸ் காலேஜ் போய் சைட் அடிக்கிறது. அதுக்கப்புறம் நான் தொடங்கின ராகுல்ப்ரீத் சிங் தலைமை மன்றத்துக்கு போய் நிர்வாகிகளை சந்திப்பேன். மதியம் கேஎப்சி சிக்கன் சாப்பிடுவேன். சத்தியம் தியேட்டர்ல ஒரு மணி ஷோ பார்ப்பேன். சாயங்காலம் எதாவது ஒரு லேடீஸ் காலேஜ் போய் சைட் அடிப்பேன். இரவு எங்க வாட்ஸ் அப் குரூப் நண்பர்களை சந்திப்பேன். இரவு பத்துமணிக்கு வீடு திரும்புவேன்!”
“ராகுல் ப்ரீத் சிங்கின் பக்தரா நீங்க? நயன்தாரா, தமன்னா, அனு சித்தாரால்லாம் உங்களுக்கு பிடிக்காதா?”
“நயன்தாரா, அனு சித்தாரால்லாம் ஆன்ட்டி ஆய்ட்டாங்கடா… எங்க ராகுல் ப்ரீத் நல்ல உயரம்… அவ சிரிச்சா ஒரு மாதத்துக்கு பாத்துக்கிட்டே இருக்கலாம்.!”
“இந்த வயசில இந்த ஆட்டம் போடுறீங்களே… உங்களுக்கு பிபி, சுகர் எதுமே இல்லையா?”
“எல்லாமே நார்மல்டா சின்ன பய்யா!”
“உங்க ஆட்டம் ஆண்டவனுக்கே பொறுக்காது மாயா!”
“நான் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டவன்!”
வீட்டு வாசலில் தரை தேய்த்தபடி ஒரு ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இன்ஸ்பெக்டரும் இரு கான்ஸ்டபிள்களும் இறங்கினர்.
இன்ஸ்பெக்டர் கையில் ஒரு மிகப்பெரிய லிஸ்ட் இருந்தது.
“மிஸ்டர் முருகானந்தம் வீடுதான இது?”
“ஆமா…!” குழறினான் வினய்.
“நாங்க பாஸ்போர்ட்டுக்கு எதுவும் அப்ளை பண்ணலியே… என்ன விஷயமா வந்திருக்கீங்க இன்ஸ்?” வினவினாள் சுமலதா.
“இந்த வீட்ல இருக்ற ஆம்பிளை ப்ளூபிலிம் நெட்ல பாக்றதா புகார் வந்திருக்கு!”
“அய்யய்யோ… நானில்லை!” என கை தூக்கினார் முருகானந்தம்.
“நானும் இல்லை!” என்றான் வினய்.
“காதல்மன்னன் என்கிற புனைபெயர்ல இந்த வீட்டு ஆண் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் நெட்ல நீலப்படம் பார்க்கிறாரு!”
எல்லாரின் கண்களும் மாயகிருஷ்ணனின் பக்கம் தாவின.
“கேவலமா இருக்கு தாத்தா!” என்றாள் பேத்தி காவ்யா.
“இந்த வீட்டு ஆண் இந்த வீட்டு ஆண்னு சொல்லாம பேரை சொல்லுங்க…!”
“மாயகிருஷ்ணன்தான் நீலப்படம் பார்க்கும் குற்றவாளி!”
தலையை குனிந்து திருட்டு பார்வை பார்த்தார் மாயகிருஷ்ணன்.
மாயகிருஷ்ணனின் டிசர்ட் காலரை கொத்தாக பற்றினார் இன்ஸ்பெக்டர்.
“காலரை விடுங்க இன்ஸ்பெக்டர்… நான் சிறுமிகள் நீலப்படம் பார்க்கல… சன்னி லியோன், மியா கலிபா, சரோன் ஸ்டோன் போன்றோரின் நீலப்படம் தான் பார்க்கிறேன். நீலப்படம் பார்ப்பது என் பிறப்புரிமை!”
“நேத்து நைட்டுதான் புதுசட்டம் போட்ருக்காங்க… எந்த நீலப்படம் பார்த்தாலும் தண்டனை உண்டுன்னு. சென்னைல நீலப்படம் பார்க்கிறவங்க மொத்தம் 12447பேர். அதில அதிகநேரம் பார்த்து முதலிடம் பிடிச்சிருக்கீங்க!”
“எவ்வளவு அய்நூறு ரூபா அபராதம் போடுவீங்களா… சொல்லுங்க… கட்டிடுரேன்…!”
“இல்லை உங்களுக்கு பத்து வருட கடும்காவல் தண்டனை கிடைக்கும்!”
“வயதான எனக்கு தண்டனைல சலுகை காட்ட மாட்டீங்களா?”
“காசிக்கு போற வயசில 2000 மணி நேரம் நெட்ல ப்ளூபிலிம் பாத்திருக்கீங்க. உங்களுக்கு கூடுதலா ரெண்டு வருஷம் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கு!”
“குறிப்பா உங்களை கைது பண்ண சொல்லி கமிஷனர்தான் அனுப்பினார். அவருக்கு லஞ்சம் குடுத்து பாருங்க!”
ஒரு கான்ஸ்டபிள் கைபேசி எடுத்து யாரையோ அழைத்தார். சிறிது நேரத்தில் ஒரு புகைப்பட கலைஞர் வந்து சேர்ந்தார்.
“மிஸ்டர் மாயகிருஷ்ணன் உங்க ஸ்மார்ட்போனை நோண்டிக்கிட்டு இருக்ற மாதிரி ஒரு போஸ் குடுங்க!”
“முடியாது!”
“இரண்டு கண்ணுலயும் விரல்களால் வட்டம் போட்டு காட்டுங்க!”
“சேச்சே… அதுக்கு வேற ஆளைபாரு!”
“சரி சாதாரணமா ஒரு நாலஞ்சு ஆங்கிள்கள்ல போட்டோ எடுத்துக்கிறேன்!”
கிளிக். கிளிக். கிளிக். கிளிக்.
“வினய் போய் ஒரு பெரிய துண்டை எடுத்திட்டுவாடா… மூஞ்சியை மூடிக்கிறேன்!”
“மூஞ்சியை மூட அனுமதிக்க மாட்டேன். உங்களை ஸ்டேஷனுக்கு ஊர்வலமா நடத்திக் கூட்டிட்டு போகப் போறேன்!”
“தெருஜனம் கூடுறதுக்கு முன்னாடி என்னை கூட்டிட்டு போங்க!”
“முடியாது… உங்கள கைது பண்ணின விஷயம் அடுத்த ஒரு மணிநேரத்ல எல்லா டிவிகளிலும் ஒளிபரப்பு ஆக போகுது… ஊரே நாடே சிரிக்கப் போகுது!”
“ஜாமீன் கேட்போம்!”
“இது ஜாமீன்ல வரமுடியாத குற்றம்… பெரியவரை எல்லாரும் ஜெயில்ல வந்து பாருங்க!” சொன்ன இன்ஸ்பெக்டர் எசகுபிசகாக சிரித்து விட்டார். ஒட்டு மீசை காற்றில் ஆடியது.
மாயகிருஷ்ணன் காகம் போல் ஒற்றைக்கண்ணால் பார்த்தார. “யாருடா நீ இன்ஸ்பெக்டர் வேஷத்ல வந்திருக்க?”
பாய்ந்து மீசையை உரித்து எடுத்தார்.
போலி இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிள்களுக்கும் பம்மினர்.
ஒரு கான்ஸ்டபிளை பார்த்து மாயகிருஷ்ணன் “டேய் நீ சிவமணிதான வினய் கூட படிக்றவன் தானே?”
“ஆமா தாத்தா… நாங்க நாலுபேரும் வினயின் கூட்டாளிகள். வினய்தான், சதா நீலப்படம் பார்க்கும் என் தாத்தாவுக்கு ஒரு பாடம் கற்பிக்கனும்னு சொன்னான்… நடிச்சோம்… ஒரு இருபது நிமிஷம் நிலை குலைஞ்சு போய் நின்னீங்கல்ல அதுவே எங்களுக்கு போதும்!”
“திருந்துங்க தாத்தா!”
எல்லாரையும் நெட்டி தள்ளினார் மாயகிருஷ்ணன். “சுதந்திரமா செயல்பட இந்த நாட்டுல அனுமதியே இல்லையே… எனக்கு இனி இந்த நாடு தேவையில்லை… நான் போகிறேன்!”
“எங்க போவீங்க?”
“என் தலைவன்கிட்ட போகப் போகிறேன்!”
“உங்க தலைவனா அது யாரு?”
“பகவான் ஸ்ரீடொபுக்கானந்த பரமசிவம்தான் என்தலைவன்… தென்அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் என் தலைவன் கைலாசா என்கிற தனிநாடு அமைத்திருக்கிறான். எல்லா பரிமாணங்களுக்கும், லோகங்களுக்கும் அந்த நாட்ல இலவச அனுமதி உண்டு. என் தலைவன் ஒரு புறம்போக்கு, நான் ஒரு புறம்போக்கு. அங்க போயிட்டா நீலப்படம் பாக்க வேண்டியதில்லை எல்லாத்தையும் நேரா அனுபவிச்சிடலாம்!”
“கைலாசாவுக்கு எப்படி போவீங்க?”
“வங்கில அறுபதுலட்சம் ரூபா சேமிச்சு வச்சிருக்கேன். இங்கிருந்து நேப்பாள் போவேன். நேப்பாளிலிருந்து தென்அமெரிக்கா பறப்பேன். அங்கிருந்து கப்பல்ல கைலாசா போவேன். இனி இந்தியாவுக்கு திரும்பி வர மாட்டேன்!”
“நீங்க கைலாசா போக முதல்ல விசா வாங்கனுமே…!”
“இதே இப்பவே மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கிறேன்!”
விண்ணப்பித்தார். வங்கியிலிருந்து பணம் முழுவதையும் எடுத்து தங்கம் வாங்கினார். இரு சூட்கேஸ்களில் தனது உடைமைகளை பதுக்கினார்.
வீட்டில் இருப்பவர்களை முகம் கொடுத்து பேசாமல் புறக்கணித்தார்.
- கைலாசாவிலிருந்து பதில் மின்னஞ்சல் வந்திருந்தது. ‘உங்களைப் போன்ற கிழங்களுக்கு குடிஉரிமை வழங்க முடியாது. எங்களுக்கு வேண்டியது திருமணமாகாத அழகான கன்னிப்பெண்களே. அப்படி யாராவது இருந்தால் அவர்களை விண்ணப்பிக்க சொல்லுங்கள். அவர்கள் பகவானின் சிஷ்யைகளாக வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் உங்கள் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. மீனாட்சி மீனாட்சி!’
மயங்கி விழுந்தார் மாயகிருஷ்ணன்.

Leave a comment
Upload