தொடர்கள்
கவிதை
வண்ணக் குயில்...! - சி. கோவேந்த ராஜா.

20210817100456795.jpeg

தடம் பார்த்து... பாதை ஓரம்
வந்து நின்றேன்....!

அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாத‌
அழகு தேவதை....!

ஆசையைத் தூண்டிச் சென்ற
அன்னக் கிளி...!

இவள் யாரென அறியத் துடிக்க வைக்கும்
இனியக் குயில்...!

ஈரைந்து கணமே... சாமரம் வீசிச் சென்ற‌
அழகு மயில்...!

உள்ளத்தைக் கொள்ளை கொண்ட‌
ஊர் கோயில் புறா...!

எந்தக் கூட்டிலோ...?!

ஏன் தேடுகிறேன்...?!

ஐயமாகவே... கணங்கள்
கழிகின்றன...!

ஒன்றும் விளங்கவில்லை...!

ஓடி அலைந்து துடிக்கிறது...
காதல் கொண்ட மனசு...!

ஔடதமாய்..எப்போது கிடைப்பாள்...?!
கௌவிக் கொள்ள வேண்டும்...!

தள்ளி நில்லுய்யா....
இடித்து விட்டு சென்றனர் சிலர்...!

வண்ணக் குயில் குறித்த
எண்ண அலைகள் சிதறிக் கலைந்தன...!!