தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20210816083632444.jpeg


காதல் பயணம்... – பா. அய்யாசாமி

விகடகவியின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலை முன்னிட்டு வெளியான தில்லைக்கரசி, ஆர்னிகா நாசர் மற்றும் பா.அய்யாசாமி ஆகிய 3 ஜாம்பவான்களின் கதைகளும் மிக அமர்க்களம்! அந்தக்கால ஆனந்த விகடனில் அன்றைய ஜாம்பவான்களின் கதைகளை படித்ததைப் போலிருந்தது! கண்ணுபடப் போகுதய்யா... திருஷ்டி சுத்தி போடும்!

பூர்ணிமா சிவகுமார், காரைக்கால்


சமைக்கத் தெரிந்தவன்... - ஆர்னிகா நாசர்

ஆர்னிகா நாசரின் சமைக்கத் தெரிந்தவன் சிறுகதை, தற்கால இளம்பெண்களின் அபரிமித அபிலாஷைகளுக்கு சரியான சவுக்கடி! ஒரு பெண் வேண்டாம் என ஒதுக்கிய மாப்பிள்ளையை, அந்த காரணங்களுக்காகவே ஏற்றுக்கொள்வது தனிச்சிறப்பு!

ஹேமா சுப்பிரமணியன், விழுப்புரம்


நவீனக் கால உறவுகள்... - தில்லைக்கரசிசம்பத்

சபாஷ்... சரியான நெத்தியடி கதை - தில்லைக்கரசியின் நவீனகால உறவுகள்! தற்போதைய நவநாகரீக பெண்களுக்கு நெருங்கிய உறவுகளின் அருமையே தெரிவதில்லை. ஏனெனில், அவர்களை பெற்றவர்கள் வளர்த்த விதம் அப்படி! அதான், பெண் பார்க்கும் படலத்தின்போதே 'திருமணமானதும் தனிக்குடித்தனம். உறவுனு சொல்லி யாரும் வீட்டுக்கு வரக்கூடாது' பெண்ணை பெற்றவர்களே கண்டிஷன் போடுகின்றனர். ஆனால், அவர்கள் மட்டும் சென்று வரலாம் என்பது ஆடி தள்ளுபடி ரகம்!

சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை


ஊட்டி மார்க்கெட் சீல்... நான் யாரையும் மீறவில்லை... - ஆணையாளர்..!

மற்ற பத்திரிகைகளை போல் விகடகவியும் இட்டுக்கட்டி எழுதியிருப்போம் என நினைத்திருப்பார். அல்லது, நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகளின் அர்த்தம் பெண் நகராட்சி ஆணையருக்கு புரிந்திருக்காது. முன்னமே அவர் தொலைபேசி எடுத்திருந்தால், இந்தளவு பிரச்னை வளர்ந்திருக்காது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போலிருக்கு!

ஈஸ்வரன், பரமேஸ்வரி, கோத்தநாடு


வாவ் வாட்ஸப்!

எல்லா படங்களுமே சூப்பரா இருக்கு! அதிலும் சூப்பர் சைக்கிள், இதுதான்டா தில், இது தேவையா ஆகியவை சிலிர்க்கவும் சிரிக்கவும் வைத்தது!

கௌஷிக், தீட்சிதா, சூர்யா, சென்னை


எப்படி இருக்கிறார் பாரதி பாஸ்கர்?? - ராம்

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

மீனா சந்திரசேகர், சைதாப்பேட்டை


விநாயகரை வரைவது தான் சுலபம்... - மீனா சிவராமன் - ஐயர்லாந்து.

கங்கிராட்ஸ் மீனா... அயர்லாந்தின் அம்பாசடராக 4 வரி கோடுகள் கொண்ட விநாயகர் மாற வாழ்த்துவோம்.

நிர்மலா கோதண்டராமர், பொள்ளாச்சி


திமுக பக்கம் சாய்கிறதா பா.ம.கா?! - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்...

திமுக ஏன் இப்படி அறிவிச்சதுதான் ஆச்சரியமா இருக்கு. சும்மா கெடந்த சங்கை ஊதி கெடுத்தா மாதிரி ஆயிடுச்சு! இனிமே அவங்களாலதான் திமுகவே ஜெயிச்சுதுனு கூவப்போறாங்க! 110 விதி யாரை விட்டது, யாரை பிடிச்சிக்குனு தெரியலையே!

ராமசாமி, ராமச்சந்திரன், வடலூர்


வெளிநாடுகளில் விநாயகர்... - ராம்

வெளிநாடுவாழ் பிள்ளையார் வித்தியாசமான முறையில் இருக்கிறார். அதுவும் விகடகவியின் விநாயகர்- விநாயகி ஸ்பெஷலுக்கு தோஸ்தாக மாறிவிட்டார்!

சுபத்ரா ராஜசேகர், பாண்டிச்சேரி


“மதமா…மனமா?” - வெ.சுப்பிரமணியன்

அருமையான கதை. இது, வயதானவர்களுக்கு ஏற்படும் ஒருவிதமான நெருடல். வெளியே யாரிடமும் சொல்லி அழமுடியாது. அதுவும் வாழ்க்கை துணை உடன் இல்லையென்றால், ஆண்களின் நிலை திண்டாட்டம் தான்!

ரோகிணி, ஷிவானி, கொல்கத்தா


பிள்ளையார்பட்டியில் பிள்ளையார் சதுர்த்தி!! - சுந்தர மைந்தன்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நடைபெறும் 10 நாள் உற்சவத்தை நேரலையில் பார்த்தது போலிருந்தது சுந்தர மைந்தனின் வர்ணனை!

கோபிநாத், சவுந்தரராஜன், சாலிகிராமம்


விநாயகர் எனக்கு கடவுள் இல்லை... நண்பன்! - மாலினி ஶ்ரீநிவாசன் ஹாங்காங்.

விநாயகருக்கு இவ்வளவு பெரிய ரசிகரும் ஓவியரும் இருக்காங்கன்னு தெரியாமப் போச்சே! முன்னமே தெரிஞ்சிருந்தா, ஒவ்வொரு ஆண்டும் விதவிதமான விநாயகரை வரைய சொல்லி, சிலை வாங்கின பணத்தை மிச்சப்படுத்தி இருக்கலாம்! அடுத்தவாட்டி எங்க ஊருக்கு வந்து, விநாயகரை பற்றி பாடிட்டு போங்க அம்மணி!

கலா கார்த்திக், மாளவிகா, நெல்லை


தில்லாலங்கடி சிறைபறவை “ சுகேஷ் சந்திரசேகர்”! - நமது சிறப்பு நிருபர்.

சிறைக்குள் இருந்தபடியே பலகோடி மோசடிகள் செய்யும் சுகேஷ் சந்திரசேகர், சகலகலா (ஏமாற்று) பேர்வழிதான்! ஆனால், என்ன... மத்தவங்களை ஏமாத்தி சம்பாதிச்சவங்களை தானே இவரு ஏமாத்தி வாங்குறாரு! ஒழுங்கா இருந்தா ஏன் கொடுக்கணும்? எப்படி இருந்தாலும் குற்றம் குற்றமே!

ரேணுகா ஹரி, வந்தவாசி


முக்குறுணி விநாயகருக்கு, 18 படி அரிசியில் பிரம்மாண்டமான கொழுக்கட்டை!! - ஆரூர் சுந்தரசேகர்.

முக்குறுணி விநாயகருக்கு 18 படியில் ஒரே கொழுக்கட்டை படைப்பது ஏன் என்பதை சுந்தரசேகர் மிக தத்ரூபயாக விளக்கினார். பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.

ஜமுனா பிரபாகரன், வடபழனி


விநாயகரின் அறுபடை வீடுகள்!! - மீனாசேகர்.

எக்சலண்ட்... விநாயகரின் அறுபடை வீடுகள் எங்கெல்லாம் உள்ளன என்பதை இன்று முழுமையாக படித்து அறிந்து கொண்டோம்.மீனா சேகரின் முயற்சி பாராட்டுக்கு உரியது.

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்


கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு... - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்...

கொடநாடு கொலை, கொள்ளை குறித்து போலீசாரின் அதிரடி விசாரணையை துரிதப்படுத்தி, உண்மை குற்றவாளிகளை தோலுரித்து காட்ட வேண்டும். அதை விடுத்து இதையும் நட்டாற்றில் விட்டுவிடக்கூடாது என்பதே!

குமரகுருபரன், பொள்ளாச்சி


விநாயகரை வணங்கி, தோஷங்கள் நீங்கப் பெறுவோம்... - ரேணுகா

பிள்ளையாரை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் கட்டுரை மிகச் சிறப்பு. கலக்கலோ கலக்கல் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

வைதேகி பாஸ்கரன், நெமிலிச்சேரி


ஹாங்காங்கில் ஒரு சாபு சிரில் - சுந்தர்ராஜன்... - ராம்

ஹாங்காங்கில் சுந்தர்ராஜன் இருப்பதால்தான், அவருக்குள் இருக்கும் சாபு சிரிலை எங்களால் அறிந்து கொள்ள முடிந்தது. விநாயகர் அருளால், வித்தை கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு!

லஷ்மி நரசிம்மன், திருவெறும்பூர்


பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 33 - கலைமாமணி பாரதி திருமகன்

விநாயகர் வயிற்றில் குத்தி எடுத்த மாவில் கொழுக்கட்டை நைவேத்தியம் வைத்தாரா, கவிஞர்?! பலே... பலே! விநாயகர் சதுர்த்தின்னாலே நமக்கு கொழுக்கட்டை பெயரை சொன்னாலே கிளுகிளுப்பு ஏற்படும். அவருக்கு ஐடியா வராதா?1

திருநாவுக்கரசர், வில்வலிங்கம், திருக்கடையூர்


விநாயகர் - விநாயகி ஆன்மீக தகவல் கட்டுரை - ஆரூர் சுந்தரசேகர்.

விநாயகர்- விநாயகி குறித்த ஆன்மீக தகவல்கள், அவை அமைந்திருக்கும் இடங்கள் குறித்து மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்தது. மிக்க மகிழ்ச்சி. விகடகவியாரின் விநாயகர் ஸ்பெஷல் கட்டுரைகள் அமர்க்களம்!

மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை


வலையங்கம்

வலையங்கத்தின் துவக்கத்தில் பாரதி திருமகனின் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அவரது சிறப்புகள் குறித்த வில்லிசை பாணியில் அளித்த குறுந்தகவல்கள் தொடர்பான வீடியோ பதிவு மிக அருமை. ஜவஹர்லால் நேரு பற்றிய தகவல்களை மத்திய பாஜ அரசு மறைக்க நினைத்தால், எதிர்கால அரசில் மோடியின் சாதனைகள் மறைக்கப்பட்டு விடும் என்பதே நிஜம். இதை ஆள்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ராதாகிருஷ்ணன், மாதவன், பெரவள்ளூர்


கும்பகோணம் உச்சி பிள்ளையார்... வேங்கடகிருஷ்ணன்

எங்க ஊர் கும்பகோணம் உச்சி பிள்ளையார் பற்றிய தகவல்கள் படிக்க, அந்த அழகான பிள்ளையார் மனதில் வந்துவிட்டார்... ஊரின் நடுவே அமர்ந்து உள்ள சக்தி வாய்ந்த விநாயகர்... நினைவுகள் ஊரோடு சென்று விட்டன... நன்றி...


“மதமா…மனமா?” - வெ.சுப்பிரமணியன்

இந்தக் காலத்தில் கலப்பு திருமணங்களை தவிர்க்க முடியாது. ஆனால், மதம் மாறிய திருமணங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை சமூகத்தில் எல்லோர் மனங்களிலும் வரவில்லை. காரணம் மனமல்ல, மதங்களே.

சிவகுமார்


பேசிக்கறாங்க...

கடைசி பத்தி! பத்திரிகை தரம் தாழ்ந்த பதிப்பு! கண்ணியம் காக்க!


தில்லாலங்கடி சிறைபறவை “ சுகேஷ் சந்திரசேகர்”! - நமது சிறப்பு நிருபர்.

அந்த ஆளை மெச்சுவதை விட நமது காவல் துறை, சிறைத்துறை போன்ற பல அரச நிறுவனங்களின் இயலாமையை நினைத்து நொந்து கொள்வதுதான் சரி.


வலையங்கம்

ஜவகர்லால் நேருவின் தியாகங்களை மறக்கக் கூடாது, முடியாது. அவரது கொள்கை, மற்றும் அரசியல் நிலைபாடுகள் குறித்து விரிவாகவே விமர்சனங்கள், விவாதங்கள் அவர் இருந்த போதும், இப்போதும் உண்டு. அவரது ஆளுமை, அரசியல் முடிவுகளை, மற்றும் அதன் விளைவாக நல்லதையும், கெட்டதையும் பல தலைமுறைகள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இதையும் கருத்தில் கொள்ள வேண்டும். His arrogance, borne out of over estimation of his own self, became his nemesis through the back stabbing aggression by Chinese


பாரதி...!! நினைவில் நூறாண்டு...!! - பாலா

Amara kavi Bharathi kavithai arumai. Vazhuthukkal.

உஷாலக்‌ஷ்மி, பெங்களூரு


முக்குறுணி விநாயகருக்கு, 18 படி அரிசியில் பிரம்மாண்டமான கொழுக்கட்டை!! - ஆரூர் சுந்தரசேகர்.

Aaroor Dundarasekarin. super Article very useful to all! Narayani. pazhavathan kattalai.

நாராயணி, பழவதான் காட்டாளை


விநாயகர் - விநாயகி ஆன்மீக தகவல் கட்டுரை - ஆரூர் சுந்தரசேகர்.

Ganesini ..Ariya thagavalgalai. Ariyamudinthadu! Thanks a. lot. Vikatakavi.

ஆர்.எஸ். மணி, கும்பகோணம்