தொடர்கள்
வம்பு துளிகள்
கருத்து கதிர்வேலன்...

20210817120931713.jpeg

கால நிர்ணயம் செய்து திட்டத்தை நிறைவேற்றுங்கள்... - முதல்வர் அறிவுரை

ஆமாம்.. ஆமாம்.. வரிசையா உள்ளாட்சி தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் எல்லாம் வருது


100 சதவீத இட ஒதுக்கீடு... - டாக்டர் ராமதாஸ் விருப்பம்

அதுக்குதான் தனித்து போட்டியா


கமல் கட்சியும் தனித்துப்போட்டி

ஆமாம்.. ஆமாம்.. யாரும் கூப்பிடல இல்ல அதான்


அரிசி கடத்தலுக்கு செக்-அமைச்சர் தகவல்

பேங்க்ல பணம் இருக்கு இல்ல


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்... - எடப்பாடி வேண்டுகோள்

அதான் ரெய்டு நடக்குது அப்புறம் என்ன


வராக்கடன் வங்கிக்கு அரசு உத்தரவாதம்

அதாவது அந்த கடன் நிச்சயம் வராது என்று


தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நிரந்தரமாக தொடர வேண்டும்... - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

ஆமா... உதயநிதி, இன்பநிதி என்று வரிசையாக முதல்வர் வேட்பாளர்கள் ரெடியா இருக்காங்க


வங்கிக் கணக்கில் 900 கோடி பீகார் மாணவர்கள் ஆச்சரியம்

இந்தியா வளர்ந்த நாடுன்னு சொன்னா நம்பனும்..


ஹிந்துஸ்தானை பாதுகாப்போம்... - மம்தா பேச்சு

ஆமா... இடைத்தேர்தல்ல ஜெயிக்கணும்


கலைஞர் பல்லாண்டுக்குப் பிறகு பெற்ற புகழை, ஸ்டாலின் 100 நாளில் பெற்றுள்ளார்... - துரைமுருகன்

அண்ணனுக்கு இதெல்லாம் எடுத்துச் சொல்ல 6 பேர் கொண்ட குழு வச்சிருக்கார்