தொடர்கள்
அரசியல்
சிவாஜி சர்ச்சை-பால்கி

20221024180722425.jpg

மகாராஷ்டிர கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி சிவாஜி பற்றிய தனது கருத்துகளால் அரசியல் புயலைக் கிளப்பியது எப்படி?

மகாராஷ்டிர கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சிவாஜியைஅந்நாளின், பழங்காலச் சின்னம்என்று கூறியதையடுத்து அவரை திரும்ப அழைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பாஜகவின் சுதன்ஷு திரிவேதியும் இந்தி தொலைக்காட்சியில் மராட்டிய மன்னரைப் பற்றி கூறியதாகக் கூறப்படும் கருத்துக்கு மகாராஷ்டிராவில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

கடந்த வாரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சாவர்க்கரைப் பற்றி, ஆங்கிலேயர்களுக்குப் பயந்து கருணை மனு எழுதியதாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அது பூதாகாரமாக வெடித்தது.

மஹா விகாஸ் அகாடி என்ற உத்தவ் சேன, இந்திரா காங்கிரஸ் , தேசீயவாத ஷரத் பவார் காங்கிரஸ் இடையே கருத்து மோதல் கொப்புளித்தது. இந்திரா காங்கிரஸ் ராகுல் காந்தியை முட்டுக்கொடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தது. இரண்டான சேனைகள் ஒன்றாய் கொதிதெழுந்தன.

111 நாள் பாத்ரா சால் (patra chawl) ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறையினரால் சிறையில் இருந்து தற்போது பெயிலில் வெளி வந்த சஞ்சய் ராவுத்,”ஆஹா…வீர் சாவர்க்கரைச் சொன்னியா, நீ எப்பிடி சொல்லலாம்”, என்று கடுமையாகத் தாக்கி, நான் வந்துட்டேன்னு போய் சொல்லு என்று புலப்படுத்திக் கொண்டார்.

அந்த சமயம் பார்த்து சனிக்கிழமை (நவம்பர் 19) அவுரங்காபாத்தில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி உரையாற்றும் போது மஹாராஷ்ட்ர ஆளுனர் கோஷ்யாரி, சத்ரபதி சிவாஜியை "கடந்த சகாப்தத்தின் ஹீரோ" என்று குறிப்பிட்டு டாக்டர் பீம்ராவ் ராம்ஜி (பி.ஆர். ) அம்பேத்கரும் கட்கரியும் "தற்போதைய ஹீரோக்கள்” என்று பேசினார்.

ராகுல் காந்தி, சஞ்சய் ராவுத்தைப் பார்த்து,” உடம்பு தேவிலயா…உங்க சேவை நாட்டுக்குத் தேவை”ங்கற மாதிரி சொன்ன செய்தி குறுக்கிட்டு ராகுல் காந்தி மன்னிக்கப்பட குளிர்ந்து போன சஞ்சய் ராவூத் கவர்னர் பக்கம் தனது கடுமைகளை குறி வைத்துக்கொண்டிருக்கிறார்.

ஏற்கெனவே, இந்த மாதிரி சொல் வழுக்கலில் ஆளுனர் மாட்டிக்கொண்டதுண்டு. இப்போது அனைவரின் விமரிசனங்கள் ஆளுனர் மீது ஏவி விடப்பட்டுள்ளன. பாவம் பா.ஜ க இதில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இசைவான பார்ட்னர் ஷிண்டே கூட,” வாங்கு.. வாங்கு..ஆளுனரை வாபஸ் வாங்கு” என்று வாங்கு வாங்குன்னு மத்த கட்சிகளோடு கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தார்.

ஃபட்னவிஸ் பாடு திண்டாட்டமா இருக்கு.

சர்ச்சையில் சிக்கிய பகத் சிங் கோஷ்யாரி , சத்ரபதி சிவாஜி பற்றி கூறியது தான் என்ன? எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கக் காரணம்தான் என்ன?

மகாராஷ்டிர ஆளுநர் நிதின் கட்கரி மற்றும் டாக்டர் பிஆர் அம்பேத்கர்இன்றைய ஹீரோக்கள்” என்று கூறினார்.

நாங்கள் பள்ளியில் படிக்கும் போது, ​​ஆசிரியர்கள் எங்களுக்குப் பிடித்த தலைவர்களைப் பற்றிக் கேட்பார்கள், நாங்கள் சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு என்று பெயர் வைப்போம். மகாராஷ்டிராவில், இந்த கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால், மகாராஷ்டிராவில் இவ்வளவு உயரமான தலைவர்கள் நிறைந்திருப்பதால் நீங்கள் வெளியே செல்ல வேண்டியதில்லை. சிவாஜி அந்த கால ஹீரோன்னா. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் முதல் நிதின் கட்காரி வரை தற்போதைய ஹீரோக்களை நீங்கள் இங்கே காணலாம்,” என்று ஆளுனர் கூறியிருக்கிறார்.

சாவர்க்கரைப் பாதுகாத்து, சுதன்ஷு திரிவேதி, அந்த நேரத்தில் (சுதந்திரத்திற்கு முன்) சிறையில் இருந்து வெளியே வருவதற்கு மக்கள் கருணை மனுக்களை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் எழுதுவார்கள் என்று கூறினார். “சிவாஜி மகாராஜ் அவுரங்கசீப்பிற்கு ஐந்து கடிதங்கள் எழுதினார். அதற்கு என்ன பொருள்?" அவர் ஆஜ் தக்கிடம் கூறியதாக கூறப்படுகிறது.

சிவசேனா (உத்தவ் தாக்கரேவின் பிரிவு) தலைவர் சஞ்சய் ராவத், மகாராஷ்டிர ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பா ஜ க மன்னிப்பு கேட்க வேண்டும், மற்றும் ஷிண்டேவின் "மௌனம்" குறித்து கேள்வி எழுப்பிய ராவத், "ஒரு வருடத்தில் ஆளுநர் நான்கு முறை சிவாஜி அவமதித்துள்ளார். ஆனாலும், அரசு அமைதியாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சிவாஜி ஒரு பெரும் தலைவராகக் கருதுகின்றனர் ஆனால் அவர்களின் தேசிய செய்தித் தொடர்பாளர் சிவாஜி அவுரங்கசீப்பிடம் ஐந்து முறை மன்னிப்பு கேட்டார் எங்கிறாரே. இது பாஜகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா? மகாராஷ்டிராவிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும், கவர்னரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும், பாஜக சிவாஜி "வெளிப்படையாக அவமதிப்பதால்" அவரது "சுயமரியாதை" எங்கே போனது என்று மகாராஷ்டிர முதல்வரைத் தாக்கினார்.

ஷிண்டேவைக் குறிப்பிட்டு ராவத், “நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும். சிவாஜி மீது உங்களுக்கு மரியாதை இருந்தால், அவர்களுடன் (பாஜக) ஏன் ஆட்சியில் இருக்கிறீர்கள்?

வீர் சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக, தற்போது ராஜ்பவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் அவர் வெடித்தார்.

துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆளுநரின் அறிக்கையை ஆதரிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று தேசீயவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே கூறினார்.

ஒரு முறை தவறு நடக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அவர் (கோஷ்யாரி) மீண்டும் மீண்டும் பேசி வருகிறார். அவர் அடிக்கடி குற்றம் செய்பவர். ஒரு தவறை மீண்டும் மீண்டும் செய்யும் போது, ​​அது ஒரு தவறாக இருக்காது, அது ஒரு பழக்கமாகவே மாறும், ”என்று சுலே மேற்கோள் காட்டினார்.

கோஷியாரின் பதவி நீக்கம் மற்றும் கருத்துக்களுக்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல், “இதை பொறுத்துக்கொள்ள முடியாது. பாஜக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், கவர்னரை திரும்ப அழைக்க வேண்டும்.

சத்ரபதி சிவாஜி வழித்தோன்றல், முன்னாள் பாஜக எம்பி சத்ரபதி சாம்பாஜிராஜே கூறியதாவது... சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஒரு ஜாம்பவான். அவர் கடந்த கால, நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கான வழிகாட்டும் சக்தியாகவும் உத்வேகமாகவும் இருக்கிறார்.

சிவாஜியை "பழைய நாட்களின் சின்னம்" என்று வர்ணிக்கும் போது கோஷ்யாரியால் பாராட்டப்பட்ட கட்கரி, தனது மௌனத்தை உடைத்து, "சிவாஜி மகாராஜ் எங்கள் கடவுள்... நாங்கள் அவரை எங்கள் பெற்றோரை விட அதிகமாக மதிக்கிறோம்" என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த ஃபட்னாவிஸ், "சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை சத்ரபதி சிவாஜி மாநிலத்திற்கும் நாட்டிற்கும் ஒரு ஹீரோ" என்று கூறினார்.

சிவாஜி குறித்து சுதன்ஷு திரிவேதி கூறிய கருத்துக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் வாதாடினார்.

கவர்னர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கூட அவர் மனதில் இது குறித்து எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு, கவர்னர் கூறிய கருத்துக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. நாட்டில் சிவாஜி விட வேறு யாரும் முன்மாதிரி இல்லை என்று நான் உணர்கிறேன்

செய்தி சேனலில் திரிவேதியின் கருத்துக்களைப் பற்றி கூறுகையில், துணை முதல்வர் மேலும் கூறினார், “சுதன்ஷு திரிவேதியின் அறிக்கையை நான் தெளிவாகக் கேட்டேன். சிவாஜி மகாராஜ் மன்னிப்புக் கேட்டதாக அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

பாஜக தலைவர் பிரவீன் தரேகர் கூறுகையில், சத்ரபதி சிவாஜி யாருடனும் ஒப்பிட முடியாது. நாங்கள் அவரை வணங்குகிறோம், நிதின் கட்கரி, சரத் பவார் போன்ற பல தலைவர்கள் இருந்தாலும்... ஒவ்வொருவரும் அவரவர் வேலையைச் செய்திருக்கிறார்கள், பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிவாஜியை கட்கரியுடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது.

ஆளாளுக்கு ஆளுனர் சொன்னதைப் பதம் பிரித்து, பொருள் பிரித்து …..

இதில் அனைவரும் மறந்தது என்னவென்றால், தேசீவாத காங்கிரஸுன் தலைவர் ஷரத் பவார் அன்று ஆளுனர் கரங்களில் இருந்து டி. லிட் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

சத்ரபதி சிவாஜி, ஆர் எஸ் எஸ் போற்றி வணங்கும் முக்கிய தலைவர்களில் ஒருவர். ஆளுனரும் ஒரு ஆர் எஸ் எஸ் காரர். எங்கோ ஏதோ திருப்பம் நடந்திருக்கிறது.