தொடர்கள்
பொது
இராணுவ வீரர்களுக்கு திருமண அழைப்பு விடுத்த புதுமணத் தம்பதி! மாலா ஶ்ரீ

20221024233642267.jpg

கேரள மாநிலத்தை சேர்ந்த புதுமணத் தம்பதிகள் ராகுல்-கார்த்திகா. இவர்களின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. அதற்காக தங்களின் திருமண அழைப்பிதழுடன் புதுடெல்லியில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு இருவரும் இணைந்து, ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில், 'அன்பான ஹீரோக்களே, எங்களுக்கு நவம்பர் 10-ம் தேதி கேரளாவில் நடைபெறுகிறது. தங்களுக்கு நமது நாட்டின் மீது உண்மையான அன்பு, மன உறுதி மற்றும் தேசபக்திக்காக நாங்கள் உளமார நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

நீங்கள் நாட்டின் எல்லையில் வெயில், மழை, பனி உள்பட பல்வேறு இடர்பாடுகளை தாங்கிக் கொண்டு, இரவு பகலாக விழிப்புடன் கண்காணித்து, எங்களை பாதுகாத்து வருகிறீர்கள். அதனால்தான் நாங்கள் இரவில் நிம்மதியாக உறங்குகிறோம். எங்களின் திருமணத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுப்பில் பெருமை கொள்கிறோம். உங்களின் வரவை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்' என இருவரும் எழுதியுள்ளனர். இக்கடிதம் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள புதுமணத் தம்பதியரின் திருமண அழைப்பிதழை இந்திய ராணுவ தலைமையகம், தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கடந்த 18-ம் தேதி பகிர்ந்தது. மேலும், அதன் குறிப்பேட்டில், "வாழ்த்துக்கள். புதுமணத் தம்பதிகள் ராகுல்-கார்த்திகாவுக்கு இந்திய ராணுவம் சிரத்தையுடன் நன்றி தெரிவிக்கிறது. இருவரும் என்றென்றும் ஒன்றிணைந்து திருமண வாழ்க்கை ஆனந்தமாக அமைய வாழ்த்துகிறோம்!" என்று இந்திய ராணுவ தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

20221024234043165.jpg

இந்த புதுமணத் தம்பதிக்கு ஒரு விஷயம் தெரியாது போலும். இராணுவத்தில் தற்சமயம் பணியில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கை மட்டும் ஒன்றரை லட்சம் பேர். அத்தனை பேரும் ஒரு வேளை வந்திருந்தால்....

இருந்தாலும் அந்த நல்ல மனதைப் பாராட்டுவோம்.

மாலா