தொடர்கள்
தொடர்கள்
 சென்னை  மாதம் -  பாகம்  97  - ஆர் . ரங்கராஜ்

20230726073004100.jpg

பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் மூன்றாம் இராசராசனின் கல்வெட்டுகள் -

பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகாமண்டபம் மேற்குச் சுவரில், மூன்றாம் இராசராசனின் கல்வெட்டுகள் உள்ளன. கி.பி. 1241 - ல், மூன்றாம் இராசராசனின் 25 - ஆம் ஆண்டில் இந்த சோழ கல்வெட்டு கிரந்தங் கலந்த தமிழ் எழுத்தில் உள்ளது.

குறிப்புரை: ஜெயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகர் நாட்டுப் பெருநகர் ஆளுடையார் பிரமீசுரமுடைய நாயனார் கோயிலில், இம்மண்டலத்து எயிற் கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல் ஊரைச் சார்ந்த பட்டியர் பேரயன் பெருங்கந் தேவப்பெருமாள் என்பவன் நான்கு சந்திவிளக்குகள் எரிக்க 4 கழஞ்சுப் பொன்னினை, இக்கோயில் சிவபிராமணர்களிடம் வழங்கியுள்ளான்.

கோயில் கருவறை வடக்கு ஜகதியில், அதே ஆண்டைச் சார்ந்த, மூன்றாம் இராசராசனின் இன்னொரு கல்வெட்டு உள்ளது. இந்த கல்வெட்டும் கிரந்தங் கலந்த தமிழ் எழுத்தில் உள்ளது.

நன்றி: தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை.

(தொடரும்)

-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)