தொடர்கள்
கவர் ஸ்டோரி
ஏழாவது ஆண்டில் விகடகவி - உங்கள் ஆதரவின்றி இது சாத்தியமில்லை.

20231101231126874.jpeg

பாஹுபலி சிவலிங்கத்தை தூக்கிச் செல்வது போல விகடகவியார் ஏழாவது ஆண்டை தூக்கிக் கொண்டு செல்வது அரஸின் கைவண்ணத்தில் அத்தனை அழகு. ஆம் கொஞ்சம் பளு அதிகமாத்தான் இருக்கிறது விகடகவியாருக்கு.

ஆனால் விகடகவி கடந்து வந்த பாதை, கடினமானது அல்ல, கவிதை போன்றது.

ஆசிரியர் மதன் அவர்களின் ஆசியுடனும், வழிநடத்துதலுடனும், ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விகடகவியில் இனிக்கும் இஸ்லாம் தொடராக வந்து புத்தகமாக வந்திருக்கிறது.

20231101233239372.jpeg

அது போலவே ஒலிக்கும் சிலம்பு தொடராக வந்து நூலாக வெளி வந்திருப்பதும் மகிழ்ச்சி.

20231101233301940.jpg

திரைப்பட இயக்குனர் என்.குமாரின் காலமே போதி மரமும் புத்தகமாக வெளி வந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

20231101233321247.jpg

எழுத்து போக குமாரின் ஒலித் தொடர் பட்டாம்பூச்சி பேசுது மிகப் பிரபலம்.

மினி கைலாய பயணத் தொடர் கூட மின் புத்தகமாக கிண்டிலிலும் ஆப்பிள் தளத்திலும் வெளியானது.

20231101233615409.jpeg

இது போக இன்னமும் புத்தகமாக வெளிவர இருக்கும் தொடர்கள் விகடகவியில் வந்த வண்ணம் இருக்கின்றன.

சத்தியபாமா ஒப்பிலி, ரமணியின் சிறுகதைகள், ஜாசனின் நடந்தது, பரணியின் கத கேளு, சங்கரனின் சனாதன தர்மம், போன்ற தொடர்கள் புத்தகமாக வரவிருக்கிறது.

விகடகவியின் பின்னணியில் அயராத தன்னலமற்ற எழுத்தாளர்களின் பணி இருக்கிறது.

தற்போது விகடகவி MAGZTER தளத்திலும் வெளியாகி உலகின் பல தேசங்களில் வாழும் தமிழர்களை தேடிச் செல்வது சிறப்பு.

இதெற்கெல்லாம் காரணம் வாசகர்களின் ஆதரவு தான். ஆனால் போதாது. அதாவது உங்கள் ஆதரவு அல்ல, வாசகர்களின் அளவு.

இன்னமும் விகடகவி இலவசமாக வரும் மின்னிதழ். உங்கள் நண்பர்களுக்கு உறவினர்களுக்கும் விகடகவியை பகிருங்கள்.

MAGZTER இணைய தளத்திலும் வருவதால் அதையும் பகிரலாம்.

விகடகவியின் youtube பக்கம் இருக்கிறது. மற்ற யூடியூபர்ஸ் போல தினமும் பதிவேற்றவில்லையென்றாலும் பத்திரிகைக்கு தேவையான காணொளிகள் அங்கு தொடர்ந்து வலையேற்றப்படுகின்றன. இந்த இதழில் இதன் சுட்டிகள் இருக்கிறது.

அது மட்டுமல்ல உங்கள் கிரியேடிவிட்டிக்கும் விகடகவி காத்திருக்கிறது. கருத்துக்களுக்கும் தான்.

ஏழாவது ஆண்டிலும், எந்த அரசியல் சார்பும் இல்லாமல், எந்த மத சார்பும் இல்லாமல், யாருக்கும் கைத்தடியாக இருக்க வேண்டிய தேவை அவசியம் இல்லாமல், (கருத்து கதிர்வேலனைப் தொடர்ந்து படித்தால் விகடகவியின் நடுநிலை நன்றாகவே புரியும்) பொருளுக்காக எதையும் எழத வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் தொடர்ந்து நடை போடுகிறார் விகடகவியார்.

அவருக்குத் தேவையானது உங்கள் ஆதரவும், வாசிப்பும், பகிர்தலும்,எண்ணங்கள் மற்றும் ஆலோசனைகள் மட்டுமே.

அன்புடன்

ஆசிரியர் குழு.