தொடர்கள்
பொது
புதிய வெடிகுண்டு கருவி ! காப்புரிமை பெற்ற ராணுவ மேஜர்! - மாலா ஶ்ரீ

20240222224525405.jpeg

இந்திய ராணுவத்தில் பீரங்கிகள், துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் மோர்ட்டர் போன்ற வெடிபொருட்கள், ஏவுகணைகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக, ‘எக்ஸ்ஃபுளோடர் டைனமோ கெபாசிடர்’ (இடிசி) எனும் குண்டுகளை வெடிக்க செய்யும் புதிய கருவி பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன்மூலம் 400 மீட்டர் தூரமுள்ள இலக்கை வயர்களால் இணைக்கப்பட்ட குண்டு மூலம் தகர்க்க முடியும். எனினும், இந்திய ராணுவத்துக்கு சமீபகாலமாக அதிக தொலைவில் உள்ள இலக்குகளைத் தகர்க்க வயர்லெஸ் குண்டுகள் தேவைப்பட்டன.

இவற்றை உருவாக்கும் முயற்சியில் இந்திய ராணுவ இன்ஜினியரிங் பிரிவில் வேலைபார்க்கும் மேஜர் ராஜ்பிரசாத் ஈடுபட்டுள்ளார். தற்போது இவர் உருவாக்கியுள்ள ‘டபிள்யு.இ.டி.சி’ எனும் புதிய கருவி மூலம் 2.5 கிமீ தூரத்தில் உள்ள எதிரிகளின் பல்வேறு இலக்குகளை வயர் மற்றும் வயர்லெஸ் குண்டுகள் மூலம் தனித்தனியாகவும் அல்லது ஒரே நேரத்தில் தகர்க்கும் கருவியை ராணுவ மேஜர் ராஜ்பிரசாத் கண்டுபிடித்துள்ளார்.

தற்போது இக்கருவிகள் சோதனை ஓட்டத்தில் வெற்றிகரமாக இயங்கி வருவதால், இந்த டபிள்யு.இ.டி.சி கருவியை உருவாக்கிய மேஜர் ராஜ்பிரசாத் கடந்த சில நாட்களுக்கு முன் காப்புரிமை பெற்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து, இந்த டபிள்யு.இ.டி.சி கருவி இந்திய ராணுவ வெடிகுண்டு பயன்பாட்டிலும் சேர்க்கப்பட்டு உள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.