
"ஸ்ரீமஹாசாஸ்தாவின் திருவாபரணங்களும் வாத்தியங்களும்"
குண்டலத்தமைந்த
ரத்ன குஞ்சேரி மகுடமும்
குண்டலத்திசைந்த
முத்திகோருவை பதக்கமும்….
நவரத்ன மணி மணி மகுட கேயூரம்
மார்பில் முத்து மோஹன மணிஹாரம்
அவர் நெற்றியிலும் கஸ்தூரி திலக
நதனத்தினு பரிபாகத்திலும் ரவி மதி
வெற்றி பெறும் இரு கரத்தில்
கோதண்ட சரம் கொத்துப் பிடித்து…
ஆணிப்பொண் மானிக்கம்
அங்கத்திலங்கணி அஞ்சும்
மதனரம்பை கொஞ்சும்
சிரிகிரி பகல் மாணிக்கமாலை மனோஹர
மார்பினில் மரகத மேதினில் உரகத மீதினில்…..
தண்டயணிப் பாதச் சிலம்புடன்
ஒட்டியாணமும் தரித்த நற்
பதக்கமழகும், ரண்டுகர மோதிரம்
பொன்வளை முப்பிரினூலுமிட்ட
திருமேனியழகும் குண்டலமும்
திலகமுடன்
வெகு பளீரெனவே…….
தண்டை ஒட்டியாண
சிலம்பில் த்வனி முழங்க
கண்டசரமும் மார்பில்
அணிந்து பணிதுங்க……..
கண்ணாடி கிலிகிலுப்ப
கனகாழி மோதிரம் கண்ட
சரமாலையும் கரத்தில்
கணையாழியும் தண்டையொடு
வெள்ளிச் சலங்கையும்
தனித்து போற்காத கரடும்…….
முத்துப்பதித்த கிரீட மிலங்கவே
மோஹன மாலை கழுத்தில் விளங்கவே
கொத்துசபரளி குண்டலம் துலங்கவே…..
உன் தண்டையணிப்பாதச்
சிலம்பு மணி ஓசையும்
தாழையும் அரனூறு மாலையும்…….
தங்கக்கிரீடம் தரித்து வைர
குண்டல ஹார கேயூரம் அணிந்து
பட்டுப் பீதாம்பரம் உடுத்து……
தங்கம் வைரமுத்து
செம்போல் பதக்கம் பூண்டு…..
மணிமகுடத்தில் விளங்கும்
வைரங்களும் மகர குண்டலங்களும்
மார்பினில் தவழ்கின்ற
மாலைகள் மணிஹாரமும்…….
கொண்டையும் திலகமிட்டு
குண்டலம் கண்டசரமும்
வெண்டயம் கலகலவென
வீரமணி கண்டரய்யன்……..
மணிமய கிரீட ஸுகலிங்கன் ரத்ன
மாணிக்க ஹார மணி வஜ்ர கவசாங்கன்……..
தண்டை சிலம்பொட்டியாணம் நன்றாய்
த்வனி முழங்க கண்ட சரமும் மார்பில்
ஒன்றே பணிகள் சொல்ல இரண்டுகர
மோதிரம் என்றும் சோபைகள் மின்ன…..
கற்கரடு பொற்பதக்கம் கனகமுத்து
சவடிகளும் மெய்யால் சுமந்திருக்கும்
விறகா உன் திருமேனி…………………..
முத்து வைர ரத்ன பதக்கம் பூண்டு……………..
இதுபோன்று மணிதாசரின் இன்னும் பல பாடல்கள் உள்ளன.
பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவின் வாத்யங்கள்:
பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவில் வாத்யங்கள் பதினெட்டாகும்.
மணிதாசர் தன் பாடலில் அதைப் பற்றிக் கூறுகிறார்.
அஷ்ட திக்கும் முழங்க
பதினெட்டு வாத்தியமுடன்……………
பதினெட்டு வாத்தியங்கள்
பண்புடன் அடிக்க…………………
எட்டு திசையும் முழங்கவே
பதினெட்டு வாத்தியமுடன்……………….
அஷ்ட தச வாத்தியங்கள்
அணி அணியாய் முழங்க…………………
கொட்டுமொரு வாத்தியம்
பதினெட்டுமே முழங்க……………….
அஷ்ட திக்கும் அதிர
பதினெட்டு வாத்தியமுடன்……………….
என்றெல்லாம் திரும்பத் திரும்ப பதினெட்டு வாதியங்களை பற்றிக் கூறுவார்.
பகவானது வஞ்சிப் பாட்டு
அஷ்டதச வாத்தியங்களும்
கோஷிக்குன்னுதும்…….
என்று கூறுகிறது.
ஹரிஹர புத்திர திருக்கல்யாண பத்ததியில் வரும் சூரிணிகையிலும் பதினெட்டு வாத்தியங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
பகவானுக்கு விருப்பமான அந்த பதினெட்டு வாத்தியங்கள் முறையே:
- பேரி
- மிருதங்கம்
- மத்தளம்
- காகலம்
- துந்துபி
- தூரி
- தும்புரு
- வீணா
- வேணு
- நூபுரம்
- மட்டுகம்
- டிண்டிமம்
- டமருகம்
- ஜர்ஜரி
- ஜல்லரி
- தவளசங்கம்
- பணவம்
- படகம்
மஹாபரத சூடாமணி என்ற நூல் மேலும் பல வாத்தியங்களை ஸ்ரீமஹாசாஷ்தாவிற்கு உகந்ததாகக் கூறுகின்றது. அவைகள் பாடல்கள் மூலம் சொல்லப்பட்டுள்ளது
“அந்தரி முழா நாழிகைப்பறை,
பாங்கிப்பாறை, பாலைப்பறச்சீர்,
சந்தர்வ வலையம், தகுணி,
க்ணப்பறை, பல்பறையுடனே
சார்ந்து நிற்கும் தந்த விரலேறுடனாம்
வாத்தியம் ஒன்பதும் காளி, சாத்தன்,
துர்கை, முத்துவைரன், வனக்காளி,
கிராம தேவதைக்கும் உகந்ததன்றே”
அந்தரி, மழுவு, நாழ்ப்பறை,
பாங்கிப்பறை, பாலைப்பறை,
சந்திர வலையம், தகுணி, கணப்பறை,
விரவேறு முதலியவை இன்பதும் காளி, சாஸ்தா,
பைரவர், வனக்காளி, கிராம தேவதைகள்
முதலியோருக்கு உகந்தவை.
மேலும் விவேக சூடாமணி என்ற நூல்
“படகம் பேரிகை மத்தளம் கரடிகை, திமிலை
வடிவுள தேவர்க்குகந்த வாத்தியம் ஆமென
நூலில் வழுத்தும் மாதே”
என்று கூறுகிறது.
மணிதாசர் பாடல்களில் வாத்தியங்கள்:
மன்னில் முகவீணை கின்னரிதுதி
மேளதாளங்கள் அகிலம் முழ்ங்கவே….
விரறும் மணிமுரசு பேரிமத்தளங்கள் முதல்
விளங்கும் சேனைடனே உயர்ந்த த்வனி முழங்க……
மத்தள தாள தித்தி முரசுடன்
மல்லாரி பேரிகை டம்மாணம் முழங்க
சுற்றிலும் பல வாத்தியம் முழங்க……………..
பேரி மட மட டமருகள் வாத்தியங்களும்….
வேதருடன் கந்தர்வ வீணை முரளி…….
துங்கல் விரலில் சங்கம் துந்துபி முதல்…………..
மத்தளம், தாளம், திதி, முரசு, மல்லாரி
பேரிகை டம்மாணம் முழங்க……………….
மத்தளம், தாளம், பேரிகை,
ஒத்து நாதஸ்வரம், மேளம்………….
பேரி தவள சங்கம் முழங்க
நவீனமான ராகம் பாடவே…………….
சங்கு நாதம் எங்கும் முழங்க
பேரி மத்தளத்துடன் முரசொலிக்க
அங்குசம் சூலமும் ஆயுதமும் தாங்கி……………
ஒட்டகங்கள் மீது கொட்டும் தவ லுமாகி……..
மல்லாரி பேரிகை வாத்தியம் முதலாக
எல்லாம் முழங்கவே எட்டுத் திக்கிலும்………
பேரி மிருதங்கத்துடன் வேதாளமீதிலேறி……………..
தும்புரு நாரதர் துதிக்க வீணை
மத்தள காஹள தாளம் முழங்க
மாதர்கள் ஆடிவரவே துந்துபி
கோஷம் முழங்க தவுல்
நாதஸ்வரம் ஊதி வரவே…………………
இது போன்று இன்னும் பலப்பல மணிதாசரின் பாடல்கள் உள்ளன.
அடுத்த வாரம் தேஜோவதி பற்றி ஸ்காந்த புராணம் கூறுவதென்ன?

Leave a comment
Upload