தொடர்கள்
தேர்தல் திருவிழா
தேர்தலை புறக்கணிக்கும் நீலகிரி விவசாயிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் . - ஸ்வேதா அப்புதாஸ் .

.அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களின் சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர் .

20240304214436771.jpg

நீலகிரி தேர்தல் அதிகாரி மாவட்ட ஆட்சியர் அருணா தன் கைவசம்மிருக்கும் நீலகிரி தொகுதியில் 100 சதவிகித வாக்கு பதிவை பதிக்க செய்து சாதனை புரிய பம்பரமாக சுழன்று கொண்டு இருக்கிறார் .

இது சாத்தியமா என்ற கேள்விக்குறி இந்த தொகுதியில் பளிச் என்று தெரிகிறது .

20240304214745250.jpg

நீலகிரி மலை மாவட்ட சிறு விவசாயிகள் ஒட்டு மொத்தமாக மனம் உடைந்து தேர்தல் புறக்கணிக்கும் ஐடியாவில் முழு மூச்சாக இறங்கியுள்ளனர்.

20240304214825325.jpg

ஒரு பெரிய சிறு விவசாயிகள் கூட்டம் இதுவரை 250 கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை கவலைகளை எடுத்து கூறி எதிர்வரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று சூளுரைத்து வருகின்றனர் .

மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலைவர் தும்பூர் ஐ .போஜனன தொடர்பு கொண்டு பேசினோம்,

20240304214851849.jpg

" இந்த மலை மாவட்டத்தின் நீண்டநாள் கோரிக்கை தான் பச்சை தேயிலைக்கு அதிக விலை நிர்ணயம் செய்யவேண்டுமென்று வலியுறுத்தி சலித்து போய்விட்டோம் .

கடந்த முப்பது வருடமாக நிலவி வரும் பசும் தேயிலை விலை வீழ்ச்சிக்கு இது நாள் வரை மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையோ , தீர்வோ எடுக்கவில்லை .

20240304215301302.jpg

தேயிலையின் வீழ்ச்சி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்க .தொழிலாளிகளின் கூலி மட்டும் ஏறி கொண்டே இருக்கிறது .

தனியார் தேயிலை பாக்டரி முதலாளிகள் விவசாயிகளிடமிருந்து பசும் தேயிலையை மிக குறைந்த விலைக்கு வாங்கி அதிகமான விலைக்கு டீ தூளை விற்பனை செய்வதை எப்படி ஏற்று கொள்ள முடியும் .

நீங்கள் கோத்தகிரியில் தயாரிக்கப்படும் ஒரு கிலோ டீ தூளுக்கு 400 ரூபாய் கொடுப்பீர்கள் .விவசாயிக்கு என்ன கிடைக்கும் மிக மோசமான விலை தான் .

அதனால் தான் பசும் தேயிலைதூளுக்கு குறைந்தப்பட்ச ஏலத்தொகையாக ரூபாய்200 க்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னேறுத்தி கடந்த மாதம் 7 ஆம் தேதி ஊட்டி என் சி எம் எஸ் ஆரிகௌடர் அரங்கில் நீலகிரி குந்தா சீமை , மேற்கு சீமை ,கிழக்கு சீமை , ஆறு தாலுகா விவசாய சங்க தலைவர்கள் மற்றும் பசும் தேயிலை விவசாயி பிரதிநிதிகள் நானுறு பேரை அழைத்து அவர்களுக்கு இந்த பிரச்சனையை எடுத்து கூறி 1977 ஆம் ஆண்டு மத்திய வர்த்தக துறை பிறப்பித்த குறைந்த பட்ச ஏல தொகையாக ரூபாய் 200 ஒரு கிலோவுக்கு நிர்ணயித்து அரசாணை வெளியிடவேண்டும் .

20240304215410527.jpg

மேலும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள் அனைத்தும் நேரடியாக ஏல மையத்திற்கு வரவேண்டும் .

தனியார் தேயிலை தொழிற்சாலைகள் தங்களின் தேயிலை தூள் சிலரை வர்க்கத்திற்கு செல்ல கூடாது .என்பதனை வலியுறுத்தி இந்த தேர்தல் புறக்கணிப்பை துவக்கியுள்ளோம் .

20240304221735767.jpg

இது வரை எந்த வேட்பாளரும் சமாதானத்திற்கு வராத சூழ்நிலையில் தான் இந்த தேர்தல் புறக்கணிப்பு கட்டாயம் நடக்கும் . ஏற்கனவே நான் ராசா விடம் இது குறித்து பேசினேன் செய்கிறேன் என்று கூறினார் ஒன்றும் செய்யவில்லை .

20240304221327256.jpg

எல் .முருகனிடம் கூறினேன் அவரும் கவலையை விடுங்க நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறி விட்டதோடு சரி .

இந்த மாவட்டத்தில் தேர்தல் களத்தில் இருக்கும் மூன்று பிரதான கட்சி அவர்களின் தலைவர்களிடம் எழுத்து பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் .

நமக்கு அகில இந்திய பி ஜே பி தலைவர் நட்டா .

தி மு கா தலைவர் ஸ்டாலின் மற்றும் அ இ அ தி மு கா தலைவர் எடப்பாடியார் கையெழுத்து போட்டு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறினார் .

இது வரை எந்த முன்னேற்றமும் இல்லாத சூழ்நிலையில் தான் தேர்தல் புறக்கணிப்பு உறுதியாகியுள்ளது .

இந்த தேயிலை விலை வீழ்ச்சியால் நம் மாவட்ட விவசாயிகள் மாவட்டத்தை விட்டு இடம்பெயர்ந்து விட்டனர் . அவர்களின் ஓட்டு இங்கு விழாது அப்பொழுது எங்கு நூறு சதவிகிதம் வாக்கு பதிவு நடக்கும் " என்று கேட்கிறார் .

படுக தேச பார்ட்டி தலைவர் மஞ்சை மோகனை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டோம் ,

20240304215516595.jpg

" தேர்தல் புறக்கணிப்பு என்பது நீலகிரி படுக சமுதாய மக்கள் கடந்த 75 வருடமாக எங்களை ஆதித்தொல்குடி படுக சமுதாயத்தினரை இந்திய சுதந்திரத்திற்கு முன்பு இருந்ததைப்போல மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க போராடி கொண்டிருக்கிறோம் இது வரை எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை .

சுதந்திரத்திற்கு முன் பழங்குடி பட்டியலில் இருந்த எங்களை இப்பொழுது ஏன் இணைக்க மறுக்கிறார்கள் .

20240304221023828.jpg

பசும் தேயிலைக்கு அதிக விலை நிர்ணயிக்க முடியவில்லை .

ஒவ்வொரு தேர்தல் சமையத்தில் வேட்பாளர்களுக்கு நினைவூட்டி சலித்து விட்டோம் யாரும் செய்த பாடில்லை .

20240304220953855.jpg

நீலகிரி தொகுதியில் நூறு சதவிகிதம் வாக்கு பதிவு என்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரி கூறுகிறார் .இது எப்படி முடியும் .படுக சமுதாயத்தினர் பசும் தேயிலை விலை வீழ்ச்சியால் விரக்தியில் ஐம்பதாயிரம் எங்க சமூக மக்கள் கீழ்ப்பிரதேசத்திற்கு இடம்பியர்த்துவிட்டனர் .

அவர்களின் ஓட்டு இங்கு உள்ளது அவர்கள் இதற்காக ஊருக்கு வரமாட்டார்கள் .

அப்பொழுது எழுபது சதவிகிதம் தான் பதிவாகும் .

எங்களின் பிரச்சனைகளை தீர்க்காத கட்சிகளின் பிரச்சாரத்திற்கு இனி பணத்தை பெற்று கொண்டு எங்க பெண்கள் கூட்டம் போகாது .

வேட்பாளர்களுக்கு ஒரு காலத்தில் எச் பி எப் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை, பாஸ்டச்சூர் இன்ஸ்டிடியூட் பிரச்சனைகள் இருந்தன .

இப்பொழுது அதுவும் இல்லை .எல்லாம் மூடிவிட்டார்கள் .

வேலை வாய்ப்பு போய்விட்டது .பொருளாதாரம் இல்லாமல் நாடோடிகளாக போய்விட்டனர் .

எந்த உறுதியும் உதவியும் செய்யாத கட்சிகளுக்கு எதற்கு ஓட்டு போடவேண்டும் .

இனி எங்கள் சமுதாய பெண்கள் யாருக்கும் பிரச்சாரத்திற்கு வரமாட்டார்கள் .

இளித்துறை ராமச்சந்திரன் இருந்தும் நோ யூஸ் .எனவே இந்த வருட நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது உறுதி செய்யப்பட்டது என்கிறார் உறுதியாக .

20240304220624929.jpg

நீலகிரி சிறு தேயிலை விவசாயிகள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றும் படுக சமுதாய பெண்கள் இனி எந்த கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று கூறி வர வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு அ இ அ தி மு கா வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க ஊட்டிக்கு விசிட் செய்தார் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் இந்த பிரச்சார கூட்டத்தில் ஏராளமான படுக சமுதாய பெண்கள் கலந்து கொண்டு நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது .

20240304220709174.jpg

பார்க்கலாம் ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அன்று .

வெய்ட் அண்ட் சி என்கின்றனர் நீலகிரி வாசிகள் சிலர் .