

என் கேள்விக்கென்ன பதில் என்று போன வாரம் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு போன நமது பரணீதரன் அதைப்பற்றி இதோ கூறுகிறார்.
நாம் பார்த்த அந்த பூமாலைகள் படங்களில் உள்ள கணக்கு இதுதான்.
முதலில் இருந்த பூமாலையில் ஒரே வகையான பூவே இருந்தது. அதனால் அதனை நேரசை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
நேரசை என்பது எப்பொழுதும் தனியாகவே வரும்.
அடுத்து இருந்த பூமாலையில் இரண்டு வகையான பூக்கள் இருந்தது. அதனால் அதனை நிரையசை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
நிரையசை என்பது எப்பொழுதும் கூட்டாகவே வரும்.
போன வாரம் நாம் அசைகளை வைத்து நான்காக பிரிக்கப்பட்ட ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் ஆகியவற்றைப் பற்றிய முன்னுரையிருந்ததல்லவா? இப்பொழுது இந்த நான்கிற்குமான வித்தியாசங்கள் மற்றும் இதற்கான வாய்ப்பாடுகளை கீழே உள்ளன.
ஒரு சொல்லில் ஒரே ஒரு அசை வந்தால் அதனை ஓரசைச் சீர் என்று கூறுவோம்.
எடுத்துக்காட்டாக போ, பிற, எழு போன்ற சொற்கள். இப்படிப்பட்டதான ஓரசைச் சீருக்கான வாய்ப்பாடு கீழே உள்ளது.
ஓரசைச்சீர் வாய்ப்பாடு

ஒரு சொல்லில் இரண்டு அசைகள் வந்தால் அதனை ஈரசைச் சீர் என்று கூறுவோம்.
எடுத்துக்காட்டாக போனான், பிறந்தான், எழுந்தாள் போன்ற சொற்கள். ஈரசைச் சீருக்கான வாய்ப்பாடு கீழே உள்ளது.
ஈரசைச்சீர் வாய்ப்பாடு

ஒரு சொல்லில் மூன்று அசைகள் வந்தால் அதனை மூவசைச் சீர் என்று கூறுவோம்.
எடுத்துக்காட்டாக போய்விட்டான், பிறந்துவிட்டான், எழுந்துவிட்டாள் போன்ற சொற்கள். மூவசைச் சீருக்கான வாய்ப்பாடு கீழே உள்ளது.
மூவசைச்சீர் வாய்ப்பாடு

ஒரு சொல்லில் நான்கு அசைகள் வந்தால் அதனை நாலசைச் சீர் என்று கூறுவோம்.
எடுத்துக்காட்டாக போய்விட்டுவந்தான், பிறந்துவிட்டுசென்றான், எழுந்துவிட்டுசென்றாள் போன்ற சொற்கள். நாலசைச் சீருக்கான வாய்ப்பாடு கீழே உள்ளது.
நாலசைச்சீர் வாய்ப்பாடு

இந்த வாய்ப்பாடுகள் புரிந்து விட்டால் தமிழில் உள்ள அனைத்து விதமான செய்யுள்களையும் நம்மால் அழகாக அசை பிரித்து சீர் பார்க்க முடியும். பொதுவாக நான்கு அசைச்சீர்கள் கொண்ட தமிழ்ச் செய்யுள்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இரண்டசைச் சீர்களும், மூன்றசைச் சீர்களுமே பொதுவாக தமிழ் செய்யுள்களில் அதிகமாக வரும்.
வரும் வாரம் திருக்குறளில் இருந்து இந்த அசை பிரித்தலை ஆரம்பிக்கலாம்.
இந்த வாய்ப்பாடுகளில் உள்ள நாள், மலர், காசு, பிறப்பு, தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் போன்ற பொருள்கள் என்ன என்பதை வரும் வாரம் பார்ப்போம் என்று சொன்னவர் கூடவே,
வடமொழியில் இப்படிப்பட்டதான அசைகளையும் சீர்களையும் வைத்து சந்தஸ் என்ற முறையை உருவாக்கியுள்ளனர். தமிழுக்கும் வடமொழிக்குமான செய்யுள் ஒற்றுமையையும் வரும் வாரம் பார்ப்போம் என்று விடை பெறுகிறார் பரணீதரன்.

Leave a comment
Upload