தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20240306072112583.jpg

Heading : 50 இல்லத்தரசிகளுக்கு- சரளா ஜெயபிரகாஷ்

Comment : முற்றிலும் உண்மை. பயனுள்ள ஆலோசனைகள்.

Sujatha Amuddhu, sujibuttu@gmail.com

Heading : எங்கள் தோட்டம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : காலச்சக்கரத்தில் ஏறி ஒரு நாற்பதாண்டு காலம் பின்னோக்கி பயணித்ததுபோலிருந்தது கட்டுரையை படித்தவுடன். இது மாதிரியான சின்ன சின்ன இன்பங்களே வாழ்க்கையில் சுவை கூட்டுகின்றன. அதை எவ்வளவு ரசித்து அனுபவித்திருந்தால் இத்தனை வருடங்கள் கழித்தும் ஞாபகம் வைத்து கட்டுரையாக எழுதியிருப்பீர்கள்? சொந்த ஊரில் உள்ள வீட்டை விற்றுவிட்ட அனைவருக்கும் இந்த கட்டுரை ஒரு ஏக்கத்தை தரும். நெகிழ்ந்து விட்டேன், ஏனென்றால் இது போன்ற ஒரு அழகான தோட்டத்தை விற்றுவிட்டு வந்தவள் தான் நானும்.

Sujatha Amuddhu, sujibuttu@gmail.com

Posted Date : 05/04/2024 12:00:50 pm

Heading : நெகிழி Vs மஞ்சப்பை -ப ஒப்பிலி

Comment : சபாஷ்... அருமையான முயற்சி. பாராட்டுவோம். இதை மக்களிடையே வெளிக்கொணர்ந்த ஒப்பிலியின் தன்னலமற்ற சேவைக்கு தலைவணங்குவோம்.

ராதா வெங்கட், மாயா குப்புசாமி , ஊத்துக்கோட்டை

Heading : மன சாட்சி தான் கடவுள் - கோவை பாலா

Comment : அருமையான வார்த்தைகள்... அற்புதமான கவிதை. தொடரட்டும் கோவை பாலா, உமது சிந்தனை தூண்டும் கவிதைகள்!

ரமணிசந்திரன், ரேணுகா ஹரி , சிங்கப்பூர்

Heading : ஊட்டி மனு தாக்கலும் போலீஸ் தாக்கலும் . நேரடி ரிப்போர்ட் . - ஸ்வேதா அப்புதாஸ் .

Comment : என்னதான் ஆ.ராசா எம்பியாக இருந்தபோதிலும் ஆளுநரைப் போல் பாஜவினரைப் போல் அலம்பல் பண்ணத் தெரியவில்லை. இல்லே, தெரியாத மாதிரி அடக்கி வாசிக்கிறாரா?! அவர் நீலகிரி தொகுதிக்கு என்னென்ன வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வந்தார், காடுகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சொகுசு விடுதி கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லையே... ஊருக்குள் வனவிலங்குகள் வருகிறதே! இதற்கு பதில் சொல்வாரா, சமாளிப்பாரா?

தஸ்தாகீர், சுப்பலட்சுமி, கேசவன் , கோத்தகிரி

Heading : இது ஒரு தர்ம யுத்தம் - டாக்டர் கர்னல் கே எம் ஹரிகிருஷ்ணன்

Comment : இக்கட்டுரை மூலம் டி.எம்.கிருஷ்ணா ஒரு புரியாத புதிர் என்பது தெளிவாகிறது. பாரம்பரியமிக்க மியூசிக் அகாடமியில் குளறுபடிகள் ஏனோ? கர்நாடக இசைத்துறைக்கு தமது பங்களிப்பு போதும் என முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்களோ?!

ஷோபனா, சௌம்யா, ஸ்வேதா , நவி மும்பை

Heading : " தவக்காலமும் ஈஸ்டர் திருவிழாவும் " - ஸ்வேதா அப்புதாஸ் .

Comment : தவக்காலமும் ஈஸ்டர் பண்டிகையின் சிறப்புகள் குறித்து ஸ்வேதா அப்புதாஸ் மிக அழகாக விளக்கியுள்ளார். இது, அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.

ஸ்டெல்லா மேரி, தவச்செல்வி , வேளாங்கண்ணி

Heading : சினிமா சினிமா சினிமா- லைட் பாய்

Comment : தேர்தல் புறக்கணிப்புக்கு நடுவுல எங்களுக்கு இந்த கிளுகிளுப்பு தேவைதான். மழை வெள்ளத்தில் நாங்க அவதிப்பட்டப்போ, துப்பாக்கி சூடு நடந்தப்போ கிட்ட வராத அரசியல் தலைவருங்க எல்லாம் வர்றாங்க. யாருமே வேணாம், ஓட்டே போட வேணாம்னு மனசு கொந்தளிக்கும்போது விகடகவி செய்திகள் ஆறுதல் தருது!

பெருமாள், குணசேகரன், செபாஸ்டியன் , தூத்துக்குடி

Heading : குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 17 - ரேணு மீரா

Comment : நாளை என்பது நம் கையில் இல்லை. சார்ட் முறையை பயன்படுத்தி பிள்ளைகள் வேலையை தள்ளி ப் போடக்கூடாது என்பதை பெற்றோர்களுக்கு வலியுறுத்தி யிருக்கிறார். வாழ்த்துக்கள்🎉🎊

மாலதி, அம்பத்தூர்

Heading : குருவே சரணம் - 077 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

Comment : அருமையான பதிவு மஹா பெரியவா போற்றி

Heading : தேர்தல் திருவிழா -ஆர்.ராஜேஷ் கன்னா

Comment : தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்காமல் போனதுக்கு, சீட்டு கிடைக்காத திருநாவுக்கரசர் போன்ற பழம் பெருச்சாளிகள் மற்றும் சீட்டு கிடைச்சும் ஓட்டு கேட்டு போக முடியாத கார்த்தி சிதம்பரம் போன்றவர்கள் விட்ட சாபமோ என நினைக்க தோன்றுகிறது. 'தனக்கு ஒரு கண்ணு போனாலும் மத்தவனுக்கு ரெண்டு கண்ணும் போகணும்னு நினைக்கிறவங்க அரசியல்வாதிகள்'னு நியாயமா ஓட்டு போட்ட மக்கள் சொல்வாங்க!

திருநாவுக்கரசு, ஜெகன்மோகன் , ஐதராபாத்

Heading : அமலாக்கத்துறை வளையத்தில் 3 அமைச்சர்கள் !-விகடகவியார்.

Comment : தமிழ்நாட்டுல கோவை மட்டுமா இருக்கு.... மீதி38 தொகுதி இருக்கே! புதுவையையும் கவனிச்சுக்க சொல்லுங்க. அங்க இப்பவே காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் மயக்கம் போட்டு விழுந்துக்கிட்டு இருக்காரு... கூட இருக்கிறவன் கவுத்துடுவானோனு!

சௌந்தரராஜன், திவாகரன், வேலு, திருப்பரங்குன்றம்

Heading : கூட்டணிக் கட்சிகள் மீது ஸ்டாலின் கோபம் ! - விகடகவியார்.

Comment : சென்னையைத் தவிர வேறெந்த தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கலைனு சொல்றாங்களே.‌‌.. ஜெயிக்க மாட்டோம்னு அவநம்பிக்கையில எந்த கட்சி வேட்பாளரும் பணத்தை காட்ட மாட்டேங்கங்களாமே... விகடகவியாருக்கு அது தெரியுமா? ஒருசில இடத்துல கனிமொழி உள்பட பல வேட்பாளருங்க ரொம்ப லேட்டா போய், பப்ளிக்கிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்கிறாங்க... நாங்க இப்போதான் தமிழ்நாட்டுக்கு போய் வந்தோம்.

ஸ்டெல்லா, ராகவேந்திரா, தினகரன் , புதுடெல்லி

Heading : பயப்படுகிறதா பாஜக ?- ஜாசன்

Comment : நீங்க சொல்றதை வெச்சு பார்த்தா, பாஜகவே தனது தலையில் கொள்ளிக் கட்டையால் சொறிஞ்சுக்கிட்ட மாதிரி... அப்படித்தானே! எல்லா மாநிலத்திலும் அண்ணாமலை மாதிரி ஒரு ஆள் இருக்க மாட்டாங்களா... ஒருவேளை தோத்தா, பழி அவங்க தலையில்... ஜெயிச்சா, மத்திய இணை மந்திரி பதவி! சிம்பிள் லாஜிக்!

புருஷோத்தமன், இளங்கோவன் , நாகர்கோவில்

Heading : '... என்றான் அவன்!' (12)- என் குமார்

Comment : எங்கிருந்து இம்மாதிரி ஹைக்கூ வார்த்தைகள் பிடிக்கிறீங்க ப்ரோ... அதை கொஞ்சும் குரலில் கேட்கும்போது சொக்க வைக்குதே!

ஊர்மிளா, திலோத்தமை, மேனகா, கோத்தகிரி, ஊட்டி

Heading : நிர்மலா சீதாராமன் சொன்ன உண்மைகள்

Comment : தேர்தல் அரசியல் என்பது சாமானியனுக்கு என்று சுலபமாக கிடைக்கிறதோ ஜாதி மதம் இனம் என்று பார்க்காமல் என்று வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்களோ அன்றுதான் உண்மையான சமூக நீதி ஜனநாயகம் நமக்கு கிடைத்ததாக பொருள் என்று நிர்மலா சீதாராமன் சொல்கிறார் என்று நீரே எல்லாவற்றையும் கூறிவிட்டீர். பாஸ்... இது கொல மாஸ்! நடக்கவே நடக்காது.

கார்த்திகா குமாரி, ஞானசேகர் , திருவெண்காடு

Heading : எங்கள் தோட்டம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Nostalgic! I have no words to describe how joyful I was reading your article. You made me relive those beautiful moments that I spent in your garden. What a great writer you are to pick a simple topic like this and make us walk down memory lane while cherishing our childhood days. Thank you ❤️🙏🏽.

Kani Maadhavan , Washington DC

Heading : பயப்படுகிறதா பாஜக ?- ஜாசன்

Comment : அப்படீன்னா, பாஜக, பாதியில் ஜர்க்கான கட்சி அல்லது பாதியில் ஜகா வாங்கின கட்சி ன்னு சொல்லுங்க....

Heading : நாச்சியார் கோயில் அதிசய கல் கருடன்!! - சுந்தரமைந்தன்.

Comment : வணக்கம் விகடகவி, கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாச்சியார் கோவிலின் சிறப்பம்சங்கள் பலே ஜோர். சாவிக் கொத்தும் மொத்த பரிபாலனமும் அம்மையின் பொறுப்பில் இருந்த தகவல் அருமை. அதுவே எங்கிலும் நடப்பது கண்கூடு. கல்கருடனின் சிர் மிகு சிறப்புகள் பலப்பல. அறிவியலால் தீர்க்க முடியாத ஒரு முக்கியமான விஷயம் இந்த எடை குறையும்,கூடும் , அம்சம். கல் கருடன் மக்களின் குறை தீர்த்து , வைக்கும் அருள் கொண்டவர். கல்யாணம், குழந்தை வேலை வாய்ப்பு முதலான வரங்களுக்கு இவரை ஒரு முக்கியமான கடவுளாக வழிபடும் முறை உள்ளது. குறிப்பிட்ட வாரங்களுக்கு நம்பிக்கையுடன் வந்து சேவித்து பலன் பெற்றவர் அதிகம். மேலும் இந்த ஊரின் பித்தளை பூஜை பாத்திரங்கள், விளக்குகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. கருடனின் கருணையை நாங்களும் அனுபவித்து உணர்ந்தோம். மகிழ்ச்சி. ரமா ராமச்சந்திரன் ஆதம்பாக்கம்

Heading : குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 17 - ரேணு மீரா

Comment : Procrastination is a time killer. Applicable for adults too.

Manoj, Chenbai