தொடர்கள்
கதை
அம்மனும் ஆர்டரும் ! ஆனந்த் ஶ்ரீனிவாஸ்

20240731100613333.jpg

மன்னார்குடி ஶ்ரீ ராஜகோபால சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, வெளியில் காலணிகளை பாதுகாக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்த போது ,என்னை நோக்கி ஒரு இளைஞன், அவன் மனைவி கைக்குழந்தையுடன் என் அருகில் வந்து ,”சார் வணக்கம் நான் தான் சிவராமன், ஓதுவார் பையன்; பத்து வருடத்துக்கு முன்பு நீங்க போட்ட போஸ்டிங் மூலம் போஸ்ட்மேன் பாசாகி, இப்ப இதே ஊர் போஸ்ட் ஆபீஸில் கிளார்க் சார்.

“அன்னிக்கு உங்க உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் நீங்க எனக்கு வாழ்வு கொடு தீங்க.! ஆசீர்வாதம் பண்ணுங்க சார்! என்று சொல்லி திடீரெனக் காலில் விழுந்த அவனைத் தூக்கி விட்டு, நல்லா இருப்பா” என்று ஆசீர்வதித்தேன்.

பழைய நினைவுகள்....

அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11மணி ”

“நம்ம தெருவில் வசிக்கும் பிரபல அரசியல் கட்சியின் ஒன்றிய செயலாளர், இன்னும் அவர் ஆதரவாளர்கள் வந்திருக்காங்க “ என்று என் மனைவி வந்து சொன்னதும், ஷர்ட் மாற்றிக்கொண்டு அவர்களை வரவேற்று, அவரை வாசல் வெராந்தாவில் போடபட்டுருந்த சேரில் உட்கார சொன்னேன்.

மற்றவர்கள் நின்று கொண்டார்கள்.

“வாங்க சார்! ஏது இவ்வளவு தூரம் ?அதுவும் என்னைத் தேடி.?”

“ஒண்ணுமில்லை சார்! நம்ம கட்சி தொண்டன் பையன் ஒருத்தன்,. அவனுக்குக் கிராம போஸ்ட்மேன் போஸ்டிங் அப்பாயின்ட்மெண்ட் பண்ணனும்.” ஊரின் பெயரையும், மறுநாள் நடக்கப் போகும் நேர்முகத் தேர்வு பற்றியும் ஞாபக படுத்தினார்.

அதற்குள் கூட்டத்தில் பையனின் மாமா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, “அய்யா ஏதாச்சும் எதிர்பார்ப்பு இருந்தா சொல்லுங்க! கொண்டு வந்தருக்கேன்.”

.இந்த நேரத்தில் ஒன்றிய செயலாளர் குறுக்கிட்டு“டேய் சும்மா இருக்கமாட்டே! “

“அவர் அப்பா காலத்திலிருந்து எனக்குத் தெரியும் அவர் அப்பா ஒரு நேர்மையானவர். இவரும் அப்படித்தான். “நம்ம ஊர் தான்.”

என்னைப்பற்றிய விளக்கம் அவர் சொன்னதும், அந்த நபர் வாயை மூடிகொண்டார்.

““சார் !நீங்க சிபாரிசு பண்ற பையன் மெரிட்டில் இரண்டாவது ஆளாக இருக்கான்;. இதற்கு முன்னாடி ஒரு ஓதுவார் பையன் மெரிட்டில் முதலாவதாக இருக்கான். சட்டபடி அவனுக்குத் தான் நான் போடணும்” .

“வேறு வழி ஏதும் இல்லையா”?

“நீங்க வேணுமின்னா ஒன்னும் செய்யுங்க! அந்த ஓதுவார் பையனை இன்டர்வியூக்கு வர விடமா பண்ணுங்க” நீங்க நினைச்சது நடக்கும் “!.

“அது எப்படிச் சார்? அதை நான் எப்படிப் பண்ண முடியும்?” என்றார்.

“அப்பா நான் ஒன்னும் செய்யமுடியாது சார்.”

“நீங்க போகலாம் சார்!எங்க அப்பா மேல மரியாதை உள்ளவர்; தெரிஞ்சவர் ;,ஒரே தெரு, அதனால் தான் இவ்வளவு நேரம் ஒங்க கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். ”

“இந்த அப்பாய்ன்ட்மென்ட் விசயமா யாரையும் அனுமதிப்பதோ அது பற்றிப் பேசுவதும் இல்லை.”

“நீங்க கிளம்பலாம் ”.மறுபடியும் வேகமாகக் கண்டிப்புடன் சொன்னேன்.

“சரி சார்!. இருந்தாலும் ஞாபகம் வெச்சுக்குங்க”

வெளியே போய் க்கொண்டுருந்த போது ஒருவன் ,” என்ன தலைவரே! ஓங்களையே எதிர்த்து பேசிட்டாரு.? நம்ம பலம் என்னன்னு தெரியல அந்த ஆபிசருக்கு.”

“ஆமாண்டா! ஆனா அவர் பேசினதில் என்ன தப்பு இருக்கு?. நீ பணம் வேண்டுமான்னு சொல்லி அவர் கோபத்தை வேறே கிளறி விட்டே”!

“போங்கடா ஊர் போய்ச் சேருங்க!”

“அவர் சொன்ன மாதிரி அந்த ஓதுவார் பையனை, இன்டர்வியூக்கு வர விடாமா தடுக்கும் முயற்சியைப் பண்ணுங்க.”என்று அவர் வீட்டின் உள்ளே சென்று விட்டார்.

"தலைவரே அதுக்கு பேசாம இண்டர்வியூவே நடக்காம ஏற்பாடு பண்ணிட்டா" என்றது அடிபொடிகள்.

“.அரசியல்வாதி பொல்லாப்பு நமக்கு வேண்டாங்கா? ஏதாவது அவனுக்குச் சாதகமா நோட் போட்டு, அப்பாயினட்மென்ட் . பண்ண முடியுமான்னு பாருங்க”

அவளும் மத்திய அரசு அலுவலக ஊழியர் என்பதால் !

“இது மாதிரி சலசலப்புக்கு பயந்தா, நான் வேலை பாக்க முடியாது.”

நீ போய் உன் வேலையைப் பாரு”. அவளை விரட்டினேன்.

அந்த ஊருக்கு அஞ்சலகத் துறையின் உதவி கண்காணிப் பாளாராக மாற்றலாகி வந்து இரண்டு மாதம் ஆகியிருந்தது. புறநிலை ஊழியர்களை வேகசன்ஸி வரும் போது நியமிக்கும் பொறுப்பு.என்னுடையது.

மறுநாள் காலை 9மணி. பஸ் பிடிப்பதற்காகப் பஸ்ஸ்டாண்ட் போனதும், அங்குள்ளவர்கள்” “கூட்டம் நிரம்பியதால் பஸ் 0855க்கே எடுத்து போயிட்டாங்க” என்றார்கள்.

அந்தக் கிராமத்துக்குக் காலை ஒன்பது மணி,மதியம் ஒரு மணி,இரவு ஏழு மணி மட்டும் தான் பஸ் போய் வரும்.

அந்த ஊரில் ஆறு ஓரமாகப் பஸ்ஸ்டாண்ட் என்கிற பெயரில் ஒரு கீத்துகொட்டகை.

கடைத்தெரு மற்ற தெருக்கள் பள்ளமான பகுதியில்.அரைக் கீ மீ தூரம் . நடமாட்டம் இல்லாத பகுதி.

எப்படியும் காலை பத்து மணிக்கு அந்தக் கிராமத்தின் ஆபீஸில் இருக்க வேண்டும் என்று நினைத்த நான், மாற்று ஏற்பாடாக, வேறு பஸ்ஸில் ஏறி மெயின் ரோடில் உள்ள அந்தக் கிளை அலுவலகத்துக்குச் சென்று, போஸ்ட்மாஸ்டர் கொடுத்த டிவிஎஸ்ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

வண்டியின் முகப்பில் சமயபுரம் அம்மன் துணை என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. கிளை அலுவலகப் போஸ்ட்மாஸ்டர் சமயபுரம் அம்மன் மீது பக்தி உடையவர் என்று எனக்கு ஏற்கனவே தெரியும்.

அங்கிருந்து அஞ்சு கீ. மீ தொலைவில் தான் அந்தக் கிராமம். நான் ஊரை நெருங்கிய சமயம் நான் தவற விட்ட அந்தப் பஸ் திரும்பியிருந்தது .

நிறையப் பயணிகள் கூட்டம்.டிரைவரிடம் சக பிரயாணிகள் ,” சீக்கிரம் போங்க !சீக்கிரம் போங்க! உயிர் ஊசலாடுது.ஆஸ்பத்திரி போகணும் “என்று கத்திகொண்டே இருந்தார்கள்.

அந்தப் பேருந்து தடம் இருபது அடி அகலம்; மிகவும் குறுகாலான பாதை. வலது பக்கம் ஆறு .தண்ணீர் வெள்ளமாகப் போய்க் கொண்டுருக்க . இடது பக்கம் வயல்கள். எதிர் பக்கம் வண்டி வந்தால் கொஞ்சம் நிறுத்தி விட்டுப்பின் செல்லவேண்டும்.

கொஞ்சம் கவனக்குறைவு ஏற்பட்டால் ,பஸ் தலை குப்பற ஆற்றிலோ இல்லை பள்ளமான பகுதியில் இருக்கும் வயல்களில் விழுந்து விடும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் டிரைவர் வேக வேகமாக டவுன் ஆஸ்பத்திரிக்குப் பஸ்சை ஓட்டி சென்றார்.

ஆபிஸ் அடைந்ததும் பிராஞ்ச் போஸ்ட்மாஸ்டர் வரவேற்றார்.

“என்னப்பா பத்து பேர் மட்டும் ஆஜர். மற்றவர்கள் வரவில்லையா என்றேன்”

குறிப்பாக என் கண்கள் அந்த ஓதுவார் பையனையும், ஒன்றிய செயலாளர் சிபாரிசு செய்த பையனையும் தேடின. ஓதுவார் பையன் மட்டும் இருந்தான். ஒன்றிய செயலாளர் குறிப்பிட்ட பையனை காணவில்லை.

போஸ்ட் மாஸ்டர் என்னைத் தனியே கூப்பிட்டு ,

“ஒன்றிய தலைவரை நீங்க அவமானப் படுத்தி விட்டீர்களாம்; அதற்குப் பழி தீர்க்க. நீங்க பஸ்சை விட்டு இறங்கி நம்ம ஆபிஸ் வருவதற்குள், ஒங்க கை கால்களை ஒடித்து ,காயப்படுத்தி இன்னிக்கு நேர்முகத் தேர்வு நடக்க விடாமல் திட்டம் போட்டு இருந்தாங்க.”

“இந்த விஷயம் காலை பத்து மணி அளவில் தான் தெரியும். ஒங்களுக்கு எப்படித் தகவல் கொடுப்பது என்று பஸ்ஸ்டாண்ட் பக்கம் நானும் நின்றேன்”.

திடீரென ஒரு கும்பல் “ஏண்டா பொறுக்கி நாயே! கைய பிடிச்சு இழுக்க ,எங்க ஜாதி பொண்ணுங்க தான் கிடைச்சுதா ?என்று சப்தம் போட்டு,அவனையும் அவன் மாமவையும் அடித்து நொறுக்க வந்த சோழன் பஸ்ஸில் அவங்க ஏறி டவுன் ஆஸ்பத்திரிக்கு போ யிட்டாங்கா.” ஒரே கலவரமாகப் போச்சு. சார் என்றான்.

“அப்ப தான் எனக்கு நிம்மதி ஆச்சு. நீங்க அந்தப் பஸ்சில் வரலைன்னு. தெரிஞ்சுது.”

நான் கிளம்பும் போதே என் மனைவி என்னை எச்சரித்து ” .ஜாக்கிரதையா போயிட்டுச் சீக்கிரம் வாங்க “என்றாள்.

அந்த ஓதுவார் பையனிடம் அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை கையில் கொடுத்தேன்.

நான் பஸ்சை தவற விட்டது; கிளை போஸ்ட்மாஸ்டரின் ஸ்கூட்டியில் ,சமயபுரம் அம்மன் ஸ்டிக்கர் இருந்தது ;என் மனைவி சமயபுரம்அம்மன் மேல் வைத்த பிரார்த்தனை; இவையெல்லாம் சேர்ந்து நான் உன்னோடு கூடவே வருகிறேன் பயப்படாதே என்று என்னுடன் பயணித்தது எல்லாம் அவளின் திருவிளையாடல் தானோ!.