
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
புக்கா அக்ராஹாரம் - ஆந்திர
தோண்ட தோண்ட புதையலாக நமக்கு ஸ்ரீ மகா பெரியவாளின் அனுக்கிரஹம் வாரம் தோறும் கிடைக்கின்றது.

ஆந்திராவில் திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவிலும், நகரி அருகில் இருக்கிறது புக்கா அக்ராஹாரம். ஸ்ரீ மகா பெரியவா 1939ல் சாதுர்மாஸ்ய விரதம் இருந்து ஆச்சார்யாள் ஸ்ரீ பகவத் பாதாள் அவர்களுக்கு கோயில் அமைத்து தென்னகத்துக்கு ஒரு காசி என்று பெருமையாக கருதப்படும் பல்லாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி சமேத ஸ்ரீ காசி விஸ்வேஷ்வர ஆலயம் பற்றிய பதிவு இது.
நாம் போற்றும் நடமாடும் தெய்வம் தனது சிறுவயதிலேயே சனாதன தர்மம் தழைத்தோங்க பாரத தேசம் எங்கும் சென்று இப்படி பல அறிய ஆன்மீக தளங்களை நமக்கு அளித்துள்ளார்.

Leave a comment
Upload