தொடர்கள்
கதை
மாதங்கி - கவிதா ராஜகோபாலன்

20250709011035800.jpeg

மாதங்கி தன் புருவத்தைபென்சிலால்திருத்திக்கொண்டிருந்தாள். பரபரப்பான காலை. விடாது போன் அடித்துக்கொண்டிருந்தது. அவளுக்குத் தெரியும் அந்த ரிங்டோன் அம்மாவுக்கானது.

என்ன பேசப் போகிறாள் என முன்கூட்டியே தெரியும் என்பதால் எடுப்பதை தவிர்த்தாள். சாரங் காலையிலேயே கிளம்பி விட்டான். ஏதோ சேல்ஸ்மீட். அவனோடு சரியாக பேசி மூன்று நாளுக்கு மேலிருக்கும். ' தன் வாழ்க்கை மட்டும் ஏன் எதற்குமேநேரமில்லாமல்' மேலெழும்பியபச்சாதாபத்தைபிரிக்காமல் திருப்பி அனுப்பும் அமேஸான் டெலிவரியாய் மனசின் அடி ஆழத்திற்கு அப்படியே அனுப்பி வைத்தாள். ' டேவ ஸ்பாயில் பண்ணிடும்' ஸ்ப்ரௌட்ஸில் லெமன் பிழிவதில் கவனத்தை செலுத்தினாள். இரண்டு வாழைப்பழங்களை எடுத்து பேகில் போட்டவள், வாழைப்பழம், மாதுளை, மாம்பழமெனஅடுக்கியிருந்த தட்டை அவளுடைய சின்ன பூஜை அறையில் கொண்டு வைத்தாள். கண் மூடி சில நிமிடம் ' நமஸ்தேதுமஹாமாயே' சொல்லியபடியே அவசரமாய் ஆரத்தி காண்பித்து, துப்பட்டாவை சரிசெய்து கண்ணாடி முன் ஆபிஸ் டாகைமாட்டியபடி ஒரு நிமிடம் பார்த்தாள்... ' ரெண்டு நாள் பெண்டுகழலறவொர்க்.. கண்ணு கொஞ்சம் டல்லாருக்கு... பட் மாதங்கி... பக் அப் கேர்ல்... இன்னிக்கு டீ டே... '
போனை எடுத்தபடி கதவை சாத்த போனவள் என்ன தோன்றியதோ, திரும்பவும் பூஜையறையில்...
' சாரி' ' 'கூடவேயிரு' அவளுக்கு பிடித்த முத்தேவியருக்கான அந்த ப்ரேமை பார்த்து சார்ஜ்ஏற்றிக் கொண்டு, கதவை சாத்தி, ஹெல்மெட் மாட்டி, டூவீலரை ஸ்டார்ட் செய்தாள்.
மீண்டும்' அம்மாவென்றழைக்காத...'
'வ்யூ மா' போனை எடுக்காமல் வண்டி வேகமெடுத்தது.

' மாதங்கின்றது. சரஸ்வதியோடபேரு... ராஜ மாதங்கின்னு லலிதா சகஸ்ரநாமத்துலவருமாம்.. பேச்சு, பாட்டுனு சகலகலாவல்லியாவருவேன்னு சொல்லி கோவில் குருக்கள் வச்சது.'

அவள் அம்மா ஆயிரம் முறைக்கு மேல் சொன்ன வரிகள். பெயருக்கேற்றாற் போல் சகலகலாவல்லி... எல்லாவற்றிலும் முதல்... மைக் பிடித்த கை தொடர ஜர்னலிசம் படித்தாள். விஷுவல்கம்யூனிகேனும் சேர்ந்து கொள்ள டாப் தனியார் சேனலில்ரிபோர்ட்டர். புரிதலோடு. சாரங்கும் வாழ்க்கையில் இணைந்ததில் டபுள் தமாக்கா...
ஆனால் சில நாட்கள் மட்டும் இந்த வொர்க்லைப்பேலன்ஸ் அவளை குற்றவுணர்வுக்குள்தள்ளிவிடும்.

இன்றும் அப்படித்தான். நேராக ஆபிஸ் சென்று, கேமராமேன் சகிதம் கவர்னர் மாளிகை முன் ஆஜர்.

ஆறு நாட்களாக தூய்மை பணியாளர்களின் தர்ணா, தங்களை பணி நீக்கம் செய்வதை எதிர்த்து. இரண்டு நாட்களாய் நகரின் வெவ்வேறு இடங்களில் குப்பை குவிந்திருப்பதை படம் பிடித்து பேசியாகிவிட்டது. முந்நூறுக்கும் மேல் பெண்கள் வாழ்வாதாரத்திற்காய்...

சோர்ந்த அழுக்கான உடைகள், காலையிலேயே சுட்டெரிக்கும்வெயிலில் வதங்கிய முகங்கள், எங்கோஒட்டிக்கொண்டிருக்கும் நம்பிக்கை....

மாதங்கி கூட்டத்திற்குள் புகுந்து புகுந்து பேட்டி எடுத்துக் கொண்டிருந்தாள்..

நாக்கு வரண்டது...
வேனுக்கு சென்று தண்ணீர் பாட்டிலைதொண்டைக்குள்சரித்தாள்....

பத்தடி தொலைவில் கூட இல்லாத அந்த கூட்டத்திலிருந்து ஒரு சின்னப் பெண் இவளை கீழ்க் கண்ணால் பார்த்தது.

' ம்ம்ம்... வேணுமா...' மாதங்கி பாட்டிலை நீட்டினாள். ஒரே நொடி தான். தயக்கத்தை தூக்கி போட்டு இவளிடம் ஓடி வந்தது...
' ஆஆ காட்டு' மாதங்கி சொன்னதும் வேண்டாமென்று தலையை ஆட்டியது....

கூட்டத்தில் குட்டிப் பெண்ணின் சாயலில் ஒரு பெண் மடியில் குழந்தையோடு...
வேர்வை கோடுகள்வழிந்தபடி...

மாதங்கிக்கு என்னவோ செய்தது. பாட்டிலை அப்படியே குடுத்தாள்...

தூக்க முடியாமல் தூக்கி ஓடிய குழந்தை அம்மாவிடம் நீட்டியது.

அப்போது தான் அவள் மாதங்கியை பார்த்தாள். உலர்ந்த உதடுகள் புன்னகைக்கமுயற்சித்தது.

ஒரு மிடறு கூட குடிக்கவில்லை. சும்மா தொண்டையைநனைத்திருப்பாள்...
கடகடவென்று பாட்டில் கை மாறியபடியிருந்தது...
வெயில் காலத்து தரை இழுத்துக் கொள்ளும் தண்ணீராய்...
ஒரு சிலருக்கு மட்டும் போதும் போதாமல்.. பாட்டில் தீர்ந்தேவிட்டது.


அதுவரை எடுத்த பேட்டியால் மாதங்கிக்கு அவர்கள் வாழ்க்கை ஓரளவு புரிபட்டது.

தண்ணீர் கிடைக்காமல் ஏமாந்த முகங்களை பார்க்க என்னவோ போலிருந்தது.

' என்னாலமுடிஞ்சத ....செஞ்சேன்'
சப்பைக்கட்டு குரலில் அவளுக்கு சம்மதமில்லை.

' தனியொருவனுக்குஉணவில்லையெனில்...' ஒன்பதாம் வகுப்பு மாதங்கி உள்ளிருந்து குரல் குடுத்தாள்.

மைக், டாக் இரண்டையும் வேனில் வைத்தாள்.


வேனை சற்று தூரம் ஓட்டச் செய்தாள்.
தண்ணீர் ட்ரேக்கள்அடுக்கப்பட்டது.
கடைகளிலிருந்தபன், பிஸ்கட்டுக்கள், சானிடரிநாப்கின்ஸ், டெட்ராபாக்கில் பால் டப்பாக்கள்... எல்லாமாகவேனைநிறைத்தது.

நின்ற வேனிலிருந்துட்ரேக்கள் பெண்கள் வரிசைகளுக்கு மாறி சென்றது.

சுழன்று சுழன்று மாதங்கி எல்லோருக்கும் கொண்டு வந்ததை குடுத்துக்கொண்டிருந்தாள்.

நடுவில் சாரங்கிற்கு போன் செய்து தேவையைகூறினாள்.

அவ்வளவு தான்...
அடுத்தகட்டநடவடிக்கையாக, மத்தியான உணவை கட்டி எடுத்து வர கிளம்பி விட்டாள்.

திரும்ப வந்தவள் மாதங்கி அல்ல. அன்னபூரணி. தங்கள் நிலைமைகளில் போராடி களைத்த அந்த கூட்டத்தின் நடுவே அவள் அப்படித்தான் தெரிந்தாள்.


சற்று தொலைவிலிருந்தபொதுக்கழிப்பறைக்குள் போய் வந்த பெண்கள், முந்தானையில் மறைத்தபடிநன்றியோடுபுன்னகைத்தார்கள்.

அன்றைக்கான போராட்டம் முடியப் போகும் நேரம்.
கண்களாலேயேபிரியா விடை பெற்றாள் மாதங்கி.
இதையெல்லாம் எடுக்க வந்த கேமராமேனை தடுத்து விட்டாள்.

அந்த முகங்களில் தெரிந்த ஆசுவாசங்களின் நிறைவு இவளையும்தொற்றிக் கொண்டது. ஏதோ மனதெல்லாம் நிறைந்து, களைப்பையும் மீறி... சிரிக்கும்கண்களோடு வண்டியை ஓட்டத்துவங்கினாள்....

' அம்மாவென்ற..'

ஓரமாய் நிறுத்தி போனை அட்டெண்ட் செய்தாள்.

' காலைலேர்ந்து போன் எடுக்க மாட்டியா? இன்னிக்கு வரலட்சுமிநோம்புக்கு பூஜபண்ணியா? மைக்கதூக்கிட்டுஓடவேசரியாயிருக்குன்னாத.. சின்ன வயசுலஅம்பாளுக்கு வுல்லுலஜடதச்சி, அலங்காரம் பண்ணி, பூஜ, நைவேத்தியத்துக்கெல்லாம்கூடவேயிருப்பியே...
வழக்கத்தவிட்டுடலியே.. சாரங்க்வீட்டுலயும் உண்டு....பண்ணாம இருக்க கூடாது... பண்ணிட்டதானே...'

அவள் தொண்டையிலிருந்துவிசுத்தி சக்கரம் விரிந்து, ' பண்ணிட்டேம்மா, நிறைவாபண்ணிட்டேன்' குரல் எழுந்தது.

வீட்டின் காலிங்பெல்லை அடித்தாள்...
கதவு திறந்தது,
மாதாமரகதஸ்யாமா
மாதங்கி மதசாலினி'

டேப்ஒலித்துக்கொண்டிருந்தது...

பூஜையறையில் சாம்ப்ராணியோடு.... சாரங் !!