டில்லியில் கர்த்தவ்ய பவன் திறக்கப்பட்டது.
சென்ற 6 ஆம் தேதி பிரதமர் மோடி டில்லியில் கர்த்தவ்ய பவன் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
1.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு அத்தனையும் நவீன வசதிகள் கொண்ட அலுவலக வளாகம்.
வருடாந்திர வாடகை ₹1,500 கோடி மிச்சம். இது ஒன்றே போதுமே.
டில்லியில் சிதறிக்கிடக்கும் இந்த அரசு அலுவலகங்களினால் தினமும் 8,000 முதல் 10,000 ஊழியர்களின் அமைச்சகங்களுக்கு இடையிலான பயணம், அதற்கான நூற்றுக்கணக்கான வாகனங்களின் நகர்வு ஆகியவற்றால் ஏற்படும் அனாவசிய பண செலவினங்கள், அரசின் முக்கிய குறிப்பேடுகளின் வெளியே திரிதல், முடிவுகள் எடுக்க ஆகும் அனாவசிய நாட்கள், நிர்வாக செயல் திறனில் பாதிப்பு இப்போது இருக்காது.
*************************************************************************************
இளமையும் முதுமையும் பகிர்ந்த ஐஐடி டில்லியின் 56 ஆம் பட்டமளிப்பு விழா
530 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற, 2, 764 மாணவர்கள் டிகிரி பட்டம் பெற்றனர்.
20 வயது சந்தன் கோத்ராவும் 63 வயது கோபால் கிருஷ்ண தனேஜாவும் டிகிரி பட்டம் பெற்றனர்.
***************************************************************************************
மும்பையில் – குடிக்க வாட்டர் பாட்டலும் கொரிக்க ஸ்னாக்ஸும் காம்ப்ளிமென்டரியாத் தருகிறார்
காட்கோப்பர் என்னுமிடத்தில் இந்த வசதிகள் அடங்கிய ஆட்டோ சவாரியப் பெற்றவர் நெட்டில் இதைப் போட ஷொட்டுக்கள் குவிந்த வண்ணமிருக்கின்றன.
கூடவே மெல்லிய ஒலியில் சினிமா பாடல்கள்…
***********************************************************************************
வாஷிங்க்டன் சுந்தரும், சுந்தர் பிச்சையும்
சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து-இந்தியா தொடரின் ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் மேட்சின் மூன்றாம் நாளில் நமது வாஷிங்க்டன் சுந்தர் மைதானத்தில் அதிரடி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்க வர்ணணையாளர் அறையில் ஹர்ஷா போக்ளேயுடன் நமது சுந்தர் பிச்சை, கூகுள் கம்பெனி தலைவர், சேர்ந்து கொண்டு வர்ணனையில் ஈடுபட்டார்.
ஒரு சுந்தர் ஆட இன்னொரு சுந்தர் பேச…….
************************************************************************************
சர்வதேச மொழியியல் ஒலிம்பியாட் 2025
[இடப்பக்கத்திலிருந்து இரண்டாவதாக இருக்கும் நமது வாகீசன் சுரேந்திரன் முதல், அதாவது தங்கப்பதக்கம் பெற்றவர்]
தாய்வான், தைபேயில் நடந்து முடிந்த இந்த சர்வதேச போட்டியில் இந்தியா 1 தங்கம், 1 வெண்கலப் பதக்கம் மற்றும் 2 கௌரவப் பதக்கங்களை வென்றது.
நமது தமிழகத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர் வாகீசன் சுரேந்திரன் தங்கம் வென்றவர். இவருக்கு தன் தாய் மொழி தமிழ் தவிர ஆங்கிலம், மந்தாரின், ஸ்பானிஷ், ஹிந்தியில் புலமை அதிகம்.
அவரது மொழியியல் புலமை 34 வெவ்வேறு மொழிகளின் எழுத்துக்களைப் படிக்கும் திறனால் வெளிப்படுகிறது.
மொழிப்பற்று என்றால் இது தான் !!!
************************************************************************************
Leave a comment
Upload