அப்போது தர்ஷன் அந்தத் திருமண வரவேற்பில் இருந்த அந்த அழகான இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தான். தர்ஷனுக்கு மட்டும் என்ன குறைச்சல்? தெருவில் அவனும், அவன் மனைவியும் நடந்து போனால், ’என்ன நீங்கள் இருவரும் சினிமா ஆர்டிஸ்ட்டா?’ என்று பார்க்கும் எல்லோரும் அவர்களைக் கேட்பார்கள். அந்த அளவுக்கு அழகானவர்கள்.
அது ஒரு நான்கு மாடி கட்டிடக் கல்யாண மண்டபம். கார் பார்க்கிங். ரிசப்ஷன் ஹால், பெண் வீட்டார் தங்குமிடம், மாப்பிள்ளை வீட்டார் தங்குமிடம் என நான்கு மாடிகள். இதையெல்லாம் சுற்றி சுற்றி கல்பனாவை தேடித் தேடி பார்த்து வந்த தர்ஷன் களைப்படைந்து விட்டான். கல்பனாவை அவனால் பார்க்கவே முடியவில்லை. அவளுடைய மொபைலிலும் பேச முயற்சி செய்து பார்த்து தோற்றுவிட்டான்.
தர்ஷனுக்கு அவன் புது மனைவி கல்பனாவிடம் ஒரு வேலை இருந்தது. மணப்பெண்ணுக்கு முகூர்த்தத்தின் போது போட வைத்திருந்த மோதிரம் அவளுடைய பையில்தான் இருக்கிறது. கல்யாணப்பெண் ஷிவானி அவனுடைய மாமாப் பெண்தான்.ஒரு காலத்தில் ஒருவரை ஒருவர் விரும்பியவர்கள்.மோதிரத்துக்கு பதிலாக வேறு கிஃப்ட் வாங்கித் தரலாம் என்று சொன்னாள் அவனின் மனைவி கல்பனா.அவளுக்கு மோதிரத்தை கிஃப்டாகக் கொடுப்பது கல்பனாவுக்கு துளியும் பிடிக்கவில்லை. தர்ஷனுக்கு அவள் மீது இருந்த விருப்பமே இதற்கு காரணம் என்ற நினைப்பு அவளுக்கு.
அப்பாவின் கட்டாயத்தால் ஷிவானி தன் அத்தைமகன் அனந்துவுக்கு கழுத்தை நீட்டுகிறாள்.கல்பனா. ’வேண்டுமென்றே தன்னை அலைகழிக்கிறாளோ?’ என்ற எண்ணம் அவனின் மனதில் ஓடியது.
தான் இருக்கும் இடத்திற்கு அவளை வரவழைக்க அவனுக்கு ஓர் ஐடியா கிடைத்தது.அவன் கண்காணிப்பு கேமராவில் நன்கு தெரியும் வகையில் ரிசப்ஷன் இடத்திற்குச் சென்றான்.அங்கு உள்ள கேமராத்தான் மண்டபத்தின் உள்ளே வருவோர்,போவோர் எல்லோரையும் தெளிவாகக் காட்டும். நெடு நேரமாக அந்த ரிசப்ஷன் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தான் தர்ஷனுக்கு .அவன் நினைத்தது நடந்த பாடில்லை.
தர்ஷன் தன் மாமாப் பெண் பக்கம் போவதற்கு தர்ஷனுக்கு தடை போட்டிருந்தாள் கல்பனா. தர்ஷன் அதை மீறிவிடுவானோ என்ற சந்தேகம் கல்பனாவுக்கு நிறையவே இருந்தது. அதனால் தர்ஷனின் மாமாப் பெண் மேல் அவளுடைய கவனமெல்லாம் இருந்தது. சொன்னபடி நடந்துக் கொண்ட தன் கணவனை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டாள் கல்பனா.
இதுவரை ஷிவானியின் மீது இருந்த கல்பனாவின் பார்வை இப்போது ரிசப்ஷன் கேமராவின் மேல் எதேச்சையாக மாறியது.அங்கு தன் கணவன் தர்ஷன் ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் சிரித்து, சிரித்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்து விட்டாள்.அந்த பெண்ணின் முகத்தை பெரிதாக்கி பார்த்தாள்.எதிரே இருந்த கண்ணாடியில் தன்னைப்பார்த்துக் கொண்டாள்.அவள் தன்னை விட அழகாகத்தான் இருக்கிறாள். அதனால்தான் அவன் அங்கே போய் வழிகிறான் என்ற முடிவுக்கு வந்தாள்.
தர்ஷனுக்கு முன்னால் போய் நாலு வார்த்தை ’நறு’க்கென்று கேட்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.ஏதோ வேலையாக கூப்பிட்ட அம்மாவின் அழைப்பைக் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் லிப்ஃட்டுக்கு அருகில் வந்தாள்.அங்கே ஏற்கெனவே கூட்டம் அதிகம்.ஆறு பேருக்கு மேல் இருந்தார்கள்.’விரு’, ’விரு’ வென்று நான்காவது மாடியிலிருந்து தரைதளத்திற்கு படிக்கட்டின் வழியே தாவித் தாவி வந்தாள்.
ரிசெப்ஷனுக்கு வந்து சேர்ந்த புது மனைவி கல்பனாவைப் பார்த்த அவளது கணவன் தர்ஷன், ’அம்மாடி,உன்னை எங்கெல்லாம் தேடுவது.ஒரு மணிநேரமா‘உன்னை நான் தேடித் தேடி…‘எனப்பாடத் தொடங்கினான். கடுப்பில் இருந்த கல்பனா,’ என்ன அவளோட இங்க இவ்வளவு நேரம் பேச்சு? என்று ‘வல்’லென்று தன் சன்னக் குரலில் அவன் மீது எரிந்து விழுந்தாள்.ரிசெப்ஷன் பெண் தர்ஷனைப் பார்த்து புன்னகைத்து அவனை வழியனுப்பி வைத்தாள்.கல்பனாவின் கடுப்பு உச்சத்துக்கு போனது.
ரிசப்ஷன் பெண்ணுக்குத் தான் தெரியுமே கல்பனாவை வரவழைக்கத்தான் இந்த சிசிடிவி டிராமா என்பது.பொஸஸிவ் பொண்டாட்டி கல்பனா எப்போதும் இப்படித்தான் என்று உங்களுக்கும் இப்போது புரிந்திருக்குமே!
Leave a comment
Upload