ஓபிஎஸ், பிஜேபி கூட்டணியில் இருந்து விலகுவது நமக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்ற பயம் பிஜேபிக்கு வர தொடங்கி இருக்கிறது. அதனால் தான் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என்று பிஜேபி தலைவர்கள் சிலர் வேண்டுகோள் விட்டார்கள். சமீபத்தில் சென்னைக்கு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் வந்தார். அவர் ஓபிஎஸ்ஐ சந்திப்பார் என்று கூட சொல்லப்பட்டது. அப்படியெல்லாம் நடக்கவில்லை.
பிஜேபி வேண்டாம் என்பது தான் பெரும்பான்மை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கருத்து. டிடிவி தினகரன் ,ஓபிஎஸ்ஸிடம் பாரதிய ஜனதா தலைவர்கள் பேசுகிறார்கள் என்பது தவறான தகவல்.
நான் அவரிடமே இதைக் கேட்டேன் அந்தத் தகவல் பொய் என்று ஓபிஎஸ் என்னிடம் சொன்னார் என்று நிரூபர்களிடம் சொல்லி இருக்கிறார் டிடிவி.
முக்குலத்தோர் ஒட்டு ஓபிஎஸ் வசம்தான் என்று இன்னமும் பாரதிய ஜனதா நம்பிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் அதிமுகவினர்.
அதிமுகவைப் பொறுத்தவரை ஓபிஎஸ் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
Leave a comment
Upload