தொடர்கள்
விகடகவியார்
எடப்பாடி பழனிச்சாமி -விகடகவியார்

20250715181218910.jpeg

ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் செய்து கொண்டு திமுகவுக்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்தாலும் இன்னொரு பக்கம் பாஜக கூட்டணி பிடிக்காமல் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார். பிஜேபி, அதிமுக, ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி என மாறி மாறி இருந்த மைத்திரேயன் திமுகவில் அடைக்கலம். இது தவிர செந்தில் பாலாஜி கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை பகுதிகளில் உள்ள அதிமுக டிடிவி தினகரன் கட்சி உள்ளூர் நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.