கயாடுலோகர்
சென்ற ஆண்டு வெளியான இந்தி படம் 'கில்' இந்தப் படத்தின் தென்னிந்திய மொழி ரீமேக் உரிமையை இயக்குனர் ரமேஷ் வர்மா வாங்கி இருக்கிறார். தமிழில் கில் ரீமேக் விரைவில் வெளியாக இருக்கிறது. துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக கயாடுலோகர், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கேதிக்கா சர்மா நடிக்க இருக்கிறார்கள்.
கூலி
கூலி படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரம் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. ரஜினிக்கு 200 கோடி, அமீர்கான் 20 கோடி என்று சொல்லப்பட்டாலும் அவர் ஒரு பைசா கூட வாங்காமல் நடித்திருக்கிறார் .நாகர்ஜுனா 10 கோடி சுருதிஹாசன் 4 கோடி, சத்யராஜ் 5 கோடி, கன்னட நடிகர் உபேந்திரா 5 கோடி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 50 கோடி, இசையமைப்பாளர் அனிருத் 15 கோடி வாங்கி இருக்கிறார்கள்.
அமைரா தஸ்தூர்
அனேகன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் அமைரா தஸ்தூர். பிரபுதேவாவுடன் பஹிரா படத்தில் நடித்தார். இன்ஸ்டாவில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை இவர். மினுமினுக்கும் உடையில் தனது போட்டோ சூட் பகிர்ந்திருக்கிறார். காந்தக் கண்ணழகி என்று அவரை புகழ்ந்து சொல்கிறார்கள் வலைதளத்தில் ரசிகர்கள்.
மிருணாள் தாக்கூர்
மிருணாள் தாக்கூர் ,தனுஷ் காதல் பற்றி நடிகையிடம் நிருபர்கள் கேட்ட போது அவர் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான் அவருடன் காதல் என்ற செய்தி கேள்விப்பட்டபோது எனக்கு சிரிப்பு தான் வந்தது என்கிறார்.
ஸ்ருதி ஹாசன்
கூலி படத்தில் சத்யராஜ் மகளாக நடித்திருக்கும் ஸ்ருதிஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜை புகழ்ந்துத் தள்கிறார். படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருப்பார். ரொம்பவும் கூல். அதே நேரத்தில் நடிகர்களிடம் தனது காட்சிக்கு என்ன தேவையோ அதை வாங்காமல் விடமாட்டார் என்று குறிப்பிட்டு இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
திஷா பதானி
திஷா பதானி ,சூர்யா ஜோடியாக கங்குவா படத்தில் நடித்தார். பாலிவுட் நடிகையான இவர் சமூக வலைதளத்தில் அதிக ஆர்வம் காட்டுவார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிடுவார். தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி படங்கள் இவை.
கஜோல்
நடிகை கஜோல் தனது 51-வது ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது பத்திரிகையாளர்களிடம் ஆங்கிலம் மற்றும் மராத்தியில் பேசினார். அப்போது ஒரு நிருபர் இந்தியில் பதிலளிக்குமாறு கேட்க "நான் இந்தியில் பேச வேண்டுமா? யாருக்கு பொருள் புரிய வேண்டுமோ அவர்களுக்கு புரியும் "என்ற அவர் பதில் தற்சமயம் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
திரிஷா
சசிகுமார் சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி படத்தை புகழ்ந்து தள்ளுகிறார் நடிகை திரிஷா. நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும் நல்லதே நடக்கும் என்பதற்கு சரியான உதாரணம் சசிகுமார் என்று அவரைப் பாராட்டி இருக்கிறார் நடிகை திரிஷா.
அர்ஜித்
இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். முருகதாஸ் இயக்கும் மதராசி படத்தில் பணியாற்றி வருகிறார். அவரும் விரைவில் நடிக்க இருக்கிறாராம் அர்ஜித்தை இயக்க இருப்பவர் அட்லீயிடம் உதவி இயக்குனராக இருப்பவராம்.
நித்யா மேனன்
தலைவன் தலைவி, இட்லி கடை போன்ற கதைகளில் நடித்த நித்யா மேனன் தொடர்ந்து கிராமத்து வேடங்களில் நடிக்க தான் விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார்.
சிவகார்த்திகேயன்
தனுஷ் வழியில் நடிகர் சிவகார்த்திகேயனும் தெலுங்கில் நடிக்க விரும்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
Leave a comment
Upload