தொடர்கள்
நேயம்
"காட்டின் மூலவர் யானை " - ஸ்வேதா அப்புதாஸ்

ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி உலக யானைகள் தினம் அனுசரிக்க படுவது பிரமாண்ட யானைகளை பாதுகாப்பதே! என்கிறார் வன ஆர்வலர் பாண்டியராஜா .

20250714235555408.jpg

உலக யானைகள் தினத்தின் முக்கியத்துவத்தை குறித்து சற்று விரிவாக பேசினோம் .

" உலக யானைகள் தினம் கடைபிடிக்க முக்கிய காரணம் ஒரு திரைப்படம் தான் .2012 ஆகஸ்ட் 12 ஆம் தேதி

' வனத்திற்குள் திரும்பு' என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் தயாரித்தார் .இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை காட்டிற்குள் மீண்டும் விடுவது என்பதுதான் .அன்றைய தினத்தை ' உலக யானைகள் தினமாக அனுசரிக்க பட்டுவருகிறது .

' காட்டின் மூலவர் ' என அழைக்கப்படும் யானைகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 200 ஆக அதிகரித்துள்ளது என்று வனத்துறை கூறினாலும் யானைகள் பல்வேறு சாவால்களை எதிர்த்து போராட வேண்டியுள்ளது .

மனித உயிர்கள் உள்ளிட்ட பல்லுயிர்களுக்கும் காடுகள் மிக அவசியம் காடுகள் செழிப்பாக இருக்க வேண்டுமென்றால் யானைகளின் நடமாட்டம் அவசியம் என்கிறார் .

"ஒரு விஷயம் தெரியுமா ?! .. 2017 ஆம் ஆண்டு வனத்துறையின் கணக்கின் படி இந்தியா முழுவதும் 29964 யானைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இதில் அதிகமாக கர்நாடக மாநிலத்தில் 6049 யானைகளும் ,

அசாம் மாநிலத்தில் 5719 யானைகளும் ,

கேரளாவில் 5706 யானைகளும் ,

தமிழ்நாட்டில் 2761 யானைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது .

மேலும் தமிழ்நாடு , கேரளா , ஆந்திரா உள்ளிட்ட தென் மாநில மண்டலத்தில் 14612 யானைகளும் , அசாம் , அருணாச்சலப்பிரதேஷ் உள்ளிட்ட வடகிழக்கு மணிலா மாநிலத்தில் 10139 யானைகள் இருப்பதாக வனத்துறை தெரிவிக்கிறது" என்று கூறும் பாண்டியராஜா

20250714235711461.jpg

" தமிழ்நாட்டில் வனத்துறை கணக்கின்படி 2017 ஆம் ஆண்டு யானைகளின் எண்ணிக்கை 2761 என்றும் .

2023 ஆம் ஆண்டில் யானைகளின் எண்ணிக்கை 2961 ஆக உயர்வு .ஐந்து ஆண்டுகளில் 200 யானைகள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறது ஒரு அறிக்கை .

மேற்கு தொடர்ச்சி மலையில் 1858 யானைகளும் கிழக்கு தொடர்ச்சி மலையில் 1105 யானைகளின் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது .

மேலும் நெல்லை , தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய அகத்தியர் மலை யானைகள் காப்பகத்தில் 237 யானைகள் உள்ளதாக தகவல் உண்டு என்கிறார் .

யானைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருந்தாலும் அவைகளுக்கு அச்சுறுத்தலும் வாழ்விற்கு ஏகப்பட்ட சவால்கள் உள்ளது என்பது கவலையளிக்கிறது என்கிறார் பாண்டியராஜா .

20250714235927883.jpg

"ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 75 யானைகள் மின்வேலிகளில் சிக்கியும் , 20 யானைகள் ரயில் மோதியும் , 15 மேற்பட்ட யானைகள் வேட்டையாடுவது மூலம் , 20 யானைகள் விஷம் வைத்து வருடத்திற்க்கு 130 யானைகள் பரிதாபமாக மனித மிருகத்தால் கொல்லப்படுவது வேதனையான விஷயம் .

சமீபத்தில் யானைகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்துவது கல்குவாரி , கிரஷர் தொழிற்சாலைகள் , சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் மலை அடிவாரங்களில் கட்டிடங்கள் கட்டப்பட அவை யானைகளின் வாழ்விடங்கள் மற்றும் வழித்தடங்கள் முற்றிலும் தடைபடுவது வேதனையான விஷயம் .

யானைகளின் வாழும் இருப்பிடத்திலே அவை விரும்பும் உணவான கரும்பு , வாழை , தென்னை பயிரிட யானைகள் தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்துகிறது மின் வேலி அமைத்து அவைகளை உயிரை பறிப்பது நியாயம் ?!.

20250715000021492.jpg

இப்படி யானைகளின் சோகம் தொடர அவுட்டு காய் , கண்ணிவெடி , அன்னாசி பழத்தில் வெடி வைக்க அதுவே அவைகளின் உயிரை பறித்து விடுகிறது .

தண்டவாளத்தை கடக்கும் யானைகள் ரயில்களில் அடிபட்டு இறப்பது தொடர்கிறது .

அதே சமயம் கோவை பாலக்காடு பாதையில் வாளையார் மற்றும் மதுக்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தெர்மல் உணர்திறன் கேமெராக்கள் ஏ பி லைனில் தற்போது உள்ளது எச்சரிக்கை சிக்னல் வைத்திருப்பதால் அந்த பகுதியில் யானைகள் சற்று பாதுகாப்பக செல்வது ஆறுதலான விஷயம் . இதே போல இந்தியா முழுவதும் அமைக்கவேண்டியது அவசியம் .

பவானி ஆற்றில் சாய கழிவுகள் கலப்பதால் அந்த தண்ணீரை குடிக்கும் யானைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது .

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் யானைகள் உயிரிழப்பது வேதனை அளிக்கிறது .

20250715000427926.jpg

யானைகள்மற்றும் மனித மோதலை தடுப்பதற்கான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டியது மிக அவசியம் என்று கூறுகிறார் .

கடந்த வாரம் பந்திப்பூர் வனத்தில் சாலையோரத்தில் ஒரு காட்டு யானை நின்றுகொண்டிருக்க பசவராஜ் என்ற ஓட்டுனர் தன் காரில் இருந்து வெளியே வந்து செலஃபீ எடுக்க ஆக்ரோஷ யானை அவரை துரத்தி தள்ளிவிட்டு காட்டிற்குள் ஓடிவிட்டது .

உயிர் தப்பிய அவருக்கு வன துறை 25 லட்சம் அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

சுற்றுலா பயணிகள் காடுகளை கடக்கும்போது வாகனத்தை விட்டு இறங்கி யானை மற்ற விலங்குகளை படம் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று வனத்துறை எச்சரித்துள்ளது .