தொடர்கள்
விகடகவியார்
ஆளுநர் மீது திமுக கோபம்-விகடகவியார்

20250715181616563.jpeg

ஆளுநரின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிளை தொடர்ந்து கல்வி அமைச்சர் புறக்கணித்து வருகிறார். சமீபத்தில் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் திமுக நிர்வாகியின் மனைவி ஆராய்ச்சி மாணவியான இவர் அதற்கான பட்டத்தை ஆளுநரிடம் வாங்காமல் அவரை புறக்கணித்து துணைவேந்தரிடம் அந்தப் பட்டத்தை வாங்கிக் கொண்டார். இந்த வீடியோ தற்சமயம் வைரலாகி கொண்டு இருக்கிறது.

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்கிறார் ஆளுநர் என்று அந்த மாணவி பேட்டி தந்தார்.

புறக்கணிப்பு பேட்டி இரண்டும் தற்சமயம் சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் திறன் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

நமது சகோதரிகளும் மகள்களும் வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகிறார்கள்.

பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதற்குப் பதிலாக அமைச்சர் நேரு கிண்டி கமலாலயம் என்று கிண்டல் செய்து ஆளுநரை விமர்சித்து கடுமையாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

சுதந்திர தின தேநீர் விருந்தையும் தமிழக அரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க போவதாக அறிவித்திருக்கிறது. தேனீர் விருந்துக்கு இந்த முறையும் விஜய் கட்சிக்கு அழைப்பு அனுப்பி இருக்கிறார் ஆளுநர்.