தொடர்கள்
கவர் ஸ்டோரி
சூப்பர் ஸ்டார் ரஜினி 50 - கண்ணாழ்வார்

20250714090932806.jpeg

பெங்களுரு பஸ் டிரான்ஸ்போர்ட் கண்டக்டர் அதன்பின் சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நண்பரின் உதவியுடன் படித்து முடித்தார் சிவாஜி ராவ் கெய்க்வாட்.

பாலசந்தர் நடிப்பு டெஸ்ட் , அதில் இவரின் குணாதிசயம் மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்க இவரை ஆபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வைத்து ரஜினிகாந்த் என்ற பெயரும் சூட்டினார்.

நீ தமிழ் மட்டும் கற்றுக்கொள் , உன்னை எங்கு உட்கார வைக்கிறேன் பார் என்று சொன்ன பாலசந்தரின் வேத வார்த்தை அப்படியே நிஜமானது.

1975 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ரஜினிகாந்த் நடித்த ஆபூர்வ ராகங்கள் முதல் திரைப்படம் வெளியானது.

இது எப்படி இருக்கு …என்ற 16 வயதினிலே பரட்டை ரஜினி அனைவருக்கும் இன்றும் கண்முன் மறையாத காட்சியாக இருக்கிறது.

நாம் இருவரும் சேர்ந்து நடிக்காமல் தனித்தனியாக நடித்தால் நமது வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று கூறிய கமல்ஹாசன் வார்த்தையை கேட்டு ரஜினி தனியாக நடித்தார்.

பில்லா படம் ரஜினிக்கு பட்டி தொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்.

முள்ளும் மலரும் படத்தில் ரஜினியின் நடிப்பினை வெளிகொணர்ந்தவர் டைரக்டர் மகேந்திரன்.

தில்லுமுல்லு ரஜினியாக அடுத்த கட்டத்திற்கு நடிப்பின் மற்றொரு பரிணமமாக பாலசந்தர் ரஜினியை செதுக்கினார், ரஜினி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தமிழகத்தில் பிடித்தார்.

முரட்டு காளை திரைப்படம் ரஜினியை தமிழக சினிமா வரலாற்றில் எம் ஜி ஆருக்கு அடுத்த கமர்சியல் மெகா நடிகராக உயர்த்தியது.

தம்பிக்கு எந்த ஊரில் காதலின் தீபம் ஒன்று பாடலில் இளையராஜாவின் பாடல் ரஜினியை உச்சிக்கு ஏற்றி வைத்தது.

ரஜினியின் ஆஸ்தான டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் ரஜினியை பல படங்களில் பல்வேறு வேடங்களில் அதிக படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் .

படிக்காதவன் திரைப்படம் ரஜினியின் சினிமா வாழ்க்கையை உயர்த்திவிட்ட ஏணி.

ஊர்காவலன் ரஜினியாக தன் காலில் கயிறு கட்டி ஜீப்பை நிறுத்திய ஸ்டைல் .

அழகு ரஜினியாக ராஜாதி ராஜா திரைப்படத்தில் ரஜினியின் கெட்டப் இன்றும் பேசப்படுகிறது.

என் கொடி பறக்க வேண்டிய இடத்தில் எவன் கொடி டா பறக்கும் என்று பாரதிராஜா கொடி பறக்குது ரஜினிக்கு சிறப்பு சேர்த்த திரைப்படம் .

நட்பு ன்னா என்னா தெரியுமா? எடுத்துக்கோ இந்த சூர்யா உயிரை என்று தளபதியில் ரஜினியின் நடிப்பு …மணிரத்தினம் ரஜினியை முற்றிலும் ஒரு புதிய கோணத்தில் நடிப்பை செதுக்கி இருப்பார்.

நான் ஒரு தடவை சொன்னா …நூறு தடவை சொன்னா மாதிரி என்று பாட்ஷா படத்தில் ரஜினியின் தத்ரூபமான நடிப்பு இன்றும் யாராலும் மறக்க முடியாத டான் படம் ஆகும்.

வீரா வில் தன்னுடைய நகைச்சுவை நடிப்பினை வெளிப்படுத்திய ரஜினி நடிப்பு…

தன் சொத்தினை மக்களுக்கு கொடுக்கும் முத்து படம் ரஜினிக்கு ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும்.

படையப்பா, சிவாஜி போன்ற படங்களில் ரஜினி தன் கேரக்டர்களை மக்கள் முன் அப்படியே தத்ரூபமாக நடித்திருப்பார்.

ப்ளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து உலகெங்கும் ரஜினி பேமஸ் ஆனார். அவ்வப்போது சில ஹிந்தி பிற மொழி படங்களில் நடித்து முடித்தார்.

அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்ப்பில் அவரின் பாபா திரைப்படத்தினை வைத்து எடை போட்டவர்களுக்கு ரஜினி தன் நடிப்பால் ஆன்மீகவாதி என்று தெரிவித்து விட்டார்.

காலா படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பின் அடுத்த பரிமாணத்தினை வெளிப்படுத்தினார் ரஜினி.

ரஜினியின் பெரும்பான்மையான படங்களுக்கு இளையராஜாவின் இன்னிசை உயிர் நாடியாக இன்று வரை சுகமான ராகங்களில் பாடல்கள் ஒலித்து கொண்டிருக்கிறது.

20250714091012680.jpeg

சமீப காலத்தில் ரஜினியை கார்ப்ரேட் நடிகராக்கி ரூ 500 கோடி பட்ஜெட் , ரூ 250 கோடி சம்பளம் என்று விளம்பரம் மட்டும் முன்னிறுத்தி செய்வதால் சமீப கால ரஜினி படங்களில் காதுக்கு இனிய பாடல்கள் மிஸ்ஸிங்.

ரஜினி என்ற பிம்பம் மட்டும் படத்தினை தூக்கி நிறுத்தும் என்ற தயாரிப்பாளர்களின் கனவு சமீபத்திய அவரது லேட்டஸ்ட் பல படங்கள் ஓடாமல் எதிர்பார்த்த வசூல் இல்லை என்பது நிஜம்.

இந்திய அளவில் வயதான நடிகராக அமிதாப் இருந்தாலும் , இன்றும் ரஜினியின் டிரேட்மார்க் ஸ்டைல் ஒரு தனி மவுசு உண்டு . அது தான் ரஜினி திரை உலகிற்கு வந்து தனது திரைத்துறையில் நடிப்பில் இறங்கி 50 வது ஆண்டு விழாவினை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் கார்ப்பரேட் படமான கூலி ரிலீஸ் ஆகி உள்ளது.

ரஜினி ஒரு மின்னல் அவரை கையில் பிடிக்க முடியாது.

சமீப காலமாக அவர் குடும்ப படங்களை தவிர்த்து வன்முறை படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் குடும்பத்துடன் தியேட்டர் சென்று படம் பார்க்கும் மிடில் கிளாஸ் பேமிலி மக்கள் தியேட்டருக்கு செல்வதில்லை

ரஜினி படம் தியேட்டரில் பார்க்க தற்போதைய ராக்கெட் விலை ஏற்ற டிக்கெட் கட்டணம் பல குடும்ப பட்ஜெட்டுகளை பதம் பார்ப்பதால் தியேட்டர் பக்கம் குடும்ப சகிதமாக வரும் ரசிகர்கள் வரத்து குறைந்துவிட்டது என்ற குரலும் தமிழகத்தில் கேட்கிறது.

ரஜினியின் படத்தில் இசை , இனிமையான பாட்டு , காமெடி மற்றும் நல்ல பைட் சீன்கள் ஆக தற்போது ரஜினியின் பிராண்ட் ஜனரஞ்சக சினிமா மிஸ்ஸிங் என்பது பலரின் கருத்து.

பல வெள்ளி விழா, சில்வர் ஜுப்லி திரைப்படங்கள் நடித்து பல தயாரிப்பாளர்களுக்கு வெற்றி கதாநாயகனாக வலம் வந்தவர் ரஜினி.

ரஜினி 50 வருடங்கள் கதாநாயகனாக நடித்து நாட் அவுட் டாக வலம் வருவது அவரது பாணியில் சொன்னால் “சும்மா அதிருதில்ல”….

20250714091130223.jpeg

மொத்தத்தில் ரஜினியின் நடிப்பினை பார்த்து ரசிக்கும் ஆடியன்ஸ்களில் நாமும் ஒருவர் .

வாழ்த்துகள் ரஜினி சார் ..!