ஸ்டாலினின் விஜய் பயம்
சில தினங்களுக்கு முன்பு நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பேசும்போது "நீங்கள் எல்லோரும் எனது உடல்நிலை பற்றி கவலைப்படுகிறீர்கள். ஓய்வெடுத்துக் கொள்ள சொல்கிறீர்கள். நான் ஓய்வெடுத்துக் கொள்ள மாட்டேன் உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிக்க மாட்டேன். உங்களை ரொம்ப கஷ்டப்படுத்தி வேலை வாங்குகிறேன் என்பது எனக்கு தெரிகிறது. நம் எதிரிகள் பலமாக இருக்கிறார்கள் நம் கஷ்டப்பட்டு தான் ஆகணும் என்று பேசி இருக்கிறார். குறிப்பாக மாவட்டச் செயலாளர்களுடன் அவர் பேசும் போது விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பதால் அதிமுகவுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது. திமுகவின் சிறுபான்மை மற்றும் இளைஞர்களின் வாக்குகளை விஜய் பங்கு போட கூடும் இதை நாம் அனுமதிக்க கூடாது. இளைய தலைமுறையிடம் நாம் என்னென்ன சாதித்திருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள் என்று பேசி இருக்கிறார் முதல்வர்.
Leave a comment
Upload