
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கட்சியை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது அதிமுக கூட்டணியில் சேர விஜய்க்கு அழைப்பு விடுத்து ஆர். பி .உதயகுமார் கருத்து.
எப்படி எல்லாம் டயலாக் சொல்ல வேண்டி இருக்கு தலைவரே !!
மத்திய அரசின் கல்வி நிதியைபெற பிரதமரின் திட்டத்தில் சேர கேரளா அரசு முடிவு.
உங்களுக்கு வேற வழி இல்ல காம்ரேட் ?
மகாராஷ்டிராவில் 96லட்சம் போலி வாக்காளர்கள் ,நடவடிக்கை எடுக்க ராஜ் தாக்கரே வலியுறுத்தல்.
வாக்காளர்களை விட போலி வாக்காளர்கள் அதிகமா இருக்கும் போல இருக்கு !!!
மழையை எதிர்கொள்ள தயார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
சாப்பாடு பொட்டலம் தயார் அதானே? !!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள். அத்தியாவசிய துறைகளுக்கு தடையின்றி மின் விநியோகம் மின்வாரிய தலைவர் அறிவிப்பு.
டாஸ்மாக் கடைக்கு தானே !!
பாஜகவில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு.
முதல்ல வேட்பாளரை தேடுங்க ?
இந்தியாவில் சுகாதாரத் துறையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது துணை சபாநாயகர் பிச்சாண்டி தகவல்.
அப்புறம் ஏன் ஆளும் கட்சிக்காரர்கள் எல்லாம் அரசு மருத்துவமனைக்கு போகாமல் அப்போலோக்கு போறாங்க !!!
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும். எந்தக் கட்சிகள் இடம் பெறும் என்பது விரைவில் தெரியும் .டிடிவி தினகரன்
நீங்க எந்த கூட்டணிக்கு போறீங்க என்பது தெரிஞ்சு போச்சு !!!
திமுகவில் 90 சதவீதம் இந்துக்கள் இருக்கிறார்கள் என்று சொல்லும் முதல்வர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறார்.வானதி சீனிவாசன்
எல்லாம் அந்த மீதி பத்து சதவீதத்துக்கு தான் !! அவங்க கோவிச்சுப்பாங்களே !
மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? நயினார் நாகேந்திரன் கேள்வி .
நீங்க ட்ரெயின்ல அனுப்பிய அந்த நாலு கோடி மர்மம் வெளிவந்த அடுத்த நிமிஷமே !!
உதயநிதி ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் இடையே தான் போட்டி. நாஞ்சில் சம்பத் .
இன்னொரு இன்னோவா காருக்கு ஒர்க்கவுட் பண்றாரு !!
2019-ல் பாஜக வழங்கிய துணை முதல்வர் வாய்ப்பை மறுத்து விட்டு சிறைக்குச் சென்றேன் கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்.
பாவம் !,அவங்களுக்கு நீங்க முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறீர்கள் என்று தெரியல ?
இறைவன் அருளுடன் இந்த கடினமான தருணத்தை கடந்து வருவோம். விஜய்
பெரியார் படம் சும்மா ஒரு சப்போர்ட்டுக்கு தான் !!
8 ஆண்டுகளுக்குப் பிறகு பஹ்ரைனுக்கு வந்திருக்கிறேன் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
உஷாரா இருங்க காம்ரேட் மறுபடியும் தங்க கடத்தல் சர்ச்சையில் சிக்க போறீங்க ?

Leave a comment
Upload