தொடர்கள்
விகடகவியார்
கண்ணீர் கடலில் விவசாயிகள். - ஜாசன்

2025925074303928.jpeg

பொதுவாக விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் எந்த அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் பிரச்சனை பற்றி கண்டு கொள்வதில்லை என்பதுதான் நிஜம். இது திராவிட திமுக அரசுக்கும் பொருந்தும். .விவசாயிகள் பாடுபட்டு பயிர் செய்யும் நெல் மூட்டைகளை பாதுகாக்க எங்குமே கிடங்குகள் கிடையாது .நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே வைக்கப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைப்பது என்பது தொடர் கதையாக தான் இருக்கிறது .

சமீபத்தில் பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்கள் வெளியே வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளை விடும் அளவுக்கு போய் வீணானதை பார்த்து என்ன நடக்கிறது என்று ஆய்வு செய்ய வந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் கண்ணீர் மல்க காலில் விழுந்து அழுத காட்சிகள் தற்சமயம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. தனியார் தொலைக்காட்சிகளும் அங்குள்ள அவலங்களை படம் பிடித்து ஒளிபரப்ப விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது என்ற அளவுக்கு அவர்கள் கவலை இருந்தது.

ஆய்வு செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி பேட்டி கொடுக்கும்போது அந்த விவசாயிகள் இந்த பரிதாப நிலையை சட்டமன்றத்தில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பிறகும் கூடஇந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நேற்று நான் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் சக்கர பாணியும், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று பார்த்திருக்கிறார்கள் என்கிறார். விவசாயத்துறை அமைச்சர் லேசாகத்தான் முளைத்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் நாற்றுநடும் அளவுக்கு மழையில் நெல் மூட்டைகள் என்கிறார்.விவசாயிகள் பிரச்சனையை பற்றி திமுக கவலைப்படாமல் உங்கள் ஆட்சியிலும் மழையில் நனைந்தது என்று சமாளிக்க தான் பார்க்கிறார்கள். எப்படியோ நெல் மூட்டை மழையில் நனைந்து முளைத்திருக்கிறது என்பதை பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டிருக்கிறார் அமைச்சர். உளவுத்துறை அமைச்சர் இன்னும் ஒரு படி மேலே போய் இவை எல்லாவற்றிற்கும் காரணம் … மத்திய அரசுதான் செறி வூட்டப்பட்ட அரிசியை கலக்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை இதுதான் காரணம் என்கிறார். ஆனால் அமைச்சர் சொல்வது பொய் ஆகஸ்ட் மாதமே மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது என்கிறார் எடப்பாடி. உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது அது சம்பந்தமாக சில விளக்கங்கள் கேட்டு சில தினங்களுக்கு முன் கடிதம் அனுப்பி இருக்கிறோம் என்கிறார். விவசாயிகள் விஷயத்தில் எந்த அளவுக்கு அமைச்சர்கள் அரசியல் விளையாட்டை நடத்துகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? இந்தியாவில் அரிசி உணவு சாப்பிடுபவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் வைட்டமின் பி12, ,போலிக் அமிலம், இரும்பு சத்து உள்ளிட்ட பிற வைட்டமின் மற்றும் தாது பற்றாக்குறை மற்றும் நுண்ணூட்ட சத்துக் குறைபாட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, ரத்த சோகை உள்ளிட்ட பல நோய்களால் எளிதில் பாதிக்கப்பட்டதை தடுக்க உலக அளவில் பல்வேறு ஆய்வுகளால் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட உணவு செறிவூட்டல் வழிமுறையை பின்பற்றி நாட்டின் அனைத்து மக்களுக்கும் பூரண ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குதல் திட்டம் பாரதப் பிரதமர் மோடி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. 100 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ சரி செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க வேண்டும். ஆகஸ்ட் மாதம் இந்த அரசாணை வழங்கப்பட்டதாக எடப்பாடி தமிழக பாஜக 29.7.25 அன்று மத்திய அரசு புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கி விட்டது என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஏழு முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவு நிரம்பி சாதனை படைத்திருக்கிறது. இதனை நம்பி இந்த முறை கூடுதலான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் நெல் பயிர் செய்து கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஆனால் இதை தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் இந்த அரசு செய்யவில்லை. குறிப்பாக விவசாயிகள் சொல்லும் குற்றச்சாட்டு என்னவென்றால் கண்மாய்கள் சரிவர தூர் வராததால் வெள்ளம் வந்து பயிர்கள் நாசம் என்கிறார்கள்.ஆனால் இந்த அரசு விவசாயிகளுக்கு நாங்கள் தனி பட்ஜெட்டே போடுகிறோம் என்று பெருமையை பேசுகிறது. சர்க்கரை என்று தாளில் எழுதி நக்கினால் இனிக்கும் என்று விவசாயிகளை நம்ப சொல்கிறது இந்த திராவிட மாடல் அரசு.