
தமிழ் சினிமா மெல்ல இளம் தலைமுறை கைக்கு போகத் தொடங்கி இருக்கிறது என்பதற்கு சாட்சி இந்த ஆண்டு தீபாவளி படங்கள் தான். இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினி கமல் விஜய் சூர்யா என்று மிகப்பெரிய பிரபலங்கள் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியுட்' துருவ் விக்ரமின் ' பைசன் - காளமாடன் ' மற்றும் ஹரிஷ் கல்யாணின் 'டீசல் ' ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. மூன்று படங்களுக்குமே ரசிகர்களில் ஆதரவு பெரிய அளவு கிடைத்திருக்கிறது என்பது பட வசூல் மூலம் தெரிகிறது.


வசூல் பட்டியலில் 'டியூட்' படம் முதல் இடம் என்றாலும் ரசிகைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக பைசன் படம் பேசப்படுகிறது. கபடி வீரர் மணாத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதை இது. கபடி வீரராக துருவ் விக்ரம் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். இந்த படம் மூன்று நாட்களில் 20 கோடி வசூல் ஈட்டி உள்ளது.அதே சமயம் பிரதீப் ரங்கநாதன் மம்தா பைஜூ நடித்த 'டியூட் 'படம் மூன்று நாட்களில் 66 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்தப் படம் நகைச்சுவை கலந்த காதல் கதை.
நடிகர் விக்ரம் அறிமுகமான 'என் காதல் கண்மணி' படம் 1990 இல் தீபாவளி ரிலீஸ் ஆக, அக்டோபர் 17ஆம் தேதி ரிலீசானது. இப்போது அவரது மகன் படம் தீபாவளிக்கு ரிலீஸ். இந்த இளம் தலைமுறையின் படங்கள் ரிலீஸ் தொடர்ந்து மூத்த நடிகர்கள் வாழ்த்தி வரவேற்கவும் செய்திருக்கிறார்கள். நடிகர் சிம்பு இது பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யும்போது "இந்த தீபாவளி இளைஞர்களுக்கு சொந்தமானது டீசல், டியூட் ,பைசன் ஆகியவை அன்பு நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் உருவாக்கப்பட்டிருக்கிறது இவர்களை நாம் ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு நம் தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக இவர்களைக் கொண்டாட வேண்டும் என்று பெருந்தன்மையாக வாழ்த்தியிருக்கிறார். கூடவே உள்ளே நுழைந்தவர்கள் நுழைய காத்திருப்பவர்கள் அவர்களை ஆதரிக்கவும் இந்த சினிமாவை நாம் உயிர்ப்புடன் வைத்திருக்க அனைத்து படங்களையும் திரையரங்குகளில் பாருங்கள் என்று ரசிகர்களுக்கு கோரிக்கையும் வைத்திருக்கிறார் சிம்பு. இதே போல் நடிகை கார்த்தி, அருண் விஜய், ரவி மோகன், நடிகர் சீமான் ஆகியோரும் இந்த இளம் தலைமுறையை வாழ்த்தி வரவேற்று இருக்கிறார்கள் .
அதேசமயம் இப்போதெல்லாம் படங்கள் 25 நாட்கள் ஓடினாலே அதையே மிகப்பெரிய கொண்டாட்டமாக தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். இதற்கு காரணம் அந்த காலத்தைப் போல் இல்லாமல் இப்போது தியேட்டர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது. இது தவிர ஓடிடி தளம் ,தொலைக்காட்சிகள் என்று ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வியாபார ரீதியாக தயாரிப்பாளருக்கு பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் நிறைய நிறைய இருக்கிறது என்பதும் உண்மை.
தமிழ் சினிமாவில் 100 நாட்கள் 200 நாட்கள் ஓடிய படங்களின் பட்டியலும் கொஞ்சம் நீளம் தான். இப்போது வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மீண்டும் வசூலை அள்ளிக் குவிக்கிறது. ஹரிதாஸ் படம் 1944 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது இந்தப் படம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் திரையரங்கில் ஓடியது. விஜய் நடித்த பூவே உனக்காக 286 நாட்கள் ஓடியது. அஜித் நடித்த வாலி 270 நாட்கள் பாட்ஷா மற்றும் சின்ன கவுண்டர் 300 நாட்களுக்கு மேல் ஓடியது சிவாஜி நடித்த வசந்த மாளிகை 750 நாட்கள் ஓடியது. மோகன் நடித்த பயணங்கள் முடிவதில்லை 437 நாட்கள் ஓடியது. சுதாகர் ராதிகா நடித்த கிழக்கே போகும் ரயில் 450 நாட்கள் ஓடியது. ராமராஜன், கனகா நடித்த கரகாட்டக்காரன் 382 நாட்கள் ,சின்னத்தம்பி, மூன்று முடிச்சு, மூன்றாம் பிறை 365 நாட்கள் ஓடியது. ரஜினி நடித்த சந்திரமுகி 864 நாட்கள் இப்படி சாதனை படைத்த தமிழ் சினிமாவும் உண்டு என்பது இந்த தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்.

Leave a comment
Upload