தொடர்கள்
பேரிடர்
"நீலகிரியை பயமுறுத்தும் தென் மேற்கு வடகிழக்கு பருவமழை " - ஸ்வேதா அப்புதாஸ் .

வருடந்தோறும் அக்டோபர் ,நவம்பர் மாதத்தில் ஆவேசமாக வரும் வடமேற்கு பருவ மழை தமிழகம் , ஆந்திரா மற்றும் ஒரிசா , மேற்க்கு வங்கம் என்று பயமுறுத்துவது தொடர் கதை .

2025923225413334.jpg

மிக முக்கியமாக நீலகிரி மாவட்டத்தை தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை என்று புரட்டி போடுவது சகஜமாகிவிட்டது .

அதே சமயம் வருடந்தோறும் மிக பெரிய ஆபத்துகளை கடந்து வருகிறது நீலகிரி என்பது உண்மை .

2025923225445103.jpg

நவம்பர் மாதம் நீலகிரி வாசிகளின் உள்ளத்தில் ஒர் பீதியை ஏற்படுத்துவது சகஜமாகி விட்டது .

2025923231719721.jpg

1993 ஆம் வருடம் நவம்பர் 11 ஆம் தேதி குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் பகுதி பயங்கர நில சரிவில் காணாமலே போய்விட்டது .

2025923230540728.jpg

பயணிகளின் மனதில் இடம்பெற்ற தர்கா முற்றிலும் காட்டாற்று வெள்ளம் மண்ணில் அடித்து செல்ல பட்டது .

மலை ரயில் பாதை பாலங்கள் முற்றிலும் மாயமானது .

2025923225806393.jpg

ஒரு பேருந்து மறைந்து போனது .

பலர் மண்ணோடு மண்ணாக மடிந்த சோகம் இன்னும் வடுவாக இருக்கத்தான் செய்கிறது .

ராணுவத்தின் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் இந்த சாலை சீர் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

2025923225850575.jpg

வருடந்தோறும் இரண்டு பருவமழையும் நீலகிரி மாவட்டத்தை பயமுறுத்தி கொண்டே இருக்கிறது .

இந்த மாவட்டத்திற்கு வந்து போகும் ஆட்சியர்களுக்கு மிகுந்த சவாலாக அமைகிறது பருவ மழை .

மரங்கள் முறிந்து விழுவது ,மின்சாரம் துண்டிப்பு ஏற்படும்போது மின்சார ஊழியர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து சரிசெய்வது மிக சிறப்பான ஒன்று !.

2025923225927251.jpg

மேட்டுப்பாளையம் குன்னூர் ஊட்டி கூடலூர் சாலை தேசிய நெடுஞ்சாலை துறை கைவசம் சென்றபின் பல வருடமாக சாலை விரிவு படுத்தும் பணிகள் தொடர் கதையாகவுள்ளது .

2025923230047447.jpg

சாலையை விரிவு படுத்தும் நெடுஞ்சாலை பொறியாளர்கள் பெரிய பாறைகளை அகற்றி மரங்களை வெட்டுவதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது .

இயற்கை ஆர்வலர் சிவதாசிடம் பேசினாம் ,

202592323011726.jpg

" தென் மேற்கு பருவமழையும் , வடகிழக்கு பருவமழை இரண்டுமே நீலகிரியை பயமுறுத்தி கொண்டிருக்கிறது .

முக்கியமாக வடகிழக்கு பருவமழை காலம் மிக ஆபத்தானது .

பிரிட்டிஷ் காலத்திலே நீலகிரி மிக ஆபத்தான பகுதி என்பது பதிவு செய்யப்பட்ட ஒன்று .

அந்த காலத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது .

உத்ரகாண்டில் மிக மோசமான தொடர் மேக வெடிப்பு நடந்ததோ அதே போல நீலகிரியிலும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக டெல்லி வானிலை மையத்தில் பதிவாகியுள்ளது .

2025923230210209.jpg

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை பகுதி முழுவதும் 90 டிகிரி சரிவில் அமைந்துள்ளதால் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது .

ஊட்டியில் கோடப்மந்து சற்று ஆபத்தான பகுதி காரணம் பலத்த மழை கொட்டும்போது தண்ணீர் ஆறாக ஓடி வெள்ளத்தை ஏற்படுத்தும் .

1978 பருவமழை கொட்டிய போது மிக பெரிய அழிவை ஊட்டி நகர் சந்தித்தது .

202592323025580.jpg

இந்த பாதிப்பு கோடப் மந்து பகுதியில் இருந்து தான் வந்தது .

இந்த ஆபத்துக்கு ஆக்ரமிப்பும் ஒரு காரணம் .

என்னதான் தடுப்பு சுவர் காட்டினாலும் மேகவெடிப்பு ஏற்பட்டால் எல்லாம் அடித்து சென்றுவிடும் .

2025923230327304.jpg

குன்னூர் நகரில் அதிக மக்கள் தொகை நெருக்கமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகத்திற்கு வடிகால் அமைக்க பெரிய சவாலாக உள்ளது .

நகரின் தண்ணீர் மற்றும் மழை நீர் மலைகளின் முகடுகளில் இறங்கி பர்லியாறு , கல்லாறை நோக்கி செல்வதும் நிலத்தடியில் நீர் பாய்வதால் நிலச்சரிவு ஏற்படுவது சகஜமாகிவிடுகிறது .

2025923231601323.jpg

வேலிவியூ , மந்தாடா ஆகிய பள்ளத்தாக்குகளும் ஆபத்தான இடங்கள் .

இந்த பகுதிகளில் ஆக்ரமிப்பு தொடர கூடாது .

2025923232107196.jpg

கடந்த ஐந்து வருடமாக நம் நீலகிரியில் பெரிய பாதிப்பு இல்லாமல் நகரந்தது வடகிழக்கு பருவமழை என்பது ஆறுதலான விஷயம் ."என்கிறார் .

1990 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி மஞ்சூர் அருகே உள்ள கெத்தை என்ற இடத்தில் உள்ள மின்சாரவாரிய முகாம் பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் அலுவலகங்கள் இடிந்து 36 பேர் இறந்ததை இன்னும் நீலகிரி மறக்கவில்லை .

தற்போது குன்னூர் பகுதியில் வடகிழக்கு பருவ மழை கொட்டி தீர்க்க மலை ரயில் பாதையில் ரன்னிமேடு அருகில் உள்ள ரயில் டனல் அருகே ராட்ச்ச பாறைகள் விழுந்து மண்சரிந்து ரயில் பாதை மூடப்பட்டது .

2025923230445620.jpg

அதே போல குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் நந்தகோபால் பாலத்தின் அருகே பாறைகள் விழுந்தன .

202592323063929.jpg

வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை நீலகிரியை பயமுறுத்தும் இந்த வருடம் சற்று ஆவேசம் குறைந்ததால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார்கள் நீலகிரி வாசிகள் .