தொடர்கள்
கவர் ஸ்டோரி
சபரிமலையில் இந்தியாவின் ‘முதல் பெண்மணி’ -பால்கி

202592400211634.jpg

22.10.2025 அன்று, பத்தனம்திட்டாவில் உள்ள பிரமாதம் என்னுமிடத்தில் உள்ள ராஜீவ் காந்தி உள் விளையாட்டு மைதானத்தில் முன் தினம் புதிதாக கான்கிரீட் தளம் போடப்பட்ட ஹெலி பேட்டில் தரையிறங்கி, ஜனாதிபதி திரௌபதி முர்மு சபரிமலையின் அடிவாரமான பம்பாவிற்கு சாலை வழியாக பயணம் செய்தார்

சபரிமலையில் பிரார்த்தனை செய்த முதல் பெண் ஜனாதிபதி. ஜனாதிபதி தான் நம் நாட்டின் முதல் குடிமகன் என்ற வகையில் முதல் பெண்மணி.

இந்த கோயிலுக்கு வருகை தந்த இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி இவர்; முன்னாள் ஜனாதிபதி வி.வி. கிரி இதற்கு முன்பு 1970களில் வருகை தந்திருக்கிறார்.

ஜனாதிபதி முர்முவின் சபரிமலை வருகையை பாஜக எம்.பி. பண்டி சஞ்சய் குமார் தனது X தளத்தில் ஒரு பதிவில், "அவருக்கு வயது 67. அவர் எந்த விதிகளையும் மீறவில்லை, எந்த நம்பிக்கையையும் புண்படுத்தவில்லை – மாறாய் அவற்றை மிகவும் மதித்து இருமுடி தாங்கி ஐயப்பனை முன் வணங்கிய முதல் ஜனாதிபதி ஆனார்.

ஒரு பாரம்பரிய யாத்திரை

இந்த சபரிமலை புண்ணிய யாத்திரைக்கான பாரம்பரிய வழக்கங்களைப் பின்பற்றும் விதமாக, ஜனாதிபதி முர்மு காலை 11 மணியளவில் பம்பா நதி தீரத்தை அடைந்தார். பம்பா நதியில் தனது கால்களைக் நனைத்து நதியின் நீர்த் துளிகளை தன் மீது தெளித்துக்கொண்டார்.

பம்பா கணபதி சன்னதியில் பிரார்த்தனை செய்தார்.

கருப்பு சேலை அணிந்திருந்த ஜனாதிபதிக்கு, மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி செய்துவைத்த கட்டு நிறை நிகழ்வில் தனது இருமுடியை கட்டிக்கொண்டார். கூடவே அவருடன் அவரது மருமகன் கணேஷ் சந்திர ஹோம்ப்ராம் மற்றும் ADC சௌரப் எஸ். நாயர், PSO வினய் மாத்தூர் எனும் ஜனாதிபதி அலவலக அதிகாரிகள் தத்தம் இருமுடிகளை கட்டிக்கொண்டனர்.

கட்டு நிறை முடிந்த பின்பு ஜனாதிபதி தன் குழுவினருடன் 4.5 கி.மீ. தொலைவுள்ள் சுவாமி ஐயப்பன் சாலையில் சிறப்பு நான்கு சக்கர வாகனங்களில் சன்னிதானம் (பிரதான கோயில் வளாகம்) வரை பயணித்தனர்.

சன்னிதானத்தில் தரிசனம்

பதினெட்டு படிகளின் அருகேயே அவரது வாகனம் நின்றது. அதிலிருந்து இறங்கி நேரே கருப்பண்ண சாமி சன்னிதி அருகே அவரது அலுவலக அதிகாரி நாயர் வழிகாட்ட படித் தேங்காயை அந்த சுவரில் எறிந்து உடைத்தார்.

பின்னர், இருமுடிக்கட்டைத் தலையில் சுமந்தவாரே புனிதப் பதினெட்டு படிகளில் ஏறி கொடி மரம் அருகே அடைந்தார். அவரை ADC சௌரப் எஸ். நாயர் தனது தாய் போன்றே தலையில் அமர்த்திய தனது இரு முடியினை வலது கரத்தில் பற்றிக்கொண்டு இடது கரம் மூலம் ஜனாதிபதியினைக் கைத்தாங்கலாக ஒவ்வொரு படியாக படிப்படியாக அழைத்துச் சென்றார்.

2025924002210674.jpg

அங்கு அவரை கேரள மாநில தேவஸ்வம் அமைச்சர் வி.என். வாசவன் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத் தலைவர் பி.எஸ். பிரசாந்த் ஆகியோர் வரவேற்றனர். கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு அவரை பூர்ண கும்பத்துடன் (பாரம்பரிய வரவேற்பு) வரவேற்றார். ஜனாதிபதியும் பவ்யமாக அதற்கு குனிந்து மரியாதை செய்து ஏற்றுக்கொண்டார்.

திருமுற்றம் வழியாய் கருவறை அருகே தனது குழுவினருடன் சென்று நின்று அய்யனைக் கண்ணாரக் கண்டு உருகி உருகி வேண்டியபடி நின்றிருந்தார். சில நிமிடங்கள் அவரது வலது கரம் நெஞ்சில் வைத்திருக்க இடது கரம் தலையில் வீற்றுருக்கும் இருமுடியினை பற்றியிருக்க கண்கள் மூடிய நிலையில் உதடுகள் அய்யனுடன் மொழி வர்த்தனை செய்துகொண்டிருந்தது.

2025924001226151.jpg

ADC நாயர் ஜனாதிபதியின் மருமகனை ஜனாதிபதியினருகே வரச்சொல்லி நிறுத்தினார், மற்றும் அவர்களை, செய்ய வேண்டிய சடங்குகளை நயம்பட விவரித்து சொல்லிக்கொடுத்தது, அதை அவர்களும் உடனேயே பணிந்தவாறே ஏற்று செய்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. அங்கு பக்தி மட்டுமே நிரம்பியிருந்தது.அங்கு பதவி ஆளவில்லை பக்தி தான் ஆண்டது என்பது சத்தியம். இறைவன் முன் பதவி எம்மாத்திரம் என்றே நிரூபணம் ஆனது. இது ஒரு மறுக்க முடியாத வரலாற்று உண்மை. பின் வரும் காலம் இதை சிலாகித்துக் கூறும். இது ஒன்றும் புதியதல்லவே. ஆனானப்பட்ட மன்னாதி மன்னர்கள் காலத்திலிருந்தே ஆட்சியாளர்கள் ஆண்டவன் சொல்படி தான் நடந்தார்கள்.

மேல்ஷாந்தி கண்டராரு ஐயப்பனுக்கு கற்பூரம் காட்டி அந்த கற்பூர ஒளியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதிக்குக்காட்ட அவரும் அதனை இடது கை தலை மீது அமர்ந்திருக்கும் இருமுடிக்கட்டைப் பிடித்த வாரே வலது கையால் கற்பூர ஒளியை தாங்கிக்கொண்டு நெற்றியிலும் கன்னங்களிலும், தலயருகிலும் ஒற்றிக்கொண்டார். அவரது குழுவின் மற்றவர்களும் அதே மாதிரி கற்பூர ஒளியினை ஒற்றிக்கொண்டனர்.

ஜனாதிபதியும் மற்ற மூவரும் தங்களது இருமுடிக்கட்டுகளை சன்னிதியின் வாசற்படியின் முன் படியில் பவ்யமாக இருத்திவைக்க கருவறையினுள்ளே இருந்த மேல்ஷாந்தி அவற்றை உள்ளே நிவேத்தியத்திறாகாக எடுத்துக்கொண்டார்.

அந்த நால்வரிடமும் மேல்ஷாந்தி சங்கு தீர்த்தப் பிரசாதம் தந்தார். விபூதியும் சந்தனமும் நிறைந்த இலை பிரசாதத்தை ஜனாதிபதியிடம் மேலஷாந்தி நீட்ட அவரும் நாயரின் அங்கீகார இசைவினைக் கண்ட பின்பு முகத்தில் சந்தோஷம் பொங்க வாங்கிக் கொண்டார்.

2025924002450405.jpg

அங்கு கோவிலின் முறையில் ஏதும் பங்கம் வந்து விடக்கூடாது என்பதில் ஜனாதிபதியின் உண்மையான முகம் தெரிந்தது. சந்தனத்தை நெற்றியில் தரித்துக்கொண்டார்.

2025924002647705.jpg

முறைப்படி காணிக்கையும் அங்கிருந்த காணிக்கை உண்டியலில் இட்டார்.

அங்கு தனது பிரார்த்தனைகளை முடித்துவிட்டு, அருகிலுள்ள கன்னிமூல கணபதி, நாகராஜா சந்நிதிகளை தரிசனம் செய்தார்.

மேலும், கொச்சு கடுத்த சாமி, நாகராஜாக்கள் என்று ஒவ்வொரு சந்நிதியாக தரிசனம் செய்த பின்னர் மாளிகபுரத்து மஞ்சம்ம தேவி சந்நிதானத்தில் தரிசனம் மேற்கொண்டார்.

2025924002530282.jpg

(இந்த சந்நிதி மாளிகைப்புரத்து மஞ்சம்மா தேவியுடையது.)

மதிய உணவிற்காக ஜனாதிபதி அங்கேயே திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்ட் விருந்தினர் மாளிகையில் தங்கினார். அவரது வருகையின் போது மற்ற பக்தர்களுக்கான நுழைவு தடைசெய்யப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட 41 நாள் விரதம் பகிரங்கமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், வருகை நாளில் அவரது செயல்கள் ஐயப்ப பக்தர்கள் கடைப்பிடிக்கும் முக்கிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதைக் மேற்கூறிய வர்ணனைகளிலிருந்து காணமுடிகிறது.

சென்ற மே மாதத்தில் சபரிமலை வரவிருந்த ஜனாதிபதியின் புனித பயணம் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதட்டங்கள் காரணமாக முன்னர் ஒத்திவைக்கப்பட்டது.

ஜனாதிபதி முர்மு ஒவ்வொரு பாரம்பரியத்தையும் பின்பற்றினார். "நம்பிக்கை என்பது தடைகளை உடைப்பது பற்றியது அல்ல, அவற்றை மதிப்பது மற்றும் இன்னும் உறுதியுடன் பாதையில் நடப்பது பற்றியது" என்று பாரதீய ஜனதா கட்சி அறிவிப்பு கூறியது.

ஜனாதிபதி சாலை வழியாக பம்பாவுக்குச் சென்ற பிறகு, பல காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் ஹெலிகாப்டர் கான்கிரீட்டில் தரையிறங்கும் போது ஏற்பட்ட சிறிய பள்ளங்களில் இருந்து ஹெலிகாப்டரின் சக்கரங்களைத் தள்ளி சரி செய்துவிட்டிருந்தனர்.

சபரிமலை வரலாற்றில் இப்படி ஒரு வித்தியாசமான உடையில் இருவர் தரிசனம் செய்ததை பார்க்கிறோம். ஐயப்பன் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அழைப்பார் என்பதற்கு இவர்கள் ஒரு உதாரணம்.

கொடுத்து வைத்த திரெளபதி மர்மு. கொடுத்து வைத்த பாதுகாப்பு அதிகாரிகள்.

இராமர் கோவில் பிரதிஷ்டையின் போது மோடிக்கு கிடைத்த அந்த பாக்கியம் ஜனாதிபதிக்கு இங்கு சபரிமலையில் கிடைத்திருக்கிறது.

2025924001106126.jpg