தொடர்கள்
நவராத்திரி
வெற்றியாளர்களுடன் ஓர் உரையாடல்   கொலு போட்டி -2025  - மரியா சிவானந்தம் 

2025924165213460.jpg

விகடகவி நடத்திய கொலு போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற வாசகியர்கள் அனைவருக்கும் பரிசுகள் அனுப்பி வைத்துள்ளோம்.

இந்த ஆண்டு 25 வாசகியர் கொலு போட்டியில் பங்கேற்றனர்.தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி மும்பை,புனே , ஜாம் நகர் குஜராத்தைச் சேர்ந்த மகளிரும், அமெரிக்காவில் இருந்து ஒருவரும் இப்போட்டியில் கலந்துக் கொண்டதைப் பார்த்த போது விகடகவியின் வீச்சு நமக்குத் தெரிந்தது .

நமது ஆசிரியக்குழுவினருடன், மும்பையில் இருந்து மீனலதா , எழுத்தாளர், நாடக கலைஞர் இணைந்து பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்க திணறிப் போனார்கள். ஒவ்வொரு கொலுவும் அத்தனை அழகாக இருந்தது.

பரிசுக்குரிய ஒன்பது பேரைத் தேர்ந்தெடுத்து தந்தனர். அந்த பட்டியல் சென்ற வாரத்தில் வெளியிட்டோம்

2025924162222465.jpg

மீனலதா

முதல் பரிசு மற்றும் இரண்டு இரண்டாம் பரிசுகளாக அழகான சேலைகள் அனுப்பி வைத்துள்ளோம் .மூன்றாம் பரிசாக பெண்களுக்கான கைப் பைகள் மூன்று பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . ஆறுதல் பரிசு பெற்ற மூவருக்கும் பித்தளை விளக்குகள் அனுப்பி வைத்துள்ளோம் .

கொலு போட்டி வழியாக நமது வாசகியருடன் நேரடி தொடர்பு கொள்ளவும் விகடகவி மின்னிதழைப் பற்றிய அவர்தம் கருத்துக்களை அறிந்துக் கொள்ளவும் நமக்கு வாய்ப்பு ஏற்பட்டது. விகடகவி இதழைத் தவறாமல் படிக்கிறார்களா, இதழ் பற்றிய அவர்களது கருத்துக்களை அறிய முற்பட்டோம்.

முதல் பரிசு பெற்ற உஷா மோகன் மதுரையைச் சேர்ந்தவர்.

2025924162343449.jpg

உஷா மோகன்

அவரைத் தொடர்பு கொண்ட போது , விகடகவி இதழைப் படித்து வரும் அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்டார்.

குறிப்பாக சென்ற வாரம் வெளிவந்த தீபாவளி இதழ் மிக அழகாக தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். ஆசிரியர் மதன் அவர்களின் தீபாவளி அனுபவங்கள் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாக கூறுபவர், ஆரூர் சுந்தரசேகர் எழுதிய "ஸ்ரீரங்கநாதருக்கு தீபாவளி சீர்வரிசையும். ஜாலி அலங்காரமும் " என்ற சிறப்புக் கட்டுரை தன் மனதைக் கவர்ந்தது என்றும் ,அடுத்த தீபாவளிக்கு ஸ்ரீரங்கம் சென்று தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளும் ஆசையை இக்கட்டுரை தூண்டி விட்டது என்றும் கூறுகிறார் .

இரண்டாம் பரிசு பெற்ற சாய் சுதா சந்திரமௌலி, சென்னை சொல்கிறார்

202592416253438.jpg

சாய் சுதா

நான் உங்கள் இதழின் தொடர் வாசகி. விகடகவி நகைச்சுவை, அரசியல் நையாண்டி மற்றும் சமூக விமர்சனங்களுக்காக அறியப்படுகிறது . கால மாற்றங்களுக்கு ஏற்ப உள்ளடக்கங்களைச் சீரமைத்து, எடுத்துக்காட்டாக இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்திய விகடகவி இதழுக்கு வாழ்த்துக்கள்.

மூன்றாம் பரிசு பெற்றவரில் ஒருவரான வத்சலா வரதராஜன் , மும்பை

2025924162706534.jpg

வத்சலா வரதராஜன்

மும்பையில் உள்ள நண்பர் ஒருவரின் வாட்சப் தகவல் வழியாக கொலு போட்டி பற்றி அறிந்துக் கொண்டு ,பங்கு பெற்றதாகவும்கூறுகிறார் . பரிசு பெற்ற செய்தி தனக்கு ஆனந்த ஆச்சரியத்தைத் தந்ததாக கூறுகிறார் .

இனி விகடகவி இதழைத் தொடர்ந்து படிக்க இருப்பதாகவும் கூறுகிறார். தமிழ் பண்டிதையான அவரது தாயாரும் இனி விகடகவி இதழைத் தொடர்ந்து படிப்பார் என்றும் தெரிவித்துக் கொண்டார்.

2025924162958586.jpg

விஜயலக்ஷ்மி பாஸ்கர்

ஆறுதல் பரிசு பெற்றவர்களில் ஒருவரான விஜயலக்ஷ்மி பாஸ்கர் , விகடகவியின் நெடுநாள் வாசகர் என்று தெரிவித்தார் . இதழ் சிறப்பாக இருப்பதாகவும் , இப்போது இருக்கும் அமைப்பும், உள்ளட்டடக்கமும் நன்றாக இருக்கிறது என்றும் , எந்த மாற்றமும் தேவை இல்லை என்று தெரிவித்தார்.

ராஜேஸ்வரி பாஸ்கரன் மற்றும் ஸ்ரீப்ரியா ராஜகோபாலன் இருவரும் விகடகவி இதழுக்குத் தம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

2025924163437474.jpg

ராஜேஸ்வரி பாஸ்கரன்

2025924163605178.jpg

ஸ்ரீப்ரியா ராஜகோபாலன்

ரஞ்சனி ரமேஷ் குழந்தைகளுக்கென தனிப் பகுதி தொடங்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார்

2025924164934101.jpg

ரஞ்சனி ரமேஷ்

வாசகியர் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டோம்.

பரிசுப்பொருட்கள் வாசகியரை சேரத் தொடங்கி விட்டது .

நிறைவான மகிழ்ச்சியையும் ,நிலையான வளத்தையும் இப்பண்டிகை நாட்கள் அனைவருக்கும் தர வேண்டும் என்று விகடகவி சார்பில் வாழ்த்துகிறோம் .