தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

சமந்தா

2025924164109160.jpg

மும்பையில் புதிதாக ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி அங்கேயே நடிகை சமந்தா செட்டில் ஆகிவிட்டார். புது வீட்டில் தீபாவளி கொண்டாடிய படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.

ராஷ்மிகா

2025924155911915.jpg

"காதல் தோல்வியில் பெண்களுக்கு தான் பெரிய அளவு பாதிப்பு. ஆண்களைப் போல் தாடி வளர்க்க முடியாததால் பெண்களுக்கான பாதிப்பு வெளியே தெரியவில்லை" என்கிறார் நடிகை ராஷ்மிகா. உங்களது ஓகே ஆயிடுச்சு தானே ?

ஸ்ரீ லீலா

2025924162705809.jpg

ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடிக்கும் படம் மாஸ் ஜதாரா. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடி ரவி தேஜா. இந்தப் படத்தின் சூப்பர் டூப்பர் பாடல் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. ஸ்ரீ லீலா ரசிகர்களுக்கு இந்த தீபாவளி கொண்டாட்டம்தான் .

பிரியங்கா மோகன்

2025924161311916.jpg

நடிகை பிரியங்கா மோகன் கர்ப்பமாக இருப்பது போன்ற ஒரு போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட திருமணம் ஆகாமல் கர்ப்பமா என்று ரசிகர்கள் குழம்பி விட்டார்கள். அப்புறம் விசாரித்ததில் அவர் பவன் கல்யாணுடன் அவர் நடித்த "OG" பட ஸ்டில் என்பது தெரிந்தது.

காந்தா

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையும் மையமாக எடுக்கப்பட்ட படம் காந்தா. துல்கர் சல்மான் நடித்துள்ள இந்த படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது.

ராதிகா ஆப்தே

2025924163111765.jpg

"இந்திய சினிமாவை பொறுத்தவரை நடிகர்களுக்காக மட்டுமே படம் எடுக்கிறார்கள். நடிகைகளை ரொமான்ஸ் செய்வதற்கும் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். நடிகைகளின் திறமையை இருட்டடிப்பு செய்கிறார்கள் இயக்குனர்கள் "என்று குற்றம் சாட்டுகிறார் நடிகை ராதிகா ஆப்தே.

ருக்மணி வசந்த்

2025924161616492.jpg

நடிகை ருக்மணி வசந்துக்கு பிடித்த ஹீரோ நானி தான் என்கிறார். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க விருப்பம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் அம்மணி

மாளவிகா மோகன்

ஏற்கனவே விக்ரம் மோகன்லால் என வயசான நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கிறார் மாளவிகா மோகன் என்ற விமர்சனத்தை பற்றி கண்டுகொள்ளாமல் 70 வயது சிரஞ்சீவியின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் நடிகை. காசு பணம் துட்டு ...

பூஜாஹெக்டே

2025924160141708.jpg

விஜயின் ஜனநாயகம் படத்தில் நடித்து வந்த பூஜாஹெக்டேதனது பிறந்த நாள் பரிசாக ரெட் ஹாட் உடையில் காட்சி தரும் புகைப்படங்களைவெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தியிருக்கிறார்.அக்டோபர் 13ஆம் தேதி நடிகையின் பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஜனநாயகம் பட குழு ஒரு போஸ்டர் வெளியிட்டது.

கீர்த்தி சுரேஷ்

202592416041150.jpg

கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளுக்காக 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.