தீபாவளி இந்தியாவில் மட்டுமல்ல உலகளாவிய இந்தியர்களுக்கு, ஒரு மிகப் பெரிய பண்டிகை. கிட்டத்தட்ட இந்த பண்டிகயினால் வருடத்தில் வளர்ச்சியில் 25% பொருளாதார நேர்மறை மாற்றம் ஏற்பட்டு விடும். முதலாளிகள் மிகவும் எதிர்பார்த்திருப்பார்கள். மக்கள் ஆனந்தமாக மிகப் பெரிய அளவில் பெரிய சொத்துக்களை வாங்குவது, எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குவது போன்றவை நடக்கும் திருவிழா.
கிறிஸ்துமஸ் என்பது வர்த்தகம் சார்ந்த பண்டிகை என்று சொல்வார்கள். தீபாவளியின் விற்பனையும், வர்த்தகமும் அதற்கு சற்றும் குறைந்தது அல்ல.
ஐந்து நாட்கள் கொண்டாடும் இந்த பண்டிகை பற்றி எத்தனை பேருக்கு முழுமையாக தெரியும் ?
ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்பெஷல் அர்த்தம் உண்டு. அதில் அன்பு, வெற்றி, மற்றும் வளர்ச்சி அடங்கும்.
முதல் நாள் தன்தேராஸ் என்பார்கள்.

தீபாவளியின் முதல் நாள் உடல் நலத்திற்கும் நோய் குணம் செய்வதற்கும் அதிபதியான தன்வந்த்ரி பகவானின் நாளிது. செழிப்பின் அடையாளமாக தங்கம் வெள்ளி புது பாத்திரங்களை வாங்குவது மரபு.
இந்த வருடம் ஒரு ஸ்பெஷல் தான். ஜி எஸ் டி என்னும் வரி சாதாரண மனிதனின் வாழ்விற்குத்தேவையான பொருட்களில், இதில் கார் ஃப்ரிட்ஜ், அடங்கும், குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட சேமிப்பு இந்த அத்தியாவசங்களின் விற்பனையில் என்றும் இராத சாதனை நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக
46 டன் தங்கம், அதாவது ரூ.60,000 கோடி விற்பனை
வெள்ளி ரூ 15,000 கோடி விற்பனை
ஐந்து லட்சம் ஸ்கூட்டர்களும் பைக்குகளும் விற்பனை
மாருதியின் 51,000 கார்கள் உட்பட மொத்தமாக ஒரு லட்சம் கார்கள் விற்பனை
இதனாலேயே இந்திய பண்டிகைகளினால் பொருளாதாரம் ஒவ்வொரு பண்டிகையிலும் பொருளாதாரத்தில் நேர்மறை சுழற்சிகளைக் காண்கின்றன. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது. அனைவருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படுகிறது.
எனில், தீபாவளி பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கலாச்சார கொண்டாட்டம் என்றிடலாம்.
இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை, ஆன்மீக வெற்றியின் அடையாளமாக மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிடத்தக்க பருவகால பொருளாதார ஊக்கமாகவும் செயல்படுகிறது. இந்தத் திருவிழா நுகர்வோர் செலவினங்களில் எழுச்சியைத் தூண்டுகிறது, MSMEகள் மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கிறது, டிஜிட்டல் பொருளாதாரத்தில் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது, மேலும் ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல்கள் போன்ற துறைகளுக்கு புத்துயிர் அளிக்கிறது. இது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், குறிப்பாக முறைசாரா துறைக்குள் பங்களிக்கிறது, மேலும் ஒட்டுமொத்த பொருளாதார உணர்வை மேம்படுத்துகிறது.
நுகர்வு, உற்பத்தி மற்றும் புதுமைகளைத் தூண்டுவதன் மூலம், தீபாவளி பொருளாதார நடவடிக்கைகளின் நல்லொழுக்க சுழற்சியை வலுப்படுத்துகிறது. கலாச்சார மரபுகள் பொருளாதார உயிர்ச்சக்தியுடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது, கொண்டாட்டம் மற்றும் வர்த்தகத்தின் சந்திப்பில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது.
விளக்குகளின் பண்டிகையைக் கொண்டாடும் போது, இந்தியாவின் பொருளாதார நிலப்பரப்பை ஒளிரச் செய்வதில் அதன் பங்கையும் அங்கீகரிப்போம்
இரண்டாம் நாள் சோட்டி திவாளி என அழைப்பார்கள்.

ஸ்ரீகிருஷ்ண பகவான் நரகாசுர அரக்கனை வதம் செய்த நாள் இது. அந்த வெற்றியைக் கொண்டாடும் நாளிது. வெடி வெடித்து வாண வேடிக்கைகளும் உண்டு.
அன்று மக்கள் இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக அதிகாலையில் விழிதது, உடலில் எண்ணை தேய்த்து குளித்து, நீராடுவார்கள். அதனை கங்கா ஸ்நானம் என்று சொல்வார்கள். இல்லங்களில் தீபங்களை ஏற்று வித வித்மான வண்ணங்களில் கோலங்கள் போடுவார்கள். இல்லங்களை செம்மையாக அலங்கரித்து மகிழ்வார்கள். புத்தாடைகள் அணிவார்கள்.
மூன்றாம் நாள் லக்ஷ்மி பூஜை செய்வார்கள்.

இன்று செல்வங்களின் அதிபதி லக்ஷ்மிக்கு உகந்த நாளாகும். ஆக இன்று லக்ஷ்மி பூஜை தான் பிரதானம். இல்லங்களும் ஆலயங்களும் தீபங்களால் அலங்கரிப்பார்கள்.
நான்காம் நாள் கோவர்தன் பூஜை செய்வார்கள்.

இந்த நாளின் முக்கியத்துவம் சூறாவளியிலிருந்து கிராம மக்களை கோவர்த்தன மலையினை தனது சுண்டு விரலால் தூக்கி அடைக்கலம் தந்த நாளைக் குறிக்கும். சுற்றமும் நண்பர்களும் தங்களுக்கிடையே அன்பு பாராட்டு ஒருவருக்கொர்வர் பரிசளித்துக்கொள்வார்கள்.
இல்லறத்தில் கணவன் மனைவியரிடையேயும் பரிசுகள் பகிர்ந்தளிக்கப்படும்.
இறுதி நாள், அதாவது, ஐந்தாம் நாள் பாய் தூஜ் என்றழைக்கப்படும் மிக முக்கிய நாளாகும்.

அன்று, தான் சகோதர சகோதரிகளுக்குள்ளான அன்பு வெளிப்படுத்தும் நாளாகும்.
சகோதரிகள் தங்களது சகோதரர்களின் நலத்திற்காக அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வணங்கி வாழ்த்தி பிரார்த்தனைகள் செய்வார்கள்.
இதற்கு ஈடு செய்யும் விதமாக சகோதரிகளுக்கு சகோதரர்கள் பரிசுகள் கொடுத்து மகிழ்வார்கள்.
முக்கியமாக புஸ்வாணம் ஏற்றி மத்தாப்பு கொளுத்தி, வெடி வெடிப்பது இந்த ஐந்து தினங்களிலும் பார்க்கலாம்.செழிப்படைகிறது.
தீபாவளி என்பது ஒரு நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல.

Leave a comment
Upload