தொடர்கள்
வலையங்கம்
இதெல்லாம் ரொம்ப தப்பு

202592506503645.jpeg

மத்திய அரசின் தணிக்கை அறிக்கை சமீபத்தில் வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருக்கிறது. 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 14,808 கோடி செலவிடப்படாமல் திரும்பவும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

அவர்கள் செலவு செய்யாமல் திரும்ப அளித்த திட்டங்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் கட்டமைப்பை மேம்படுத்தல், பல தொழில் பயிற்சி பயிலகங்கள் மேம்படுத்தல், ஆதிதிராவிடருக்கு கட்டப்படும் கற்காரை வீடுகளுக்கு மேற்கூரை செலவு ,இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வீடுகளுக்கு மேற்கூரை செலவு , நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துதல் என்று மக்களுக்கான திட்டங்களுக்கு சென்ற நிதி ஆண்டில் பயன்படுத்தாமல் அந்தப் பணத்தை திருப்பி அனுப்பி இருக்கிறார் சம்பந்தப்பட்ட துறை. இதற்கு காரணம் வெரி சிம்பிள். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசியல் தலைவர்கள் யாராவது தடையாக இருந்திருப்பார்கள் அல்லது கமிஷன் விஷயத்தில் ஏதாவது சிக்கல் இருந்திருக்க வேண்டும். அதாவது அவர்களுக்கு கமிஷன் கிடைக்காமல் போயிருக்கும். இதுதான் உண்மை.

ஒரு பக்கம் மத்திய அரசு நிதி தரவில்லை என்ற புலம்பல் இன்னொரு பக்கம் தந்த நிதியை சரியாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பும் அவலம். இதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க அரசு யோசிக்க கூடாது. எதிர்காலத்தில் இந்த நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்று கவனிக்க வேண்டிய கடமையும் பொறுப்பையும் அரசாங்கம் புறக்கணிக்க கூடாது.