தொடர்கள்
அனுபவம்
குருவருளும் திருவருளும் - 52 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

2025102613163452.jpg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ப்ரம்ம ஸ்ரீ கணேசன் மாமா & ஸ்ரீ சங்கரன்

இந்த வார அனுபவம் மிகவும் எனக்கு நெருக்கமானது. காரணம் இவர்கள் பகிரும் இடங்கள் எனக்கு பரிச்சயமானது. எனது பால்ய காலத்தில் பரீட்சைக்கு படிப்பதற்கு அதிகம் புழங்கிய இடம் ஸ்ரீ கதிர்காம சுவாமிகள் மடம் . இவர் குறிப்பிடும் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஸ்ரீ கிருபானந்தவாரியார் அவர்களின் பேச்சை கேட்டு அவரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நினைவுகள் உண்டு. இவரின் அனுபவம் அதிகம் சீர்காழியை சுற்றி வருவதனால் மேலும் மகிழ்ச்சி.

மிக மிக வயதான ஒருவர் ஸ்ரீ மகா பெரியவாளை பற்றி பேசும்போது எப்பேர்ப்பட்ட உற்சாகம் தொற்றிக் கொள்கிறது என்பதை இந்த காணொளி மூலம் அறியலாம். எப்பேர்ப்பட்ட ஆனந்த அரட்டை. சில வார்த்தைகள் சரியாக விழவில்லை அதனால் அமைதியாக இந்த காணொளியை கேட்டீர்களானால் உங்களுக்கு ஸ்ரீ மகா பெரியவாளின் தரிசனம் கிடைக்கும்.

இந்த வார தரிசனம் வரம். ஆம் நாம் காண,கேட்க நமக்கு கிடைத்த வரம்.