தொடர்கள்
அழகு
திருவள்ளுவர் சிலையைச் செய்தது ஒரு ஆயுள் தண்டனை கைதி !!- கடல் நாகராஜன்

20260107074544647.jpeg

இந்த அழகானஅருமையான அய்யன் திருவள்ளுவர் சிலையைப் பாருங்கள்! இதைச் செய்த சிற்பி யின் பெயர் என்ன ?

பொதுவாக இது போன்ற சிலைகளைக் கைதேர்ந்த சிற்பியோ அல்லது சிற்ப சாஸ்த்திரம் பயின்ற ஸ்தபதிகளோதான் செய்வது வழக்கமாகும்!

ஆனால் இந்த அற்புதமான சிலையைச்செய்தவர் ஒரு ஆயுள் தண்ட னைக்கைதி!

அவர் பெயர் கலைக்கண்ணன்.

என்ன பொருத்தமாக பெயர்?

கடலூர் வண்டிப்பாளையம் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகம் கடலூர். இந்தச் சிலையை ஒரு திருவள்ளுவர் தினத்தன்று பிரபல நீதிபதி இராமசுப்பிரமணியன், திறந்து வைத்தார். இந்த சிலைக்கு எதிரில் அமரகவி பாரதியார் சிலையும் உள்ளது காரணம்! அவர் இந்தச்சிறையில்1918- ல் விடுதலைப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் 25-_நாட்கள் கைதியாக இருந்தார் இந்த சிலையில் பீடத்தில் ஒரு பொருத்தமான குறளும் எழுதப்பட்டுள்ளது, அது குறள் எண் 505.

என்ன குறள் அது ?? அட கூகுள் பண்ணி பாருங்களேன்.