தொடர்கள்
பொது
நாடு முக்கியம் : மோதியின் ஏழு வேண்டுகோள்கள்

2026041123130456.jpeg

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் 2014 பிப்ரவரியிலேயே ஆரம்பித்து விட்டாலும், முழு வீச்சில் பிப்ரவரி 24, 2022 லிருந்து கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது.

இஸ்ரேல்- ஹமாசுடனான போர் அக்டோபர் 7, 2023லிருந்து ஆரம்பித்து புற்று நோய் மாதிரி லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் தீவிரமடைந்துள்ளது.

பிப்ரவரி 28, 2026 அன்றிலிருந்து இஸ்ரேல் ஈரானுடன் போர் ஆரம்பித்துள்ளது. இதில் அமெரிக்காவும் சேர்ந்துகொண்டுள்ளது. போர் அதி பயங்கரமாக நடந்து கொண்டிருக்க, வளைகுடா நாடுகளும் சேர்ந்துகொண்டன. ஈரான் ஹொர்முஸ் ஜலசந்தியை அடைத்துவிட, குரூட் எண்ணெய்க்காக உலகமே ஸ்தம்பித்தது.

இந்த நிகழ்வினால், உலக அளவில் எண்ணெய் விலை வானத்தை எட்டியுள்ளது. இந்த நிலை கால வரையின்றி வேறு போய்கொண்டிருக்கிறது.

இதை மனதில் நிறுத்தி பிரதமர் மோதி நாட்டு மக்களுக்கு ஏழு வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.

1) அடுத்த ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதை ஒத்திப் போடுங்கள்.

2) முடிந்த வரையில் கம்பெனிகள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையைக் கடைப்பிடிக்கவேண்டும்.

3) அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யுங்கள்.

4) சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் உலக அரங்கில் விலை வாசி ஏற்றத்தால் அந்நிய செலாவணி வெகுவாக விரைந்து குறைய வாய்ப்பு இருப்பதால், சமையல் எண்ணெய் உபயோகிப்பைக் குறைக்க வேண்டும்.

5) ரசாயன உர உபயோகிப்பிலிருந்து இயற்கை விவ்சாயம் செய்யும் முறைக்கு மாறுங்கள்.

6) வெளிநாட்டு பொருட்களுக்கு பதிலாக உள்நாட்டு உற்பத்தி பொருட்களையே வாங்குங்கள்.

7) வெளிநாட்டு பயணங்களை அடுத்த ஒரு வருடத்திற்கு ஒத்தி வைய்யுங்கள்.

எப்போதும் போல எதிர்கட்சிகள் குய்யோ முறையோ என அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து அப்போதெல்லாம் சொல்லாமல் தேர்தல் முடிந்து விட்டதே மக்கள் தலையில் சுமையை மத்திய அரசு இறக்குகிறது என குற்றச்சாட்டுக்கள் கார சாரமாக பறக்க விடுகிறார்கள்.

இது ஒன்றும் இந்திய மக்களுக்குப் புதியதல்ல.

நாட்டின் ஒழுக்கம் (national discipline) என்ற வகையில் இந்திரா காந்தி 1967 தங்கம் வாங்காதே என்றார்.

2026041214315280.jpeg

2013இல் அன்று நிதி அமைச்சராயிருந்த பி. சிதம்பரமும் அன்றய தினத்தில் ஏதொரு உலக அளவிலான நெருக்கடியும் இல்லாத சமயத்தில் தங்கம் வாங்காதே என்று சொல்லியிருக்கிறார். இன்று அதே கட்சி குறை சொல்கிறது.