ஒரு வருடம் கல்வி ஆண்டு முடிந்து கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு என்பது ஒரு புது யூகத்தினுள் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் நுழைவது என்பது தான்.

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் புது வகுப்புக்கு மாணவர்கள் செல்ல அவர்களை வரவேற்று புது வருடத்தினுள் அழைத்து செல்கின்றனர் ஆசிரியர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று.
ஒரு பக்கம் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருவார்கள் அதே சமயம் ஆசிரியர்களுக்கு மற்ற ஒரு சவாலான வருடம் துவங்குகிறது என்பது தான் உண்மை.
ஒரு வருட கல்வி ஆண்டு முடிந்து மீண்டும் புது வருடத்தினுள் மாணவர்கள் பள்ளிக்கு செல்வது ஒரு புதுமையை படைக்க தான் என்பது அவர்களுக்கு புரிகிறதோ என்னவோ ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்பட துடிக்கும் ஒரு ஜீவன்கள் என்பது எவருக்கும் புரிவதில்லை.

எப்படி நீதி மன்றங்களுக்கு குளிர்கால மற்றும் கோடை விடுமுறை உண்டோ அது போல பள்ளிகளுக்கும் விடுமுறை உண்டு ஏன் என்றால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் போராடி சோர்வாகுவது நீதிபதிகளும் ,வக்கில்களும் ,
ஆசிரியர்களும்.
அதிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு ஆசிரியர்களின் நிலமை மிகவும் வேதனையானது மாணவர்களின் எதிர் கால வெற்றியை உறுதி செய்ய வருடம் முழுவதும் போராட வேண்டி உள்ளது.

பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்தால் இரவு 8 மணிக்கு தான் வீட்டுக்கு செல்வது சகஜமாகிவிட்டது.
பல பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் தலைமையாசிரியர்களின் நிலைமை மிக கடினமானது கண்ணும் கருத்துமாக பள்ளிகளை வழிநடத்தி சென்று நூறு சதவிகிதத்தை எட்ட ஆசிரியர்களுடன் இணைந்து முழு மூச்சாக பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது.
இதில் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் கெடுபிடி ஒரு சவால்கள் நிறைந்த நாட்களாக தினமும் நகர்வது இயல்பாக உள்ளது.
தற்போது மாணவர்களை பள்ளிகளில் வழிநடத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று.
பெற்றோர்களின் வளர்ப்பில் கண்டிப்பு இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையானது பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மத்தியில் மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
போதை பொருட்களை மாணவர்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
முடி வளர்ப்பு குறித்து மாணவர்கள் மத்தியில் அட்வைஸ் செய்தால் பிரச்சனை எழுகிறது.
டூ வீலர் ஓட்டி விபத்தில் சிக்கும் மாணவர்கள் அதிகம். நண்பர்கள் என்ற பெயரில் ஏகபட்ட பிரச்னைகள் நடக்கின்றன.
மாணவர்கள் கழுத்திலும், கைகளிலும் செயின்கள் அணிந்து வர அரசின் ஒழுங்கு நடவடிக்கை பேரில் ஆசிரியர்கள் அவைகளை களைந்து எடுத்து வைக்க அதை பற்றி ஆசிரியர்கள் மறந்து போக வருடம் முடிந்தவுடன் என் செயின் வேண்டும் என்று கூறி போனில் ஆசிரியர்களை மாணவர்களும் பெற்றோர் போனில் அழைத்து மிரட்டுவது அந்த செயின் வெள்ளி என்று கூறி புதியது வாங்கி கொடு என்று மிரட்டி அந்த செயின் எங்கே என்று தெரியாமல் ஆசிரியர்கள் தேடி வேறு வழி இல்லாமல் புதிய வெள்ளி செயின், பிரெஸ்லெட் வாங்கி கொடுத்த ஆசிரியர்களும் உண்டு.
இவற்றையெல்லாம் கண்டிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருந்தும் தங்களின் பிள்ளைகள் சொல்வது தான் நியாயம் என்று தோன்றுகிறது அவர்களுக்கு.
பொறுப்புணர்வுடன் கண்டிக்கும் ஆசிரியர்களுக்கு ஏகபட்ட பிரச்னைகள் வருவது மிக பெரிய தலைவலி என்பது யாருக்கும் புரிவதில்லை.
பெண்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.
உடல் ரீதியான பிரச்சனைகள் காதல் என்று மன ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் சிக்கல்கள் குறித்து போராடிக்கொண்டிருக்கும் ஆசிரியைகளை பார்க்க முடிகிறது.
அரசு பள்ளிகளை பொறுத்தவரை குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர் அதனால் அவர்களை சமாளிக்க முடிகிறது.
அதே சமயம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏக பட்ட பிரச்னைகளை ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் போது ஏகபட்ட தொல்லைகள் சந்தித்து வருகின்றனர்.
சில தனியார் மற்றும் அரசு உதவிபெறும் நிர்வாக பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது.
உதாரணத்திற்கு ஊட்டி நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் சம்பந்தப்பட்ட நிர்வாகி ஆசிரியைகளை மிகவும் கேவலமாக திட்டுவது கொத்தடிமை போல நடத்துவது.
இந்த பள்ளி ஆசிரியர்களுக்கு காலாண்டு,அரையாண்டு மற்றும் கோடை விடுமுறை விடுவது இல்லை.
விடுமுறை நாட்களில் அனைத்து ஆசிரியைகள் பள்ளிக்கு வருகைப்புரிந்து டாய்லெட் முதல் வகுப்புகள் டெஸ்க், பென்ச் என்று சுத்தம் செய்வது வழக்கமாகி போய்விட்டது.
ஞாயிற்று கிழமைகளில் குறிப்பிட்ட ஆசிரியைகள் பள்ளிக்கு வந்து காலையில் இருந்து மாலை வரை பள்ளியை பாதுக்காத்து உற்று கவனித்து கொண்டிருக்க வேண்டும் என்ற உத்தரவாம்!.
மேலும் ஆசிரியைகளுக்கு லீவு வேண்டுமென்றால் நிர்வாகி வியாபார ஸ்தலத்திற்கு சென்று கால் கடுக்க நின்று வணங்கி லீவு கேட்க நாலு வார்த்தை திட்டு திட்டி ஓகே சொல்வது கொடூர வழக்கமாம் இதையெல்லாம் சகித்து கொண்டு பணி செய்வதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருப்பது யாருக்கு தெரியும்?!.

இத்தனை கஷ்டங்களை சகித்து கொண்டு முதல் நாள் பள்ளிக்கு வரும் மாணவிகளை குங்குமம் சந்தனம் கொடுத்து இன் முகத்துடன் வரவேற்று உள்ளே அழைத்துச் செல்லும் பாவப்பட்ட ஆசிரியைகளை பாராட்ட யாருமில்லை!.
ஒரு புறம் கல்வி சேவை புரியும் ஆசிரியர்களை தேர்தல் பணி என்று வற்புறுத்தி பி எல் ஓ வேலை மற்றும் பூத் சிலிப் வீடு வீடாக சென்று அலைந்து திரிந்து உடல் மனரீதியாக பாதிக்க பட்டுள்ளனர்.
உன்னதமான பொறுப்பான ஆசிரியர்களை கேவல படுத்தும் சமுதாயத்தில் கல்வி பணியாற்றும் ஆசிரியர்கள் தெய்வங்கள் தான்!.
புது கல்வி ஆண்டு பிறந்து மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக நிற்க தயார்படுத்தி கொண்டுள்ளனர் இந்த குருக்கள்.

Leave a comment
Upload