தொடர்கள்
கல்வி
பாரம்பரியக் கலைகளுடன் ஆங்கில வழிக்கல்வி..!! - மீனாசேகர்.

English medium education with traditional arts..!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமகோடி திரிவேணி சங்கீத பாடசாலை, காஞ்சி காமகோடி பீடத்தின் வழிகாட்டுதலில் பிராமண சிறுவர்களுக்கான ஒருங்கிணைந்த உறைவிடப் பாடசாலையாக (Residential Patasalai) வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆசிகளுடனும், வழிகாட்டுதலுடனும் இந்த பாடசாலை 2018 ஆம் ஆண்டு ஏழு மாணவர்களுடன் தொடங்கப்பட்டது, இப்போது இருபத்தொரு மாணவர்கள் உள்ளனர்.

English medium education with traditional arts..!!

இந்த உறைவிடப் பாடசாலையில் பாரம்பரியக் கலைகள் மற்றும் வேதக் கல்வியை நவீனக் கல்வியுடன் இணைத்து வழங்குகிறது.
இந்த பாடசாலையின் சிறப்பம்சம் என்னவென்றால் முறையாகக் கர்நாடக சங்கீதம் பயிற்றுவிக்கப்படுகிறது. மிருதங்கம், வயலின், கடம் போன்ற இசைக்கருவிகள் வாசிப்பதில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சமஸ்கிருத மொழியுடன் கூடிய வேதக் கல்வி மற்றும் பாரம்பரிய கலாச்சாரக் கோட்பாடுகள் கற்றுத்தரப்படுகின்றன.

English medium education with traditional arts..!!

மேற்கூறிய பாரம்பரியக் கலைகளுடன் சேர்த்து, மாணவர்களுக்குத் தரமான ஆங்கில வழிக் கல்வியும் (Regular English medium education) வழங்கப்படுகிறது. 12 ஆம் வகுப்பை முடித்த மாணவர்கள், தங்கள் மேல்படிப்புக்காக இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் சேர்க்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் சங்கீதம் மற்றும் வேதக் கல்வியையும் தொடர்கிறார்கள்.

English medium education with traditional arts..!!

சாஸ்திரியைச் சங்கீதத்தையும் பேணி காத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் ஸ்ரீ பெரியவாளின் எண்ணங்களை நோக்கி இந்த பாடசாலை செயல்படுகிறது. இந்த பாடசாலையில் படிக்கும் அனைத்து வித்யார்திகளுக்கும் தரமான உணவும், தங்கும் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு வருடாவருடம் புதிய மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.

English medium education with traditional arts..!!

மாணவர் சேர்க்கை மற்றும் பாடசாலை குறித்த கூடுதல் தகவல்களை அறிய, Kanchi Integrated Patasalas இணையதளத்தைப் பார்வையிடலாம்.

English medium education with traditional arts..!!

மேலும், பின்வரும் எண்களிலும் தொடர்பு கொண்டு பேசலாம்: 9176555396, 9176534702

அஞ்சல் முகவரி:
காமகோடி திரிவேணி சங்கீத பாடசாலை
ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி
அரங்கநாதன் சுரங்கப்பாதை சாலை
57, கே.ஆர்.கோயில் தெரு
மேற்கு மாம்பலம்
சென்னை 600033

English medium education with traditional arts..!!

https://youtu.be/HsESAv6GAb0

https://youtu.be/A7MeZCSyhGs?si=gswsi3adszXaw8Xq