
புதிய கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. மாணவ செல்வங்கள் அடுத்த வருட வகுப்புக்கு குழியாக வரப்போகிறார்கள். அவர்களுடனே நமது புதிய கல்வி அமைச்சரும் படு ஆர்வத்துடனும்,உற்சாகத்துடனும் அவர்களை வரவேற்க தயாராக இருப்பார் என்பதில் ஐயமில்லை.
புது வருடம், புது ஆட்சி அதுவும் பள்ளி சிறார்களுக்கு பிடித்த [ அடம் பிடித்த ] முதல்வர் பொறுப்பேற்று இவர்கள் பள்ளி செல்லும் முதல் நாள், முதல் வருடம். முதல் முறையாக இது வரை இல்லாத அளவிற்கு வகுப்பறையில் மாணவர்கள் அரசியல் பேசுவார்கள் என்று எண்ணுகிறேன். இன்னும் சொல்ல போனால் பல மாணவர்கள் சென்ற வருட இறுதி நாளில் விஜய் ஜெயிப்பாரா மாட்டாரா என்று பெட் கட்டி சென்றதும் உண்டு.அவர்களில் பலருக்கு ஜாலியும்,சிலருக்கு பீதியாகவும் இருக்கும்.
முதல் முறையாக அதிமுகவும் அல்லாத, திமுகவும் அல்லாத ஒரு அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த அரசு திமுகவை பின்பற்றுமா அல்லது அதிமுகவை பின்பற்றுமா என்பது போக போக தெரியும். பெரும்பான்மையான விஷயங்கள் திமுகவை சார்ந்தே இருக்கிறது. அதில் முக்கியமானது மும்மொழிக்கொள்கை எதிர்ப்பது இருமொழி கொள்கையை ஆதரிப்பது.
ஒருவர் ஒரு மொழியை கூடுதலாக கற்பதனால் தங்களது தாய் மொழி அழிந்துவிடும் என்பதை நம்புகிறது ஒரு கூட்டம். ஆனால் தங்களது தாய் மொழியை பயன்படுத்த தவறினால் கூட தங்களது மொழி அழியும் என்பதை உணர மறுக்கிறார்கள். சென்ற ஆண்டு PM SHRI திட்டத்தில் தமிழர்கள் சேராததனால் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் தமிழகத்திற்கு வரவில்லை. இந்த ஆண்டு வருமா வராதா என்பதே தற்போதைய கேள்வி.
இந்த அரசாவது மத்திய அரசின் கொள்கைகளை ஆராய்ந்து அதில் உள்ள முக்கிய நலன்களை கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்களை போல் PM SHRI திட்டத்தில் சேர்ந்து நமக்கான நிதியை பெற்று கல்வி தரத்தை உயர்த்துவர்களா மாட்டார்களா என்பது பார்ப்போம்.
தமிழ் இங்கிலீஷை தவிர மற்ற மொழிகள் தெரியாது போடா !! என்பதி என்ன பெருமையோ ??

Leave a comment
Upload