தொடர்கள்
அரசியல்
விவசாய கடன் தள்ளுபடி குழப்பம் –கண்ணாழ்வார்.

20260429185751257.jpeg

கூட்டுறவு வங்கியில் சிறு-குறு விவசாயிகள் பயிர் கடனை முழுமையாகவும், பெரு விவசாயிகளுக்கான கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்வேன் என்று தேர்தல் வாக்குறுதி மற்றும் அறிக்கையில் நேரடியாகவும் இது உத்திரவாதம் என்று தேர்தல் பிரசாரத்தில் விஜய் பேசியிருந்தார்.

தமிழக புதிய முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட C.ஜோசப் விஜய் 2044.46 கோடி விவசாய கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டார்.

20260429204857608.jpg

2021 ஆண்டு தமிழக அரசு தள்ளுபடி செய்த பயிர் கடன் ருபாய் 12,000 கோடி.இதில் தற்போது தற்போது விஜய் அரசு விவசாய கடனை விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்தது வெறும் கண்துடைப்பு நாடகம் என தமிழகம் முழுவதும் விவசாய அமைப்புகள் கொந்தளித்து சாலைக்கு வந்து போராட தொடங்கி விட்டது.

முதல்வர் விஜய்க்கு தலைமை செயலக அதிகாரிகள் தவறான தகவல்களை தந்து விவசாயிகள் வயிற்றில் அடிக்கின்றனர் என்கின்றனர் ஏழை விவசாயிகள்.

தமிழகத்தின் நிதிநிலைமை சிரமத்தில் இருப்பதாக சொல்வதை ஏற்று கொள்ள முடியாது, தமிழகத்திற்கு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் தான் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசினை காரணம் காட்டி இரண்டு மாதத்திற்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று சொல்வதும் ஏற்கதக்கது அல்ல என்று விவசாய சங்கங்கள் கோபத்தில் பொங்கி எழந்துள்ளது.

20260429185953783.jpeg

திமுக ,அதிமுக இரு கட்சிகளும் இந்த கடன் தள்ளுபடி ஒரு கண்துடைப்பு என்று எதிர்த்து குரல் கொடுத்துள்ளது.

விவசாயிகளுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காத இந்த பயிர கடன் தள்ளுபடி திட்டத்தினை ரத்து செய்து ,முதல்வர் விஜய் அளித்த உத்திரவாதப்படி பயிர் கடன் முழுமையாக சிறு-குறு விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யவும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீத தள்ளுபடி செய்ய புதிய அரசானையை முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று தமிழக விவசாய சங்கங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

செய்வாரா முதல்வர் ?!