
2015ஆம் வருடம். அவரது சதாபிஷேகத்தை மும்பையில் பெரிவா மட்டுங்கா சங்கர மடத்தில் கேம்ப்.
அவருக்கு இரு நாள் கைங்கர்யம் செய்யக் கொடுத்து வைத்திருந்தேன்.
.இன்று (ஜூலை 31, 2026) அவரது 92 வது ஜெயந்தி. 
அன்று, பக்தர்கள் குடும்பத்தாரோடு வந்த வண்ணமிருந்தனர்.
பழங்கள், கல்கண்டு, இனிப்புகள், உலர்ந்த அல்மான்ட்ஸ் ,பூ மாலைகள் சால்வைகள் என வட நாட்டவர்கள்கூட அவருக்கு படைத்த வண்ணமிருந்தனர்.
தண்டாதிபதியாக அமர்ந்த கோலம். வலக்கை அபயஹஸ்தமாக வந்தவரை அருள் பாலித்துக்கொண்டிருந்தார்.
படைக்கப்பட்ட பழங்கள், இனிப்புகள் வந்தவர்க்கெல்லாம் பிரசாதமாக தரப்பட்டன. சிறப்பான பிரசாதமாக காமாக்ஷி அம்மன் குங்கும பிரசாதம் வழங்கப்பட்டன.
மதியம் இரண்டு மணியிருக்கும். என்னை அழைத்து வந்த நண்பர் வேலையாக வெளியில் சென்றிருந்தார்.
நானும் அவரும் அந்த ஹாலில் தனித்து விடப்பட்ட போது என்னைக் கண்ட பெரிவா, உள்ளே யாரையோ கூப்பிட்டு," யாரிந்த பைய்யன்? உள்ளேயிருந்து வந்தவர் என்னை தூரத்தில் பார்த்தவர். வாலன்டீயர் என்றார்.
வாலன்டீயர்னா என்று பெரியவா சொல்லிவிட்டு என்னைப் பார்த்து,' இந்த வாப்பா!" என்றார் கனிவுடன்.
நீ யார்? எந்த ஊர்? என்று கனிவுடன் கேட்க எனது சப்த நாடியும் ஒடுங்கி நா தழு தழுத்தது.
பேச்சு வரவில்லை.
வாயருகே குழித்த வலது உள்ளங்கை வைத்துக் கொண்டு, அவரது கனிவின் உரம் பெற்றவனாக,
"நேனு கிருஷ்ணமூர்த்தி! ஊரு திருநெல்வெலி!” என்றேன்.
“ஓ...தெலுகா! நாகு கூட தெலுகு வச்சு!” என்றார்.
சுதாரித்துக்கொண்டு,.....
தமிழிலேயே பேச ஆரம்பித்தேன்....
அப்பா பேரைச் சொன்னேன்!
அவரது பூர்வீக கிராமம், எனது அப்போதைய பணி பற்றி கேட்டுக்கொண்டார்.
காஞ்சி சங்கர மடத்துடன் மிக மிக நெருங்கியவருடன் சில பெரியவர்களுடன் 2013ல் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
இன்னும் பெரிவாவின் கேஸ் நடந்து கொண்டிருந்த நேரமது (அந்த வருடம் நவம்பர் 27 அன்றுதான் கொலை வழக்கு தவிடு பொடியானது). அந்த கேஸ் பற்றி நிறைய சொன்னார்.
ஆதி சங்கரருக்குப் பிறகு கைலாச யாத்திரை மேற்கொண்ட சங்கராச்சரியார் இவர் மட்டும் தான்.
காரிலும் ப்ளேனிலும் பயணிக்கும் ஸ்வாமி என்று நா கூசாமல் சொல்லும் அறியாதவற்கு அவர் சொன்னது,
” இந்த பெரிவா மட்டும் தான் பாரத தேசத்தை ஒரு முறையல்ல, மூண்டு முறை பாத யாத்திரையாக வலம் வந்திருக்கிறார்”. மஹா பெரியவாளுடன் அநாவசியமாக ஒப்பீடு செய்வது சாதாரணமானவரின் குணம், அது தவறு. அவரது காலத்திற்கேற்ப அவரது பணிகள் இருந்தன.
அடல் பிஹாரி வாஜ்பபாய் ஆட்சியின் போது அவரது வேண்டுகோளுக்கிணங்கி, ஜயேந்திர பெரியவா அயோத்தியா பிரச்சினைக்கும் சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினரோடு கூடிப் பேசி ஒரு சமாதான முடிவைப் பெற்றிருந்தார்.
2008 மஹா சிவராத்திரி சமயத்தில் பாந்த்ரா குர்லா காம்ளெக்ஸ் பகுதியில் ஒரு பெரிய விழா நடந்தது. பத்து லட்சங்களைத் தாண்டியது பங்கேற்றொரின் எண்ணிக்கை.
என்னிடம் வந்து பேசிய தாராவி போலீஸ் ஸ்டேஷன் தலைமை அதிகாரியும் அவரது கூட இருந்த நான்கு போலீஸ் அதிகாரிகளும், “பெரிவா படத்தைக் காண்பித்து இவரையா ஜெயில்ல போட்டீங்க? உங்களுக்கு அறிவேயிலையா?
எப்பேர்ப்பட்ட மனிதர் அவர். ஆசியாவிலேயே மிகப் பெரிய சேரி(ஸ்லம்) ஏரியா தாராவியில் அவர் கால் பதியாத இடம் இல்லை.
சமய நல்லிணக்கம் மனதில் கொண்டு அவர் அமைத்த சமூக நலத் திட்டங்கள் ஏராளம். அதில் மதம், ஜாதி கிடையாதே. எங்க ஸ்டேஷனில் அவர் பூஜையும் செய்து வைத்திருக்கிறார். அப்பேர் கொண்ட மனிதரையா குற்றவாளி என்கிறீர்கள்?” என்று பொரிந்து தள்ளி விட்டார்கள்.
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஒரு சமூக சீர்திருத்தவாதி என்பதில் ஐயமே இல்லை.
அவரது 64 வருட சந்நியாச வாழ்வில்,
பக்தி, சமூக நலம், சுகாதாரம், குழந்தைகள் பராமரிப்பு, அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், சுகாதாரம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு, கிராமியக் கைவினைத் தொழில்கள் மற்றும் கல்வி ஆகியவற்றை மேம்படுத்த அவர் சுமார் 1000 நிறுவனங்களை நிறுவினார்.
அவரது அன்பும் கருணையும் மக்களின் துயரங்களைப் போக்கி, அவர்களை தர்மத்தின் பாதையில் வழிநடத்தின.

"நான் செதுக்கி முடிக்கும் வரை, நீ ஒரு பாறையாகவும் நான் ஒரு சிற்பியாகவும் இருந்தோம். இப்போது நான் வேலையை முடித்துவிட்ட நிலையில், நீ கடவுளாகிவிட்டாய்; நானோ தீண்டத்தகாதவன் ஆகிவிட்டேன்!!!
கடைசியாக ஒருமுறை உன்னை ரசிக்க விடு; நாளிலிருந்து உன் கோவிலுக்குள் நுழைய எனக்கு அனுமதி இருக்காது."
பெரியவா அந்த நிலையை மாற்றினார்.
சாதி அல்லது மத வேறுபாடின்றி கோவிலுக்குள் நுழையும் முறையை அவர் முன்னின்று நடத்தினார்.
பலருக்கும் மூடப்பட்டிருந்த கோவில் கதவுகளைத் திறப்பதற்கான இயக்கங்களுக்குத் தலைமை தாங்கினார்.
"தீண்டத்தகாதவர்கள்" என்று ஒதுக்கப்பட்டவர்களின் வாழ்வில் அவர் ஊடுருவி, அவர்களை இறைவனுடன் மீண்டும் இணைத்தார்.

Leave a comment
Upload