
சட்டமன்ற கூட்டத்துடன் முடிந்த பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டப்படும் எடப்பாடி பழனிச்சாமி.
ஒன்னும் அவசியம் இல்ல பொறுமையா ஆகட்டும் !!
காங்கிரஸ் தயவு வேண்டும் என்பதால் கர்நாடகாவை கேள்வி கேட்க முதலமைச்சருக்கு பயம் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
நீங்க உங்க சொந்த அனுபவத்தை சொல்றீங்க, கரெக்டா தான் இருக்கும் !!
காவிரி தீர்ப்பை காப்பாற்ற முடியாத கையாலகாத தமிழக வெற்றிக்கழக அரசு எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு.
காவிரிப் பிரச்சனை உங்களுக்கு நல்லா மெல்ல கிடைத்த அவல் சாப்பிடுங்க சாப்பிடுங்க !!
எதிர்க்கட்சிகளை சந்திக்க தமிழக வெற்றி கழகம் தயக்கம் காட்டுகிறது டிடிவி தினகரன்.
என்ன பேசுறீங்க ? எல்லா எதிர்க்கட்சியும் அவங்க கூட தானே இருக்கு !!
நாடு முழுவதும் 158 தேர்வு முறைகேடு வழக்குகள் தேக்கம்.
பேசாம எல்லோரையும் 'ஆல் பாஸ் 'பண்ணிடுங்க, பிரச்சனையே வராது !!
தமிழகத்திற்கு நீர் திறக்கும் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு.
ஆனால், இயற்கை தானாக திறந்து விட்டு விட்டது பார்த்தீர்களா !!
இடைத்தேர்தல் எப்போது வரும் என கொலை வெறியோடு காத்திருக்கிறேன் சீமான்.
எப்படி இருந்தாலும் டெபாசிட் கிடைக்கப்போவதில்லை, எதுக்கு இந்த டென்ஷன் !!
திமுக மேலிடம் சொல்வதை கர்நாடக முதல்வர் கேட்கிறார் அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு.
இப்ப அவங்க கூட கூட்டணி இல்லை என்பது கூட தெரியாத அப்பாவியாவா இருக்கிறார் அந்த முதல்வர் ?
நூறு முறை குண்டு மிரட்டல் விடுத்தேன் கைதான இன்ஜினியர் வாக்குமூலம்.
ஏதாவது கின்னஸ் சாதனைக்கு ட்ரை பண்றார் போல தெரியுது !!
தனியார் தொழிற்சாலைகளை முதலமைச்சர் விஜய் இன்று பார்வையிடுகிறார்.
சீக்கிரம் போங்க, உங்களுடன் செல்பி எடுக்க ரசிகர்கள் அங்கே வெயிட்டிங் !!
பிரதமர் மோடியின் அசுர வளர்ச்சியை பார்த்து ராகுல் காந்தி பயப்படுகிறார் மத்திய மந்திரி பியூஷ்கோயல்.
இருக்காதா பின்ன, எல்லோரும் அவரை பற்றி தான் பேசுறாங்க, இவரை கண்டுக்க மாட்டேங்குறாங்க !!
தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி, உரிமை குறித்து பேசாதவர்கள் துரோகிகள் ராகுல் காந்தி மீது திமுக மறைமுக சாடல்.
ராகுல் காந்தி அப்படின்னு பேர் சொல்லி தைரியமா எதிர்க்க இன்னும் மனசு வரல பாவம் !!
சுதந்திரம் என்பது இளம் தலை முறையினர் விரும்பியதை செய்யும் உரிமை அல்ல அஜித் தோவல் பேச்சு வைரல்.
அதானே, பிரதமர் மன்னிப்பு கேட்கணும்னு எல்லாம் பேசலாமா ?

Leave a comment
Upload