
மகாகவி பாரதியாரின் 105-ஆம் ஆண்டு நினைவு நாள் விழா இன்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், விக்சித் பாரத் இயக்கத்திற்கான கல்விக்கொடியை உருவாக்கிய முனைவர் ஜெ. கோமளலக்ஷ்மி அவர்களின் கல்விக்கொடியும் கொடிப்பாடலும் மறுவெளியிடப்பட்டன.
மகாகவி பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில் கூறிய “வையத்தலைமை கொள்” என்ற வரி, தனிமனித முன்னேற்றத்தைத் தாண்டி உலகிற்கு வழிகாட்டும் உயர்ந்த மனித ஆற்றலை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. அந்த சிந்தனையுடன் கல்விக்கொடியின் நோக்கத்தை இணைத்து பார்க்க முடியும்.
பதிவாளர் டாக்டர் ரா. ராஜவேலு அவர்கள் கல்விக்கொடியை மறுவெளியிட்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர் கவிதாசன் அவர்கள் கல்விக்கொடியைப் பெற்றுக்கொண்டார். தமிழ் துறைத் தலைவர் பேராசிரியர் தங்கமணி அவர்களும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அனைவரும் முனைவர் ஜெ. கோமளலக்ஷ்மியின் கல்விக்கொடி முயற்சியைப் பாராட்டி, அதன் கல்வி மற்றும் சமூக நோக்கத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
கல்விக்கொடி – ஒரு கொடியைத் தாண்டிய கல்விச் சிந்தனை
“Education Flag for Viksit Bharat @2047 – கல்விக்கொடி” என்பது வெறும் அடையாளக் கொடி அல்ல. மாணவர்களின் சிந்தனையைத் தொடர்ந்து தூண்டும் ஒரு தொடர்ச்சியான காட்சி வழிக் கற்றல் தூண்டுதல் என்ற நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.
“காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்”
என்ற பாரதியின் தொலைநோக்குச் சிந்தனையையும்,
“முப்பது கோடி முகமுடையாள்,
உயிர்மொய்ம்புற ஒன்றுடையாள்”
என்ற ஒற்றுமைச் சிந்தனையையும் இன்றைய கல்வியுடன் இணைக்கும் குறியீடாக முனைவர் ஜெ. கோமளலட்சுமி உருவாக்கிய கல்விக்கொடி திகழ்கிறது.
அறிவு, நவீன தொழில்நுட்பம், நன்னெறி, இயற்கை வளப் பாதுகாப்பு, சமச்சீரான கல்வி, ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, KNOW → THINK → ACT → LIVE → CREATE → PRESERVE → CONTRIBUTE → TAKE ACCOUNTABILITY என்ற பயணத்தின் மூலம் விக்சித் பாரத்திற்கான மனித வளத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.
இக்கல்விக்கொடியை பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ஆர். ராஜவேலு அவர்கள் வெளியிட, முனைவர் கவிதாசன் மற்றும் முனைவர் தங்கமணி, தமிழ்த்துறைத் தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியோர் கல்விக்கொடியைப் பெற்றுக்கொண்டனர். பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அதன் கருத்து மற்றும் முக்கியத்துவத்தை வியந்து பாராட்டினர்.
பாரதியின் கனவை கல்வி, தொழில்நுட்பம், இயற்கைப் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் நன்னெறியுடன் இணைத்து, விக்சித் பாரத் மற்றும் விஸ்வகுரு இந்தியாவை உருவாக்கும் கல்வியின் அடையாளமாக கல்விக்கொடி திகழ்கிறது.

Leave a comment
Upload