தொடர்கள்
அனுபவம்
குரு & சிஷ்யனுக்கு ஒரு இசை அஞ்சலி - பால்கி


20260811114018294.jpeg

மும்பை செம்பூர்தமிழ் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைய்டி சிவஸ்வாமி ஆடிட்டோரியத்தில் , தமிழ் திரையுலகின் இரு மாபெரும் இமயங்களின் காலடித் தடங்களில், ஒரு 3 மணி நேரப் பொற்காலப் பயணம் செய்யப் போகிறோம் என்று ஆரம்பிக்கிறார் தொகுப்பாளர் புவனா வெங்கட்.

தமிழ் சினிமாவை ஸ்டுடியோவுக்குள் இருந்து கிராமத்து மண் வரை கொண்டு வந்த 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா ..

சாமானிய மனிதனையும் திரையின் சூப்பர் ஹீரோவாக்கிய 'திரைக்கதை திலகம்' கே. பாக்யராஜ் .

20260811114243152.jpeg

பாரதிராஜா கிராமத்து வாழ்வியலை எவ்வளவு துல்லியமாகப் படமாக்கினார் என்பதற்கு இந்த செந்தூரப்பூவே என்ற பாடல் ஒரு சாட்சி. ஒற்றை புல்லாங்குழல், மெதுவான கிராமத்து நடை... என கேமரா கோணங்கள் வழியாக உங்களை அப்படியே 70-களின் வயல்வெளிக்கே கூட்டிட்டுப் போயிருப்பார். அது ஒரு மௌனமான, ஆழமான கிராமத்து காதல் காட்சி!

அப்படியே நாணயத்தோட மறுபக்கத்தைத் திருப்பி, பாக்யராஜ் இயக்கிய 'அழகிய விழிகளில்...' பாடலைக் கேளுங்க. இங்கே கிராமத்து வயல்வெளிகள் மறைந்து, ரெட்ரோ நகரத்து வீதிகள் கண்ணுக்கு முன்னாடி வரும். ஒரு இயக்குனராக, நகரத்து இளைஞர்களின் சுட்டித்தனத்தையும், துள்ளலையும் இந்தச் சூழலில் கொண்டு வந்திருப்பார் பாக்யராஜ் .

இயக்குனர் பாரதிராஜா கிராமத்து மண்ணின் பின்னணியில் காதலைக் கவிதையாகக் காட்சிப்படுத்தினார்; இயக்குனர் பாக்யராஜோ நகரத்து இளைஞர்களின் சுறுசுறுப்பான பாணியில் காதலை நகைச்சுவையோடு நகர்த்தினார்!.

பாரதிராஜா தமிழ் சினிமா உலகில் முதலிலேயே என்ட்ரி கொடுத்திருந்தாலும் 1977ல் 16 வயதினிலே என்ற படத்தில் இருவரின் கூட்டு ஒரு வெற்றிக்கூட்டணியாய் ஆரம்பித்தது. அசிஸ்டன்ட் டைரக்டர், திரைக்கதை, வசனம், சிறிய காட்சியில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பாக்யராஜ் நடித்தது என படிப்படியாக முன்னேறி புதிய வார்ப்புகளில் சிஷ்யனுக்கு கதாநாயகன் அந்தஸ்த்து கொடுத்தது அவர்களின் நட்புக்கு ஒரு சிகரம்.

இந்த வகை நிகழ்ச்சிகளை தொடர்ந்து கொடுங்கள். மும்பை வாழ் தமிழ் ரசிகர்களுக்கு விருந்திடுங்கள் .

வீரபாண்டி திருச்சியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து, தனது கடின உழைப்பால் அந்த மேடைக்கு வந்த எளிய பின்னணி கொண்டவர்.

இசைஞானி இளையராஜாவின் குரலை ஒத்த காந்தக் குரல் இவருடைய தனிச்சிறப்பு. "இளையராஜாவின் குரலிலேயே பாடுகிறார்" என்று ரசிகர்களாலும் நடுவர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டார்.