
இரண்டு வாரங்களுக்கு முன்பு நாம் அறிவித்த கொலு போட்டியில் ஏராளமான வாசகர்கள் கலந்துக் கொண்டனர்.
தம் வீட்டில் வைத்த புகைப்படங்கள் , காணொலிகளை மெயில் அனுப்பி , நமக்கு அவற்றை நேரில் பார்க்கும் அனுபவத்துக்கு இணையான மகிழ்ச்சியைத் தந்தனர்.
அப்புகைப்படங்களில் இருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பது சுலபமான விஷயமாக இல்லை . மும்பையில் இருந்து எழுத்தாளர், நாடகக்கலைஞர் திருமதி. மீனலதா அவர்களும் விகடகவி சார்பில் திருமதி. பத்மினி ஜாசன் , திருமதி.சுபஸ்ரீ வேங்கடகிருஷ்ணன் அவர்களும் பரிசுக்கு உரியவர்களைத் தேர்ந்து எடுத்துள்ளனர்.
வழக்கத்தை விட கொலு போட்டியில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் , இம்முறை பரிசுகளையும் அதிகரித்து உள்ளோம்.
தேர்வுக்குழுவின் பரிந்துரைப்படி கீழ்கண்ட வாசகர்கள் பரிசுக்கு உரியவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்
முதல் பரிசு :
சாய் சுதா சந்திரமௌலி, காட்டுப்பாக்கம், சென்னை
இரண்டாம் பரிசுகள் - இருவர்
1.உமா தரணி ,பெங்களூரு
2. சாய்ராம் வெங்கடேசன், மடிப்பாக்கம் , சென்னை
மூன்றாம் பரிசுகள் - மூன்று பேர்
1. வித்யா மோகன் , மதுரை
2. உமா கிருஷ்ணன் , கும்பகோணம்
3.பவித்ரா நந்தகுமார், ஆரணி
ஆறுதல் பரிசுகள் :
1. ராஜேஸ்வரி பாஸ்கரன் - மயிலாடுதுறை
2.Dr .B .வெங்கட்ரமணி , பத்லாபூர் ,மஹாராஷ்டிரா
3.லாவண்யா வேலாயுதம் ,கூடுவாஞ்சேரி , சென்னை
4.ஜே. பூர்ணிமா , மடிப்பாக்கம் , சென்னை
5. சங்கீதா ரவிக்குமார் ஊட்டி
6. மைதிலி ஜெயராமன் , மகாலிங்கபுரம் , சென்னை
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள் .
அனைவருக்கும் விகடகவி சார்பில் பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்டன .முதல் , இரண்டு, மூன்றாம் பரிசுகளாக கேஸரோல்ஸ் , மூன்றாம் பரிசுகளாக விளக்குகளும் அனுப்பப்பட்டன.

தீபாவளிக்கு முன்பே நவராத்திரி பரிசுகள் வாசகர்களை அடைய வேண்டும் என்று நினைத்து பரிசுகளை அனுப்பி வைத்துள்ளோம் .
பரிசு பெற்றுக் கொண்டவர்கள் இதை தீபாவளி பரிசாக எண்ணி மகிழ்வதாக கூறுவது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது .
போட்டியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
நடுவர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றி
-விகடகவி ஆசிரியர் குழு

Leave a comment
Upload