
எண்பதுகளில் புதுக்கவிதை மிகவும் பிரபலம் ..புதுக்கவிதைக்கு அடி வரையறையோ வரி கட்டுப்பாடோ கிடையாது. புதுக்கவிதைக்கு அகராதியை தேட வேண்டிய அவசியம் இல்லை அனைவருக்கும் உடனடியாக பொருள் விளங்கும். புதுக்கவிதை புகழ் பாடாது. சமூக அவலங்களை சுருக்கமாக சொல்லும். உதாரணத்துக்கு சில கவிதைகள்.
லங்கணம் பரமஔஷதம்
அது எனக்கு ஓவர் டோஸாக கிடைக்கிறது.
நாங்கள் சூர்ப்பனகைகளாகவே இருக்க விரும்புகிறோம்.
இல்லையென்றால் எங்கள் மூக்கிற்கும் வைரம் வேண்டும்
சாப்பிட்டால் வருகின்ற ஏப்பம் போல
கண்கள் சந்தித்தால் வரவேண்டும் உண்மை காதல்.
மூவ் பண்ணுங்க மூவ் பண்ணுங்க !!
என்ற கண்டக்டர் பேச்சை நம்பி பக்கத்தில் இருந்த பெண்ணிடம் மூவ் பண்ணினால்,
முறைக்கிறாள் அவள் !
இப்படி எல்லாம் கூட புதுக்கவிதைகள் அந்த காலத்தில் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.
சில கவிஞர்களும் புதுக்கவிதை எழுதியிருக்கிறார்கள் சாம்பிளுக்கு சில இதோ :-
“நடந்தால் தடம் பதியும்
நீ படுத்திருந்தால்
உன் உடம்பு மட்டுமே பதியும் !!
எழுந்து நட,
உனக்கான விடியல்
தூரமில்லை”
- இது மேத்தா எழுதிய புது கவிதை.
|”சுதந்திரம் ..
அது ஒரு பறவை
அதை நீ
கூண்டில் அடைத்து வைத்தால்,
அது பாடுவதை நிறுத்தி விடும்.
அதை நீ
பறக்க விட்டால்
அது உன்னுடைய வானமாக
மாறிவிடும்”
- இது அப்துல் ரகுமான் எழுதியது.
“அம்மா
நீங்கள் எனக்குச்
சோறுட்டிய போது
நிலாவை காட்டினீர்கள் !
இப்போது
நான் நிலாவைப்
பார்க்கும்போதெல்லாம்
உங்கள் முகம் தான்
தெரிகிறது”
- - இது நா.முத்துக்குமார் எழுதியது.

Leave a comment
Upload