தொடர்கள்
கவர் ஸ்டோரி
பாம்பே மக்கள் தான் ரொம்ப பக்திமான்கள் - பால்கி

துணுக்கு ஸ்பெஷல்

20261023165025528.jpeg

1985ல் சர்ச்கேட் ஸ்டேஷன் இப்படித்தான் இருந்தது.

அன்றைய பாம்பே, இன்றைய மும்பை மேற்கு புறநகர் லோகல் ரயில்வே லைனின் சௌத் மும்பையின் முனை ரயில் நிலயம் இந்த சர்ச்கேட்.

இந்த இடத்தைப்பற்றி அதுவும் இந்த பில்டிங்க்கைப் பற்றி அன்று 1985ல் ஊருக்குப் பழயவர் சொன்ன விளக்கம் சுவையாக இருந்தது.

சம்பாஷணை இப்படி தான் போச்சு.

பாம்பே மக்கள் தான் ரொம்பவும் பக்திமான்கள் என்றார்.

எப்படி? என்று கேட்டேன், நான் ஊருக்கு புதுசு.

பாருங்களேன் நீங்களே?

அவ்ளோ பக்தி? எவ்வ்ளோ பக்தி இர்ந்தாக்கா சர்ச்சுக்குள்ள போனவங்க வெள்ளிக்கெழமை உள்ளே போனாக்கா திங்கக்கிழமைதான் அதிகம் வெளில வர்ராங்கன்னா பாத்துக்குங்களேன்.

கடைசி ஸ்டேஷன் இது.

இந்த சர்ச்கேட் பகுதியில் நிறைய அரசு மற்றும் இந்தியயாவின் பெரிய கம்பெனிகளின் அலுவலகங்கள் உண்டு. இந்த ஸ்டேஷனில் தினமும் பல லட்சங்களில் இறங்கி தத்தம் அலுவலகங்களுக்கு காலை வந்துவிட்டால் மாலை இதே ஸ்டேஷன் மூலம் அதே லட்சங்கள் திரும்புவார்கள். சனி ஞாயிறு என்றால் லீவு. அப்போது இந்த ஸ்டேஷனில் கும்பல் இருப்பதில்லை. மக்கள் நெரிசல் கிட்டத்தட்ட நில் தான்.

இதைப் பார்த்த ஊருக்குப் புதியவர் சர்ச்கேட்னு ஒரு தேவாலயம் இருக்கு. அதுல மக்கள் வெள்ளிக்கிழமை உள்ளப் போனாங்கன்னா திங்கக்கெழமைதான் வெளில வர்ராங்கனு....... இது புரிஞ்சு ... நானும் மெர்சலாயிட்டேன்.

நானும் அன்னைலேந்து தேடிட்டிருக்கேன் அந்த ஊருக்குப் பழசை.

அம்பேல் ஜூட்.